Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
சொந்த செலவில் ஜெருசலேம் செல்லும் ஆந்திர முதல்வர்

[Image: 201907271006472442_Jagan-Mohan-Reddy-Tra...SECVPF.gif]


ஜெகன்மோகன் ரெட்டி தனது சொந்த செலவில் இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம் நகருக்கு அடுத்த மாதம் செல்கிறார்.

ஜெகன்மோகன் ரெட்டியின் தந்தையான மறைந்த முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி குடும்பத்துடன் கிறிஸ்தவ மதத்துக்கு மாறினார்.

ஒவ்வொரு ஆண்டும் ராஜசேகர ரெட்டி குடும்பத்துடன் ஜெருசலேம் செல்வதை வழக்கமாக வைத்து இருந்தார். அதே போல் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் ஜெருசலேம் சென்று வருவார்.

தற்போது ஜெகன்மோகன் ரெட்டியும் தனது தந்தையின் பாணியை கடைபிடிக்கிறார். தேர்தலில் அபார வெற்றியை பெற்ற ஜெகன்மோகன்ரெட்டி வருகிற 1-ந் தேதி குடும்பத்துடன் ஐதராபாத்தில் இருந்து ஜெருசலேம் புறப்பட்டு செல்கிறார். அங்கு ஏசு பிறந்த இடமான பெத்தலகேமுக்கு செல்கிறார். அங்கு தேர்தலில் பெற்ற வெற்றிக்காக நன்றி தெரிவிக்கிறார். பின்னர் அவர் 5-ந்தேதி ஆந்திரா திரும்புகிறார்.

அதன் பின் ஜெகன்மோகன் ரெட்டி 15-ந்தேதி குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவரது இளைய மகள் வர்ஷாவை உயர் கல்வி படிப்பில் சேர்ப்பதற்காக செல்ல உள்ளார்.

[Image: 201907271006472442_1_Jaganmohan._L_styvpf.jpg]


மேலும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுடனாக சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

24- ந்தேதி அமெரிக்க பயணத்தை முடிந்து கொண்டு நாடு திரும்புகிறார். ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவி ஏற்ற பிறகு முதல் வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார்.

ஆனால் சொந்த வி‌ஷயமாக பயணம் மேற்கொள்வதால் அரசு செலவை ஏற்க மறுத்து தனது சொந்த செலவிலேயே செல்கிறார்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 27-07-2019, 05:11 PM



Users browsing this thread: 106 Guest(s)