Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[color=var(--title-color)]பாட்டில் வீச்சு... உருட்டுக் கட்டை தாக்குதல்! - திருச்சியில் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்[/color]

[color=var(--title-color)]ரூட் தல” விவகாரத்தில் சென்னை கல்லூரி மாணவர்கள், பேருந்தில் அட்டகத்திகளுடன் செய்த கொலைவெறி தாக்குதல் சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், திருச்சியில் அடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.[/color]
[Image: vikatan%2F2019-07%2F3dae03d8-4072-428b-8...2Ccompress][color=var(--meta-color)]திருச்சி கல்லூரி மாணவர்கள் தாக்குதல்[/color]
[color=var(--content-color)]திருச்சியில் கல்லூரி மாணவர்கள் உருட்டுக்கட்டை, பாட்டில், கருங்கல் ஆகியவற்றால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட பயங்கர மோதலில் 15 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தீரன் நகர் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் கடந்த சில வாரங்களாகவே மாணவர்களுக்குள் சீனியர்- ஜூனியர் மோதல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2F0fec8567-d8ee-403e-a...2Ccompress]

[/color]
[color=var(--content-color)]இந்நிலையில் நேற்று மாலை கல்லூரி நுழைவாயில் அருகே இரு தரப்பு மாணவர்களும் உருட்டுக்கட்டை, கல் மற்றும் சோடா பாட்டில்களைக் கொண்டு திடீரென ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டார்கள். இந்த சம்பவம் திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே நடந்ததால், பேருந்துக்காகக் காத்திருந்த மாணவர்கள் மற்றும் பாதசாரிகள், பயந்து சிதறி ஓடினார்கள். இந்தக் கொலைவெறித் தாக்குதலில் 18 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தார்கள்.
மாணவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறை உதவி ஆணையர் மணிகண்டன் தலைமையிலான போலீஸார் விரைந்து வந்து, காயமடைந்த 15 மாணவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ரத்தவெள்ளத்தில் இருந்த மாணவர்கள் தற்போது திருச்சி தனியார் மருத்துவமனையில் மிகவும் ஆபத்தான சூழலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
[/color]
[color=var(--content-color)]இந்நிலையில் ஒருதரப்பு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்களைப் பிடித்து வந்து திருச்சி எடமலைப்பட்டி ஒரு காவல் நிலையத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், கல்லூரியில் படிக்கும் சீனியர் மற்றும் ஜூனியர் மாணவர்களுக்கும் கருத்து மோதல் இருந்து வருவதாகவும், வந்ததாகவும் அதை எடுத்து சீனியர் மாணவர்கள் விளையாடிய இடத்தில் உள்ள சிமெண்ட் பெஞ்சில் ஜூனியர் மாணவர்கள் அமர்ந்து இருந்ததாகவும் அப்போது ஏற்பட்ட வாக்குவாதமே மோதலாக மாறியதாகத் தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல், மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சிலர், மாணவிகளைக் கிண்டல் செய்ததாகவும், அதை இறுதியாண்டு மாணவர்கள் தட்டிக் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது.
[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2F35f01c5b-b81a-449a-8...2Ccompress]
திருச்சி கல்லூரி மாணவர்கள் தாக்குதல்
[/color]
[color=var(--content-color)]இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, அப்பகுதியே பரபரப்பானது. பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகியான ஒருவர் நடத்தி வரும் அந்த கல்லூரியில், அக்கட்சியின் தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள் வருகையால் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். அந்தக் கல்லூரி மாணவர்களுக்குள் நடந்த பயங்கர தாக்குதல் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 28-07-2019, 09:20 AM



Users browsing this thread: 105 Guest(s)