Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
கே.ஆர். மார்க்கெட் கேர் ஆப் தீனா

[Image: 201907221717469628_K-R-Market-CO-Dheena-...MEDVPF.gif]
நடிகர்
பார்த்திபன்
நடிகை
ஸ்ரவியா
இயக்குனர்
சந்தோஷ்
இசை
அனுப்செலின்
ஓளிப்பதிவு
நாகேஷ் வி ஆச்சார்யா




கே.ஆர்.மார்க்கெட்டை தன் வசமாக்கிக் கொண்டு தாதாவாக இருக்கிறார் பார்த்திபன். இந்த மார்க்கெட்டுக்கு தாதாவாக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார் சரத் லோஹிதஸ்வா. ஜெயில் இருக்கும் இவர் மகன் வெளியே வந்தவுடன் பார்த்திபனுடன் சண்டை போட்டு மார்க்கெட்டை கைப்பற்ற நினைக்கிறார்.

பார்த்திபனை அழிக்க சரத்தின் மகன் ஜெயிலில் பலருடன் நட்பை ஏற்படுத்தி ஆள் சேர்க்கிறார். பார்த்திபனுக்கு வலது, இடது கைபோல் இரண்டு பேர் இருக்கிறார்கள். இவர்கள் ஒரே பெண்ணை காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இதனால் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்படுகிறது.

[Image: 201907221717469628_1_KRMarket-3._L_styvpf.jpg]
[size][font][size][font]

இந்நிலையில், சரத் லோஹிதஸ்வா பார்த்திபனை சண்டைக்கு அழைக்கிறார். இதை பார்த்திபன் எப்படி எதிர்கொண்டார்? கே.ஆர்.மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

கன்னட மொழியில் வெளியான தாதா இஸ் பேக் என்ற படம், தமிழில் கே.ஆர்.மார்க்கெட் கேர் ஆப் தீனா என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இதில் தாதாவாக நடித்திருக்கும் பார்த்திபன், தனக்கே உரிய பாணியில் கிண்டல், நக்கல், நையாண்டியுடன் கலக்கியிருக்கிறார்.

[/font][/size][/font][/size]
[Image: 201907221717469628_2_KRMarket-4._L_styvpf.jpg]
[size][font][size][font]

தாதா சீட்டை அடைய நினைக்கும் சரத் லோஹிதஸ்வாவின் வில்லத்தனம் சிறப்பு. அருண், அஜய், ஸ்ரவியா ஆகியோர் புதுமுக என்பதால், தங்களால் முடிந்தளவிற்கு நடிப்பு திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். 

தாதா கதையை மையமாக வைத்து பல திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அந்த வரிசையில் இப்படமும் பல திரைக்கதையின் சாயலுடன் இருக்கிறது. நாகேஷ்.வி.ஆச்சார்யாவின் கேமராவும், அனுப்செலின் - முஜிப் ரகுமான் இருவரும் இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

மொத்தத்தில் ‘கே.ஆர்.மார்க்கெட் கேர் ஆப் தீனா’ சுமாரான தாதா[/font][/size]
[/font][/size]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 27-07-2019, 11:30 AM



Users browsing this thread: 4 Guest(s)