Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
சாகும் தருவாயிலும் தங்கையை காப்பாற்றிய 5 வயது சிறுமி

டமாஸ்கஸ்: சிரியாவில் வான்வழித் தாக்குதலில் சாகும் தருவாயிலும் கட்டடங்களுக்கு இடையே சிக்கிய தனது தங்கையை காப்பாற்றிய 5 வயது சிறுமி உயிரிழந்தார்.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியிலுள்ள இட்லிப் மாகாணத்தில் ரஷ்யாவும், சிரியாவும் கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் நேற்று முன்தினம் இட்லிப் மாகாணத்தில் நடந்த தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 10 பேர் பலியாகினர்.




[Image: Tamil_News_large_2329640.jpg]




இந்த தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின்மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கட்டடம் இடிந்து விழுந்தது. 5-வது தளத்தில் இருந்த சிறுமி நிஹாம் என்பவரின் தாய் அஸ்மா சம்பவ இடத்திலேயே பலியாயினர்.




காப்பாற்றிய சிறுமி

கட்டட இடிபாடுகளில் சிக்கி பாதி உடல் வெளியே தெரிய உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி ரிஹாம், கீழே விழ இருந்த, தனது 7 மாதமே ஆன தங்கை துகா-வின் சட்டையை கெட்டியாக பிடித்துக்கொண்டார். இதனால் அந்தக் குழந்தை கீழே விழாமல் உயிர் பிழைத்தது. மனைவியை பறிகொடுத்து, இரு குழந்தைகளும் உயிருக்குப் போராடுவதைக் கண்டும் காப்பாற்ற முடியாமல் கீழே நின்றபடி கதறி அழுதார் தந்தை. இந்தக்காட்சி ஊடகங்களில் வெளியாகி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.


[Image: gallerye_044716111_2329640.jpg]





சிறுமியால் காப்பாற்றப்பட்ட 7 மாத குழந்தை பலத்த காயங்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறது. ஆனால் உயிர்போகும் மரண அவஸ்தையிலும் தனது தங்கையை விழாமல் கெட்டியாக பிடித்து காப்பாற்றிய சிறுமி ரிஹாம், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 28-07-2019, 09:27 AM



Users browsing this thread: 106 Guest(s)