Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
வெப் சீரிஸில் காஜல் அகர்வால்

[Image: NTLRG_20190727150405205260.jpg]

சென்னை: வெங்கட் பிரபு இயக்கும் புதிய வெப் சீரிஸில் நடிகை காஜல் அகர்வால் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருப்பவர் நடிகை காஜல் அகர்வால். தற்போது கமலில் இந்தியன் 2வில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இது தவிர குயின் பட ரிமேக்கிலும் நடித்துள்ளார். ஜெயம் ரவியுடன் 'கோமாளி', தெலுங்கில் 'ரனரங்கம்' ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இந்த இரண்டு படங்களும் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகின்றன.

இந்நிலையில், காஜல் அகர்வால் வெப் சீரிஸில் நடிக்க இருப்பதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. 10 பகுதிகளைக் கொண்ட இந்த வெப் சிரீஸை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வெப் சீரிஸிற்குப் பிறகு தான் சிம்புவின் மாநாடு படத்தை வெங்கட் பிரபு தொடங்க திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

சமீபகாலமாக திரைப்படங்களைவிட வெப் சீரிஸ் மீது திரை பிரபலங்களின் கவனம் அதிகரித்து வருகிறது. சென்சார் பிரச்சினை இல்லாததால், தங்களது மனதில் நினைத்ததை அப்படியே திரையில் காட்சிகளாக்கும் சுதந்திரம் வெப் சீரிஸில் இருப்பதாலேயே அதற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 28-07-2019, 09:10 AM



Users browsing this thread: 13 Guest(s)