27-07-2019, 12:20 PM
21.
சொல்லுறேன்! அதுக்கு முதல்ல, நீங்க என்னை நம்பனும்? ஒழுங்கா நடந்துக்கனும்? காலையில மாதிரி திமிரா நடந்துக்கக் கூடாது. சரியா?
அவன் தயங்கித் தயங்கி ஒத்துக் கொண்டான். நம்புறேன், ஆனா, உன்னை எப்படி நம்புறது? என்ன இருந்தாலும், அவ உன் அக்கா? அக்கா கணவர் ஹரீஸ்! அவிங்களுக்கு எதிரா நீ எதுக்கு இருக்கனும்???
ஹா ஹா! நல்ல கேள்விதான். சொல்றேன்.
இங்க பாருங்க, எனக்கு அக்கான்னு யாரும் கிடையாது. ஏன், எனக்கு அப்பா, அம்மா கூட கிடையாது. எங்க அம்மாவை ஏமாத்தி கல்யாணம் பண்ணிகிட்டவர் எங்க அப்பா. அதுக்கு என் சித்தியும் உடந்தை. அதுனால அவிங்களை பழிவாங்குறதுக்கான சான்சை பாத்திட்டு இருந்தேன். எப்படி எங்க அம்மா வாழ்க்கையை கெடுத்தாங்களோ, அதே மாதிரி அவங்க கண்ணு முன்னாடி அவங்க பொண்ணு வாழ்க்கையை சிதைக்கப் போறேன். அதுதான் அவங்களுக்கான என் தண்டனை. அதுனாலத்தான் இந்த விஷயத்துல உங்களுக்கு ஹெல்ப் பண்ண வந்தேன். இல்லாட்டி, உங்களைப் பத்தி நான் ஏன் கவலைப் படணும்?
யதேச்சையா, அவங்க மூணு பேரும் உங்களைப் பத்தி பேசிட்டிருந்ததை கேட்டேன். எப்படியாவது ஹரீஸ்கிட்ட சொல்லி, உங்களோட வண்டவாளத்தை எல்லாம் புரிய வெச்சதுக்கப்புறம், உங்களை தொரத்திட்டு, அவிங்களும் இங்க வர்ற மாதிரி ப்ளான் பண்ணியிருக்காங்க!
இப்பச் சொல்லுங்க, என்னை நம்புறீங்களா?
நான் சொல்லுவதில் பல விஷயம் அவன் ஏற்கனவே அறிந்திருந்ததுதான். தவிர, கல்யாணத்திற்குப் பின், நான், என் அப்பா அம்மாவை பிசினசில் இருந்து ஒதுக்கியதும் தெரியும். இவை எல்லாம் சேர்ந்து, அவனுக்கு என் மேல் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.
இது ஒருவகையான டெக்னிக். எதிரியையும், துரோகியையும் வெல்ல, அவனை முதலில் நம்ப வைக்க வேண்டும். அவன் புத்திசாலி, தனக்கு அதிகம் லாபம் என்று எண்ணிக் கொள்ளும் தோற்றத்தைத் தர வேண்டும்! அதற்கு வெறும் பொய்கள் சொல்லக் கூடாது. உண்மையும், பொய்யையும் கலந்து சொல்ல வேண்டும். கொஞ்சம் குழப்பத்திலும், பதட்டத்திலும் வைத்திருக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக கட்டுப்பாட்டிற்குள் வந்த பின், திருப்பி அடிக்க வேண்டும்! அப்படித்தான், மோகனும் என் கட்டுப்பாட்டிற்குள் வர ஆரம்பித்தான்.
ஒரு விதத்தில் இந்த சூழ்நிலையை நான் விரும்பினேன். எவ்வளவு திறமையானவனாக, சக்சஸ்ஃபுல் பிசினஸ்மேனாக நான் இருந்தாலும், பெற்ற தாய், தந்தை என முக்கிய உறவுகள் என்னை ஏமாற்றியதும், ஒரு பெண்ணாக இருந்தும் என் தாயை ஏமாற்ற என் சித்தி திட்டம் போட்டதும் என எல்லாம் சேர்ந்து எனக்கு உறவு சார்ந்த விஷயத்தில் ஒரு சில உளவியல் சிக்கல்களை ஏற்படுத்தியிருந்தது. ஒரு வேளை நான் எல்லாவற்றையும் மனதிற்குள்ளேயே வைத்துக் கொள்ளாமல், கொஞ்சம் யாரிடமாவது ஷேர் பண்ணியிருந்தால், எனக்குள் இந்த உளவியல் சிக்கல் வராமல் இருந்திருக்குமோ என்னமோ?!
ஆனால் நான் எல்லாவற்றையும் என்னுள்ளேயே வைத்துக் கொண்டதால், வெளியே திறமையானவனாக, தைரியமானவனாக இருந்தாலும், உள்ளுக்குள் முக்கிய உறவுகளிடத்தில் ஒரு தயக்கத்தை கொடுத்திருந்தது. அதுதான், என் அக்காவையே நான் நம்புவதற்கு அதிக காலத்தை எடுத்துக் கொண்டது! எல்லாவற்றுக்கும் மேலாக, அந்தத் தயக்கம்தான், அந்தத் தோல்வி பயம் தான், மிக முக்கியமான ஒரு விஷயத்தில் என்னைத் தோற்கடித்தது.
இந்த உளவியல் பிரச்சினையைத் தீர்க்க எனக்கு ஒரு அவுட்லெட் வேண்டும். அதற்கு என் மனதுள் குடைந்து கொண்டிருக்கும், என்னை, என் தந்தையும், சித்தியும் ஏமாற்றி விட்டார்களே என்கிற கோபம் தணிய வேண்டும்! என்னுடைய கோபத்தையும், அது கொடுத்துக் கொண்டிருக்கும் வன்மத்தையும் தீர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு நான் தேர்ந்தெடுத்திருக்கும் டார்கெட்டுகள்தான் ஹரீசின் சித்தப்பாவும், சித்தியும். இது ஒரு வகையில் என் அக்காவுக்கான சொல்யூஷன் மட்டுமல்ல. எனக்கான ட்ரீட்மெண்ட்டும் கூட.
ஆரம்பத்திலிருந்தே, ஹரீசின் சித்தப்பாவும் சித்தியும் ஏனோ, என் அப்பாவையும், சித்தியையும் ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அதுவும் முழுக் கதையையும் கேட்ட பின், அந்தத் துரோகமும், பெண்களை ஏமாற்றும் பேக்கிரவுண்டும், அதற்கு அமைதியாக ஒத்துழைக்கும் எனது சித்தியைப் போன்ற, ஹரீசின் சித்தியும், எல்லாம் சேர்ந்து முழுக்க அவர்களாகவே தோன்ற ஆரம்பித்துவிட்டனர்.
ஆகவே, இவர்களைப் பழிவாங்குவது ஒரு வகையில், எனக்கு மட்டுமே தெரிந்த, எனது உளவியல் சிக்கலுக்கான தீர்வாக இருக்கும் என்று தீர்மானமாக நம்பினேன். அதனால்தான், அவர்களுடைய பாதையிலேயே சென்று அவர்களை வேட்டையாட விரும்பினேன்.
என்னுடைய யோசனைகளை மோகனது குரல் இடைமறித்தது.
இப்ப கண்டிப்பா நம்புறேன் மதன். நீயும் நம்ம க்ரூப்புன்னு தெரிஞ்ச பின்னாடி எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா? இப்பதான் எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு!
சந்தோஷத்தில் பேசிய அவனது குரல் சொல்லியது, அவன் முழுதாக என்னை நம்ப ஆரம்பித்து விட்டதை!
அதை அதிகப்படுத்த, எனது தூண்டிலைப் போட்டேன்.
அதுக்குள்ள சந்தோஷப்படாதீங்க! சீக்கிரம் ஹரீஸ்கிட்ட விஷயத்தை சொல்ல டைம் பாக்குற அவங்ககிட்ட இருந்து எப்டி எஸ்கேப் ஆகப் போறீங்க? ம்ம்ம்?
எனது கேள்வியில் இருந்த உண்மை அவனுக்குப் புரிந்தது. ஆனால், அவனிடம் எந்த தீர்வும் இல்லாததால், குழம்புவது முகத்திலேயே தெரிந்தது. பின் நிமிர்ந்து என்னைப் பார்த்தான்.
நான் அவனைப் பார்த்து சிரித்தேன். அதன் அர்த்தம், தூண்டிலில், மீன் சிக்க ஆரம்பித்து விட்டது!
எ… என்ன பண்றது மதன்?
நான் சொல்றதை கேட்குறீங்களா?
ம்ம்.. கண்டிப்பா!
முதல்ல, ஏதாவது காரணத்தைச் சொல்லி உங்க மருமகளை ரெண்டு மூணு மாசத்துக்கு, அவங்க பொறந்த வீட்டுல இருக்க வைங்க. ஹரீஸ் இங்க இருந்து, மனைவி வேற இடத்துல தொடர்ந்து இருந்தா, சந்தேகம் வரும். அதுனால, ஹரீஸ் தொடர்ந்து ஒரு ரெண்டு மாசத்துக்கு, பிசினஸ் ட்ரிப்புல இருக்குறா மாதிரி ப்ளான் பண்ணுங்க.
அவன் குழப்பமாக கேட்டார். ஏன் இப்படி?
ஹரீஸும், உங்க மருமகளும் ஒண்ணா இருந்தா, ஏதாவது சமயத்துல உங்க ரகசியத்தைச் சொல்லிடலாம். அதுனால அதை முதல்ல உடைக்கனும். நீங்க ஆஃபிஸ்ல, மத்த இடங்கள்ல்ல இருக்கிற லூப் ஹோல்சை எல்லாம் அடைக்கப் பாருங்க. ஏன்னா, அவிங்க டிடக்டிவ் வெச்சாலும் வெக்கலாம். அதுலியும் கவனம் செலுத்தி, இங்கயும் கவனம் செலுத்துறது ஆகாத காரியம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா டாக்குமெண்ட்ல கை வெக்கலாம். என்ன சொல்றீங்க?
ம்ம்ம்.. சூப்பர் ஐடியா மதன்! நானே கொஞ்சம் தடுமாறிட்டேன். ஆனா, நீ, செம ஸ்ட்ராங்க்தான். அதுனாலத்தான் நீ இவ்ளோ பெரிய பிசினஸ்மேனா இருக்க!
நான் சிரித்தேன். சரி, முதல்ல நான் சொல்றதுக்கு ஏற்பாடு பண்ணுங்க. அடுத்த ஸ்டெப்ஸ் நான் அப்பப்ப சொல்றேன்.
அப்புறம் இன்னொரு விஷயம். இந்த விஷயம் வேற யாருக்கும் தெரியக் கூடாது. முக்கியமா அத்தைக்கு கூடத் தெரியக் கூடாது. ஓகே?
கண்டிப்பா மதன். நீ என்னை நம்பலாம்!
குட்.
சொன்ன படி, அடுத்த இரண்டு நாளில் அவன் அந்த முடிவைச் சொன்னான். பிசினஸ் ட்ரிப்பையும், ஜோசியத்தையும் கலந்து பொய் சொல்லி ஹரீசிடம் என் அக்கா பிறந்த வீட்டுக்கு செல்வது, அதாவது கொஞ்சம் பிரிந்திருப்பது ஜாதகப்படி நல்லது என்றும், அதே சமயம், மிக முக்கிய பிசினஸ் ட்ரிப்புகளில் இருப்பது கம்பெனிக்கும் நல்லது என்றும் சொன்னார்.
ஹரீஸ் அமைதியாக ஓகே சொன்னார். எனது கண்ணசைவில், அக்காவும், இந்தத் திட்டத்திற்கு ஓகே சொன்னாள்.
அடுத்த சில நாட்களில் அக்கா கிளம்பினாள். பின், ஹரீசின் ட்ரிப்பும் ஆரம்பமாகியது.
அடுத்து வந்த ஒரு வெள்ளிக்கிழமை மாலை, மோகன் என்னைத் தேடி ரூமுக்கு வந்தான்.
அப்புறம் மதன் ஃப்ரீயா?
ஃப்ரீதான் சொல்லுங்க?
நீ, ட்ரிங்ஸ் சாப்பிடுவியா?
எப்பியாவுதுதான். அதுவும் சோஷியல் ட்ரிங்கிங்தான்! ஏன் கேக்குறீங்க?
இல்ல, நம்ம வெற்றியை இன்னிக்கு செலிப்ரேட் பண்ணலாம்னுதான்! இன்னிக்கு பார்ட்டி நம்ம வீட்லியே! நானும், நீயும்தான். என்ன சொல்ற?
ஓகே! உங்களுக்கு கம்பெனி வேணா கொடுக்கறேன். பட், இதெல்லாம் வெற்றியா என்ன? இன்னும் செய்ய வேண்டியது எவ்ளவோ இருக்கு?!
உண்மைதான். ஆனாலும், ஒரு பெரிய பிரச்சினையை தடுத்தாச்சுல்ல? அதுக்காகவும், நம்மளுடைய பார்ட்னர்ஷிப்புக்காகவும்தான்.
அதுவும் சரிதான். சரி, நீங்க ஏற்பாடு பண்ணுங்க, நான் வர்றேன்.
இந்த ட்ரிங்ஸ் பார்ட்டியில், நடந்த உரையாடலைத்தான் நான் ஹரீசிடம் காட்டியிருந்தேன். (அதை நீங்களும் படித்திருப்பீர்கள்). இந்த வீடியோவை வைத்துதான் ஹரீசுக்கு உண்மையை புரிய வைத்திருந்தேன்.
இதே வீடியோவை வைத்துதான், இன்னொரு ஆளுக்கும், ஒரு உண்மையை புரிய வைத்திருந்தேன். அது மட்டுமில்லை. என்னுடைய ட்ரீட்மெண்ட்டையும் ஆரம்பித்திருந்தேன்.
அது யாரிடம் என்றால்…