Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
12-ம் வகுப்பு ஆங்கில பாட புத்தகம் தயாரிப்பு குழுவினர் மீது நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை அதிரடி


[Image: 201907271606360541_Action-on-12th-Class-...SECVPF.gif]

சென்னை,

பிளஸ்-2 ஆங்கில பாடபுத்தகத்தில் 142-ம் பக்கத்தில் மொழிகள் பற்றிய ஒரு பாடப்பிரிவு இடம்பெற்று இருந்தது. அதில் தமிழ் கி.மு.300 ஆண்டுகள் தொன்மையானது என்றும், அதைவிட சமஸ்கிருதம் கி.மு.2000 ஆண்டுகள் தொன்மையானது என்றும் சர்ச்சைக்குரிய கருத்து பதிவு செய்யப்பட்டு  இருக்கிறது. இந்த பதிவுக்கு தமிழ் ஆர்வலர்கள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர்.
சமஸ்கிருதத்துக்கு முக்கியத்தும் கொடுக்கும் தவறான பாடப்பகுதி நீக்கப்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து  இருந்தார். இந்த நிலையில், 12-ம் வகுப்பு ஆங்கில பாட புத்தகம் தயாரிப்பு குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், புத்தகத்தில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதியும் நீக்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை  கூறியுள்ளது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 29-07-2019, 05:10 PM



Users browsing this thread: 95 Guest(s)