30-07-2019, 05:13 PM
புகாரில் சிக்கியவர் எப்படி பொதுமேலாளர்?
![[Image: Tamil_News_large_2332175.jpg]](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2332175.jpg)
சென்னை : முறைகேடு புகாரில் சிக்கியவரை பொது மேலாளராக நியமித்தது தொடர்பான வழக்கில், ஆவின் நிர்வாக இயக்குநர் பதில் அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் பொதுமேலாளராக ரவிச்சந்திரன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இது முறைகேடான பணி நியமனம். ரவிச்சந்திரன் முறைகேடு புகாரில் சிக்கியவர். அவரை ஆவின் நிர்வாகம் எப்படி நியமிக்கலாம் என்று ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அதில் வழக்கமாக மேலாளர் அல்லது துணை பொதுமேலாளர் நிலையில் உள்ளவர்கள் மட்டுமே பதவி உயர்வு பெற்று பொது மேலாளராக நியமிக்கப்படுவார்கள்.
ஆனால் ரவிச்சந்திரனின் நியமனம் அவ்வாறு நடைபெறவில்லை. மேலும் அவர் மீது முறைகேடு புகாரின் கீழ் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே அவரை பதவி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆவின் நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ரவிச்சந்திரனுக்கு பொதுமேலாளராக பொறுப்பு மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதற்கான உத்தரவை ஆவின் நிர்வாக இயக்குநர் தான் பிறப்பித்துள்ளதாகவும் பதிலளித்தார். இதைக் கேட்ட நீதிபதி, வழக்கு குறித்து ஆவின் நிர்வாக இயக்குநர் ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

first 5 lakhs viewed thread tamil

![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)