30-07-2019, 05:16 PM
மாட்ரிட் அணியில் இந்திய வீராங்கனை
புதுடில்லி: பெங்களூருவை சேர்ந்த கால்பந்து வீராங்கவை பிரிஷிதி பாக்சி 25. முன்கள வீராங்கனையான இவர், கர்நாடக அணிக்காக ஜூனியர், சீனியர் போட்டிகளில் பங்கேற்றார். 2012ல் அமெரிக்கா சென்ற இவர் ஆக்லஹாமா சிட்டி, வடக்கு டெக்சாஸ் பல்கலை., அணிகளில் விளையாடினார்.
சமீபத்தில் பெண்களுக்கான இந்திய லீக் கால்பந்து தொடரில் பெங்களூரு யுனைடெட் அணியில் களமிறங்கினார். தற்போது ஸ்பெயின் கிளப் அணிக்காக விளையாட உள்ளார். பெண்களுக்கான தொடரில் ஸ்பெயினின் பிரைமரா டிவிசன் புரோ தொடர் பிரபலம் ஆனது.
இத்தொடரில் 2019–20 சீசனில் மாட்ரிட் கிளப் டி புட்பால் அணியில் விளையாட பிரிஷிதி பாக்சி ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்தியா சார்பில் ஸ்பெயின் உள்ளூர் கால்பந்து தொடரில் பங்கேற்கும் முதல் வீராங்கனை என்ற பெருமை இவருக்கு கிடைக்கவுள்ளது

first 5 lakhs viewed thread tamil