28-07-2019, 07:27 PM
(This post was last modified: 12-08-2019, 05:39 PM by sagotharan. Edited 1 time in total. Edited 1 time in total.)
இடம்- சிவகங்கை சீமை
காலம்- ஆங்கிலேயர்களுக்கு எதிராக தமிழ் மன்னர்கள் கொதித்தெழுந்த நேரம்
வீரசோழியம். பாளையக்காரர்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்த வீரபத்ரன் எனும் நாகர் குலத்தின் மன்னனின் அரசாங்கம். ஆங்கிலேயர்களுடன் கூட்டுச் சேரவும், ஆங்கிலேயர்களின் கைகூலிகளும் பாளையக்காரர்களை வளைத்துப் போட்டுக் கொண்டிருந்தார்கள். வீரசோழியத்திற்கும் எட்டையப்ப சமஸ்தானத்திலிருந்து தூது வந்தது.
வீரசோழியத்தின் அரசனான வீரபத்ரனிடமே நேரடியாக பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதனால் அரச மந்திரிகளும், ராஜமந்திரிகளும் ஆலோசித்து, மன்னனின் அந்தப்புரத்திலிருந்து அழைத்தனர். பூஜையின் இடையே வந்த கரடிகள் என கொக்கரித்துக் கொண்டே அரசன் வந்தான். நேரான நெற்றி அதன் நடுவே நாகத்தின் சின்னம். காதுகள், கழுத்து, கைகள் என மின்னிய ஆபணங்கள், மேலுடையின்றி இடையில் மட்டும் பட்டு உடுத்தியிருந்தான். அந்தப்புரத்திலிருந்து வந்த வேளையிலும் இடையே வாளும், உடையோடு குறுவாளும் இருந்தது.

sagotharan