screw driver ஸ்டோரீஸ்
"கொஞ்சம் சீக்கிரமா போங்கண்ணா.. ப்ளீஸ்..!!" டாக்ஸி ட்ரைவரிடம் சொன்ன மீரா, பிறகு அம்மாவிடம் திரும்பி,

"கொஞ்சநேரம் பொறுத்துக்கம்மா.. ஹாஸ்பிடல் இந்தா வந்துடும்..!!" என்றாள் ஆறுதலாக.

"இ..இல்லடி.. அ..அம்மா பொழைக்கமாட்டேன்..!!" நீலப்ரபா திணறலாக சொன்னாள்.

"ஐயோ.. ஏன்மா இப்படிலாம் பேசுற..??"

"எ..எனக்கு தெரிஞ்சு போச்சு..!! உ..உன்னை இப்படி விட்டுட்டு போறோமேன்னுதான்.. க..கவலையா இருக்கு..!!"

"அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா.. நீ கொஞ்ச நேரம் பேசாம இரு..!!"

"அ..அப்புறம்.. பேசவே முடியாதே..??"

"அம்மா.. ப்ளீஸ்..!! இப்படிலாம் பேசினா.. அப்புறம் நான் பயந்துடுவேன்..!!"

"அ..அம்மாவை மன்னிச்சிடும்மா..!! நீ படுற கஷ்டத்துக்குலாம் நாந்தான் காரணம்..!!"

"ஹையோ.. என்னம்மா நீ..??" மீராவுக்கு இப்போது அழுகை பீறிட்டது.

"நா..நான் செஞ்ச பாவம்லாம்.. உன்னை புடிச்சு ஆட்டுது..!!"

"இல்லம்மா.. உன்மேல எந்த தப்பும் இல்ல.. நீ எந்த பாவமும் பண்ணல.. நான்தான் பாவி..!! நான் செஞ்ச பாவந்தான்.. உன்னை இந்த மாதிரி ஆக்கிடுச்சு..!! நான்தான் பாவி.. நான்தான் பாவி..!!"

மீரா கண்ணீரோடு கதறியதெல்லாம் நீலப்ரபாவின் காதில் விழுந்த மாதிரியே தெரியவில்லை.. திரும்ப திரும்ப அதே வார்த்தைகளை சொல்லிக்கொண்டிருந்தாள்..!!

"அ..அம்மாவை மன்னிச்சிடும்மா..!! அ..அம்மாவை மன்னிச்சிடும்மா..!!" - அவைதான் நீலப்ரபா பேசிய கடைசி வார்த்தைகள்..!!

"அ..அம்மா.. அம்மா.. ப்ளீஸ்மா.. கண்ணை தொறந்து பாருமா..!! என்னை விட்டு போயிடாதம்மா.. ப்ளீஸ்மா.. எனக்கு உன்னை விட்டா வேற யாரும்மா இருக்காங்க..?? ப்ளீஸ்மா.. என்னை விட்டு போயிடாதம்மா..!!"

அம்மாவின் உயிர் பிரிந்தது தெரியாமல்.. அவளது கன்னத்தை தட்டி தட்டி.. அழுது அரற்றிக்கொண்டிருந்தாள் மீரா..!! நீலப்ரபா செய்த தவறினால்.. மீரா என்ற உயிர் பிறந்தது..!! மீரா செய்த தவறினால்.. நீலப்ரபா என்ற உயிர் பிரிந்தது..!!

மருத்துவமனைக்கு கொண்டு செல்கிற வழியிலேயே நீலப்ரபா இறந்து போனாள்..!! அன்றுதான்.. மீரா அசோக்கை சந்திக்க நேர்ந்த நாளிலிருந்து 47-ஆவது நாள்..!! அதன்பிறகான மூன்று நாட்கள்தான்.. மீராவுக்கு என்ன ஆனது என்று தெரியாமல்.. அசோக் தவித்து திரிந்த நாட்கள்..!!

அம்மா தன்னை விட்டுச்சென்ற நினைவுகள்.. மீராவின் தலைக்குள் உளி கொண்டு அடித்தாற்போல் இறங்க.. மூடியிருந்த அவளது கண்கள் மெல்ல சுருங்கியன.. முகம் இறுகியது.. உதடுகள் படபடவென துடித்தன.. அவற்றை பற்களால் அழுத்தி கடித்துக்கொண்டு.. மூச்சை ஒருமுறை ஆழமாக உள்ளிழுத்து வெளியேற்றி.. அலைபாய்கிற மனதை மீண்டும் தியானத்துக்குள் திருப்ப முயன்றாள்..!!

மனம் அவளுக்கு கட்டுப்பட மறுத்தது.. மொத்த நினைவுகளையும் கன்னாபின்னாவென்று படம் ஓட்டிக்காட்டிட விழைந்தது..!!

அம்மா தவறியதற்கு நான்காம் நாள் அசோக்குடன் செலவழித்த அந்த இரவின் நினைவு..!!

"ம்ஹூம்.. வீடு வேணாம்.. நோ வீடு.. வீடு எனக்கு புடிக்கல..!!" - போதையில் சுழல்கிற தலையுடன் மீரா.

"என்ன வெளையாடுறியா.. வீட்டுக்கு போகலனா உன்னை தேட மாட்டாங்க..??" - கவலை தோய்ந்த முகத்துடன் அசோக்.

"தேட மாட்டாங்க.. வீட்ல யாரும் இல்ல.. நான் மட்டுந்தான்..!!"

அசோக்கின் நினைவு வந்ததுமே.. பற்றி எரிகிற அவளுடைய இருதயத்தில்.. திடீரென தென்றல் வீசிட்ட மாதிரி ஒரு சிலிர்ப்பு..!! அவளையும் அறியாமல்.. அவளது உதடுகள்.. 'அசோக்..' என்று மெல்ல முனகின.!!

அதே இரவில்.. அந்த ஹோட்டல் அறையில்..

"என் மேல அன்பு காட்டுறதுக்கும் யாரும் இல்ல.. எனக்குன்னு யாருமே இல்லடா..!!" - ஏக்கமான குரலில் மீரா.

"நான் இருக்கேன்டா.. நான் இருக்கேன் உனக்கு..!!" - ஆறுதலான குரலில் அசோக்.

"இ..இல்ல.. நீ இருக்க மாட்ட.. போயிடுவ..!!"

"ஹையோ.. நான்தான் சொல்றேன்ல..?? சாகுற வரை உன்கூடவேதான் இருப்பேன்.. சத்தியம்..!! போதுமா..??"

'அசோக்.. என் அசோக்..!! எவ்வளவு நல்லவன் நீ..?? எவனோ ஒரு கொடியவன், நண்பர்களுடன் சவால் விட்டு என்னை சிதைத்தான் என்று.. உன்னை எந்த அளவிற்கு அலைக்கழித்தேன்..?? எப்படியெல்லாம் உன்னை அவமானப் படுத்தினேன்..?? எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு.. என் மீது உண்மையான காதலை பொழிந்தாயே..?? ஆண்கள் எல்லாம் அரவங்கள் என்றிருந்தவளை.. உனது அன்பின் முன்னால் தோற்றுப்போக வைத்தாயே..??'

'பாவி நான்.. உன்னோடு வாழ்கிற பாக்கியம் எனக்கு இல்லாமல் போனதே..!! அப்பழுக்கற்ற உன் நேசத்துக்கு.. சிறுகாணிக்கை என்று தருகிற அளவிற்கு.. அந்த கற்பும் கூட என்னிடம் இல்லாமல் போனதே..??'

அசோக்கின் நினைவில் மூழ்கியவளை.. அதற்குள்ளாகவே அந்த அரக்கனின் நினைவு வந்து இம்சித்தது..!!

"It's just matter of one rupee..!!" - கன்னத்தில் குழிவிழ அழகாக சிரித்தான் அவன்.

"உயிரை விட நான் உன்னை அதிகமா நேசிக்கிறேன்.. நீ இல்லன்னா நான் செத்துப் போயிடுவேன்..!!" - மனதுக்குள் மீண்டும் வந்த அசோக், ஏரிப்பாலத்தின் மீது நின்றவாறு சொன்னான். 

"உன் அழகை பாத்ததும்.. எனக்கு ஆசை வந்துடுச்சு.. என்னால கண்ட்ரோல் பண்ண முடியல.. It's just happened..!!" - அவன் 

"ஹையோ..!! நைட்டு என் ட்ரஸ் ஃபுல்லா நீ வாமிட் பண்ணிட்ட.. போதுமா..?? பயங்கர ஸ்மெல்.. அதோட எப்படி படுக்குறது.. அதான் அலசி காயப்போட்டுட்டு படுத்திருந்தேன்..!!" - இது அசோக்.

அவளது வெற்று முதுகில் முகம் தேய்க்கிற அந்த அரக்கன்..!! தரையில் ஜட்டியுடன் அப்பாவியாக படுத்திருக்கிற அசோக்..!!

"நீயும் உன் அம்மா பாக்குற பையனை கல்யாணம் பண்ணிக்கோ..!!" - எகத்தாளமாக சொன்னான் அவன்.

"நீ மருமகளா வர்றதுக்குத்தான்.. இந்த வீடு புண்ணியம் பண்ணிருக்கணும்..!! இதை நான் சொல்லல.. என் அம்மா சொன்னாங்க..!!" - ஒரு குழந்தையின் புன்னகையுடன் சொன்னான் அசோக்.

"உன் அம்மாவை உனக்கு பிடிக்குமா..??" - மீரா அசோக்கிடம் கேட்டாள்.

"பிடிக்கு...மாவா..?? ஹ்ஹ.. உலகத்துலயே எனக்கு ரொம்ப பிடிச்ச ஜீவன்.. என் அம்மாதான்..!! உனக்கு..??" - அசோக் திரும்ப கேட்டான்.

"ம்ம்.. எனக்கும் என் அம்மாவை ரொம்ப பிடிக்கும்..!!" - இறந்து போன அம்மாவை நினைத்தவாறே பதில் சொன்னாள்.

தியானத்துக்கு அடங்க மறுத்த மீராவின் மனது.. இப்போது தனது உச்சபட்ச அட்டகாசத்தை தொடங்கியிருந்தது..!! பலவித குழப்பமான எண்ணங்கள்.. குறுக்கும் மறுக்குமாக அவளது மூளைக்குள் ஓட.. அவளால் நிம்மதியாக யோகாவை தொடர முடியவில்லை..!! தலை விண்விண்ணென்று தெறிப்பது மாதிரி ஒரு உணர்வு..!! இதயம் தாறுமாறாக அடிக்க ஆரம்பிக்க.. அவளது முகம் அவஸ்தையில் துடித்தது..!! இமைகளை இறுக்கி கண்களை சுருக்கிக்கொண்டாள்..!! உள்ளுக்குள் எழுந்த உணர்வுகளை அடக்கமுடியாமல் பற்களை கடிக்க.. அவளது உதடுகள் படபடவென துடிக்க ஆரம்பித்தன..!!

"அ..அம்மாவை மன்னிச்சிடும்மா..!!" - நீலப்ரபா மீண்டும் மனதுக்குள் வந்து நின்றாள். அவளது மார்பில் கிடந்த அம்மா திடீரென அசோக்காக மாறி..

"எ..எனக்கு நீ வேணும் மீரா..!!" என்றான் உலர்ந்த குரலில்.

"இ..இல்லடா.. இல்ல..!! நான் உனக்கு வேணாம்.. இந்த அதிர்ஷ்டங்கெட்டவ உனக்கு வேணவே வேணாம் அசோக்..!!!" - மீரா அலறினாள்.

"இ..இல்ல.. நீ இருக்க மாட்ட.. போயிடுவ..!!" - போதையில் செருகிய விழிகளுடன் மீரா சொல்ல,

"சாகுற வரை உன்கூடவேதான் இருப்பேன்.. சத்தியம்..!! போதுமா..??" - அசோக் அவளை அணைத்துக்கொண்டான்.

"ப்ளீஸ்மா.. என்னை விட்டு போயிடாதம்மா..!!" - உயிரற்ற அம்மாவிடம் மீரா கெஞ்சினாள்.

"போகாதம்மா..!! பாப்பாக்கு பயமா இருக்குல..??" - ஐந்து வயது மீரா மீண்டும் கெஞ்சினாள்.

"போயிடாத மீரா.. போயிடாத..!!" - மடியில் கிடந்த அசோக் மயங்கிப்போகும்முன் மீராவை கெஞ்சினான்.

அவ்வளவுதான்..!! மீராவால் அதற்குமேலும் தாக்குப் பிடிக்க முடியவில்லை..!! மார்புகள் குபுக் குபுக்கென ஏறி இறங்க.. நுரையீரல் சர் சர்ரென காற்றை விழுங்கி வெளியேற்ற.. படக்கென விழிகளை திறந்தாள்.. திறந்ததுமே முணுக்கென்று கண்ணீர் துளிகள் இரண்டு விழிகளிலும் வெளிப்பட்டு கன்னம் நனைத்து ஓடின..!! உள்ளத்தில் எழுந்திட்ட குமுறலை ஒரு சில வினாடிகள் அடக்க முயன்றவள்.. பிறகு அந்த முயற்சியில் தோற்றுப்போனாள்..!! விசும்பலாக ஆரம்பித்து.. அப்புறம் உடைந்து போய் 'ஓஓஓ..'வென அழ ஆரம்பித்தாள்..!! அப்படியே நிலைகுலைந்து போய் தரையில் சரிந்தாள்..!!

பட்டுப்போன்ற மிருதுவான அவளது கன்னங்களில் ஒன்று தரையோடு அழுந்தி கிடக்க.. இரண்டு விழிகளும் இப்போது கண்ணீர் வெள்ளம் உடைப்பெடுத்து ஓட ஆரம்பிக்க.. அவளுடைய உதடுகள் மட்டும் மெலிதாக முணுமுணுத்தன..!!

"ஸாரிடா அசோக்.. ஸாரிடா..!!"

எவ்வளவு நேரம் அவ்வாறு அழுதுகொண்டே கிடந்தாளோ..!! தனது கண்ணீரால்.. தான் ஏற்படுத்திய குளத்திலேயே.. தனது கன்னம் அமிழ்ந்துபோய்.. அசையாமல் நெடுநேரம் கிடந்தாள்..!! ஜன்னல் வழியாக அறைக்குள் பாய்ந்த சூரிய கதிர்கள்.. அவளது முகத்தை சுட்டு உஷ்ணமாக்கியதை கூட கண்டுகொள்ளவில்லை அவள்..!!
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 27-07-2019, 11:03 AM



Users browsing this thread: 4 Guest(s)