Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[color=var(--title-color)]தந்தையின் ’மறதி’; காரிலேயே இறந்த குழந்தைகள்!- அமெரிக்காவை உலுக்கிய சோகச் சம்பவம்[/color]

[color=var(--title-color)]இறந்த குழந்தைகளை மடியில் வைத்துக்கொண்டு அவரின் தாய் கதறி அழுத சம்பவம், காண்போர் மனத்தை உருக்கும் விதமாக இருந்தது.[/color]
[Image: vikatan%2F2019-07%2Ffba5e0e2-9168-4763-a...2Ccompress][color=var(--meta-color)]ஜுவான் - மரிசா[/color]
[color=var(--content-color)]அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ராக் லேண்ட் நகரைச் சேர்ந்தவர், 39 வயதான ஜுவான் ரோட்ரிக்ஸ் ( Juan Rodriguez). இவருக்கு, மரிசா (Marissa) என்ற மனைவி, 4 வயதில் ஒரு மகன், லூனா மற்றும் போனெக்ஸ் என்ற ஒரு வயதாகும் இரட்டைக் குழந்தைகள் இருந்தனர். வேலைக்குச் செல்லும் தம்பதியான இவர்கள், தினமும் தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பு மையத்தில் விட்டுவிட்டு வேலைக்குச் செல்வார்கள்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2F386ee697-1f1c-4802-9...2Ccompress]
குழந்தைகள் இருந்த கார்
[/color]
[color=var(--content-color)]ஜுவான், அங்குள்ள ஒரு மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தன் மூன்று குழந்தைகளையும் காரில் ஏற்றிக்கொண்டு சென்ற ஜுவான், 4 வயது மகனை ஒரு மையத்தில் விட்டுவிட்டு நேராக தன் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். தன் இரட்டைக் குழந்தைகள் காரின் பின் இருக்கையிலிருந்ததை மறந்துவிட்டார். பின்னர், பணி முடிந்த பிறகு எப்போதும்போல காரை எடுத்துக்கொண்டு வீட்டுக்குச் செல்லும் வழியில், எதேச்சையாகப் பின் இருக்கையைப் பார்த்த ஜுவானுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.[/color]

[color=var(--content-color)]பின் இருக்கையில் இருந்த 2 குழந்தைகளும் வாயில் நுரை தள்ளியபடி பேச்சுமூச்சு இல்லாமல் படுத்திருந்துள்ளன. அதைப் பார்த்ததும் பதறிய ஜுவான், உடனடியாக காவலர்களுக்கு போன் செய்து உதவி கேட்டுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள், குழந்தைகளைப் பரிசோதித்துவிட்டு, இருவரும் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நடந்த மருத்துவ சோதனையில், எட்டு மணி நேரமாகக் குழந்தைகள் காரில் இருந்ததால், அந்த வெப்பம் தாங்காமல் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2F3391dd8f-66f4-45d5-8...2Ccompress]
நீதிமன்றத்தில் கதறி அழும் ஜுனாவா
[/color]
[color=var(--content-color)]இதையடுத்து, குழந்தைகளின் தந்தையைக் காவலர்கள் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். விசாரணையில் பேசிய ஜுவான், “ நான் வேலைக்குச் செல்லும் முன்பு குழந்தைகளைப் பாதுகாப்பு மையத்தில் விட்டதாகவே தோன்றியது. முற்றிலும் வெறுமையாக உணருகிறேன். என் குழந்தைகள் இறந்துவிட்டன. நானே அவர்களைக் கொன்றுவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.


[color=var(--content-color)]ப்ரான்க்ஸ் (Bronx) குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜுவான் மீதான வழக்கு விசாரணை முடிந்த பிறகு, அவருக்கு ஒரு லட்சம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். சிறையிலிருந்து வெளியில் வந்த ஜுவானை அவரின் மனைவி மரிசா கண்ணீருடன் கட்டித்தழுவி அழுதார்.
[/color]
[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 30-07-2019, 05:19 PM



Users browsing this thread: 103 Guest(s)