30-07-2019, 05:11 PM
எம்.எல்.ஏ., மீது பலாத்கார புகார் கொடுத்த பெண்ணை கொல்ல முயற்சி?
புதுடில்லி: உ.பி.,யில், பா.ஜ. எம்.எல்.ஏ. மீது இளம் பெண் அளித்த பாலியல் பலாத்கார வழக்கில் சி.பி.ஐ., விசாரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை லாரியை ஏற்றி கொல்ல சதி செய்ததாக பா.ஜ. எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில், உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த, பா.ஜ., - எம்.எல்.ஏ., குல்தீப் சிங் சென்கர் மற்றும் அவரது சகோதரர், ஆகியோர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, இளம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில், எம்.எல்.ஏ., குல்தீப் சிங் மீது, முதல் தகவல் அறிக்கை எனப்படும், எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு, சி.பி.ஐ., வசம் ஒப்படைக்கப்பட்டு மூன்று தனித்தனி வழக்குகளை, சி.பி.ஐ., அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர். எம்.எல்.ஏ., கடந்த ஆண்டு ஜூலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட இளம் பெண் தனது குடும்பத்தினருடன் காரில் சென்ற போது ரேபரேலி என்ற பகுதியில் விபத்தில் சிக்கியது. இதில் 2 பேர் பலியாயினர், இளம் பெண் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது விபத்து அல்ல, திட்டமிட்டு சரக்கு லாரியை ஏற்றி விபத்தை ஏற்படுத்தி இளம் பெண்ணை கொலை செய்ய பலாத்கார குற்றவாளியான பா.ஜ. எம்.எல்.ஏ, குல்தீப் சிங் சதி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து குல்தீப் சிங் உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

first 5 lakhs viewed thread tamil