Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
அஜித் 60 அறிவிப்பு : ரேஸ் கதைக்களம்

[Image: NTLRG_20190730133549303795.jpg]

நடிகர் அஜித் நடித்து, இயக்குநர் வினோத் இயக்கி உள்ள ‛நேர் கொண்ட பார்வை' படம் ஆகஸ்டு 8ல் ரிலீசாகிறது. அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்திருக்கிறார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிக் கபூர் தயாரித்திருக்கிறார்.

இந்நிலையில், தயாரிப்பாளர் போனிக் கபூர், படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து, டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார். அதில், 'அஜித்தின் 60வது படத்தையும் நானே தயாரிக்கிறேன். மீண்டும் வினோத் இயக்குகிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது' என தெரிவித்திருக்கிறார்.

அஜித்தின் 60வது படத்துக்கு தற்காலிகமாக ஏ.கே.60 என பெயர் சூட்டி இருக்கின்றனர். 'இந்தப் படம் மோட்டார் சைக்கிள் ரேசை மையமாக வைத்து கதைப் பின்னப்பட்டிருக்கிறது. படத்தின் நாயகனாக நடிக்கும் நடிகர் அஜித், படத்தில் பைக் ரேஸ் ப்ரியர். ரேஸில் கலந்து கொள்வதுதான் வாழ்க்கை என வாழ்கிறவர். அவர் வாழ்வில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களைத் தொகுத்தே படம் எடுக்கப்படுகிறது' என படக் குழுவினர் தெரிவித்தனர்
first 5 lakhs viewed thread tamil
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 30-07-2019, 05:26 PM



Users browsing this thread: 4 Guest(s)