27-07-2019, 11:00 AM
அந்த சரவெடி சம்பவத்துக்கு அப்புறம்.. அடுத்தவர்களிடம் நட்பு யாசகம் கேட்கிற வழக்கத்தை.. மீரா முற்றிலுமாக கைவிட்டுவிட்டாள்..!! 'யாராவது பேசினால்தான் நாமும் பேச வேண்டும்.. வலிய சென்று நாமாக பேசினால், வலியையே அனுபவிக்க நேரிடும்..' என்ற ஒரு கொடுமையான எண்ணத்தை.. அந்த பிஞ்சு வயதிலேயே நெஞ்சில் பதித்துக் கொண்டாள்..!!
அந்த தீபாவளிக்கு அடுத்த நாள்..
"ஹைய்ய்ய்.. டெடி பேர் (teddy bear)..!!!!"
கண்களில் பிரகாசமும், குரலில் உற்சாகமுமாக.. அம்மாவின் கையிலிருந்த அந்த கரடி பொம்மையை.. மீரா ஆவலாக வாங்கிக்கொண்டாள்..!!
"பொம்மை உனக்கு பிடிச்சிருக்கா சின்னு..??"
"ம்ம்ம்ம்... பிடிச்சிருக்கே.. ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.. ரொம்ம்ம்ப அழகா இருக்கு..!!" குட்டி மீரா முத்துப்பற்கள் தெரிய சிரித்தாள்.
"ம்ம்.. இனிமே இந்த பொம்மைதான் சின்னுக்குட்டியோட பிரண்டாம்.. சரியா..??"
"ஹைய்ய்ய்.. இந்த டெடி பேர் என் ஃப்ரண்டா..??" கேட்கும்போதே ஒரு பரவசம் மீராவின் முகத்தில் பொங்கியது.
"ஆ..ஆமாம்.. இதுதான் உன் பிரண்டு..!!" சொல்லும்போதே ஒரு துக்கம் நீலப்ரபாவின் நெஞ்சை அடைத்தது.
"ஹாய் டெடி ஃப்ரண்ட்.. ஹவ் ஆர் யூ..??" மீரா கவலை மறந்து குதுகலாமானாள்.
அம்மாவுக்கு அடுத்தபடியாக அந்த கரடி பொம்மையை மீராவுக்கு மிகவும் பிடித்துப் போனது..!! எங்கு சென்றாலும் தூக்கிக்கொண்டே அலைந்தாள்.. எதுவும் பதில் பேசாமல் அந்த பொம்மை புன்னகைத்துக்கொண்டே இருந்தாலும்.. இவள் அதனுடன் லொடலொடவென பேசிக்கொண்டே இருப்பாள்..!!
"இந்த ட்ரஸ் எனக்கு நல்லா இருக்கா டெடி பேர்.. பாப்பா அழக்கா இருக்கேனா..??"
"ஷேம் ஷேம் பப்பி ஷேம்.. ஹஹா.. ஹஹா..!!"
"வாக்கிங் போலாமா டெடி பேர்..?? வா.. வாக்கிங் போலாம்..!!"
"போ.. உன்கூட டூ.. பேசமாட்டேன் போ..!!"
"இது எக்ஸ்.. இது வொய்.. இது இஸட்.. தேட்ஸ் இட்..!!"
அதற்கு முத்தமிட்டாள்.. அதனுடன் சண்டையிட்டாள்.. சட்டை போட்டு விட்டாள்.. சாதம் ஊட்டி விட்டாள்.. மடியில் கிடத்தி தாலாட்டினாள்.. மார்பில் போட்டு கண்ணுறங்கினாள்..!!
முன்பெல்லாம் அம்மாவை கட்டிக்கொண்டுதான் தூங்குவாள்..!! தூங்கும் நேரம் மட்டுமல்ல.. எந்த நேரமும் அம்மாவின் பார்வை தன் மீது பதிந்திருக்க வேண்டும் என்று நினைப்பாள்..!! அம்மா அருகில் இல்லாத ஒவ்வொரு நொடியுமே.. ஒருவித பாதுகாப்பற்ற தன்மையை உணர்வாள்..!! அதுவும் இரவு நேரங்களில் கேட்கவே வேண்டாம்.. அந்த பயம் அதிகமாக அவளுக்குள் எழும்..!! மதுசூதனன் வீட்டுக்கு வருகிற அந்த வாரத்து ஒருநாளில்.. அம்மா இல்லாமல் தனித்திருக்க வேண்டிய சூழலில்.. தவித்து, மிரண்டு, துடித்துப் போவாள்..!!
"போகாதம்மா..!! பாப்பாக்கு பயமா இருக்குல..??" அம்மாவிடம் கெஞ்சுவாள்.
"ஹையோ.. அழக்கூடாது சின்னு..!! அப்பா வந்திருக்கார்ல.. அம்மா போய் கொஞ்ச நேரம் அப்பாட்ட பேசிட்டு வர்றேன்..!! நீ நல்லபுள்ளையா தூங்குவியாம்..!!"
"எனக்கு பயமா இருக்கும்.. தூக்கம் வராது..!!" மீரா பரிதாபமாக சொல்லிக்கொண்டிருக்கும்போதே,
"ஏய்..!!! இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க அங்க..??" அடுத்த அறையில் இருந்து மதுசூதனனின் குரல் பொறுமையில்லாமல் ஒலிக்கும்.
"ஆங்.. இதோ வந்துட்டேன்..!!" இங்கிருந்தே அவருக்கு பதில் சொல்கிற நீலப்ரபா,
"படுத்துக்கோடா செல்லம்.. அம்மா இதோ அஞ்சு நிமிஷத்துல வந்துடுறேன்..!!" என்று மீராவை சமாதானம் செய்து, படுக்கையில் கிடத்திவிட்டு செல்வாள்.
அப்புறம் அவள் 'சின்னூ..' என்று ஒருவித பதைபதைப்புடன் அறைக்கு திரும்ப.. குறைந்தது அரைமணி நேரமாவது ஆகும்..!! அதுவரை மீரா தனிமையில் அழுது கொண்டே கிடப்பாள்..!! கழுத்துவரை இழுத்து போர்த்திய போர்வையுடன்.. 'திக் திக் திக்' என்று அடித்துக்கொள்கிற இதயத்துடன்.. அறையில் இருக்கிற ஒவ்வொரு பொருளையும் மிரட்சியாக பார்த்துக்கொண்டே.. அந்த அரைமணிநேரத்தை கழிப்பாள்..!!
அப்புறம் அந்த கரடி பொம்மை வந்தபிறகும்.. அம்மா அப்பாவிடம் பேசிவருகிறேன் என்று கிளம்புகையில்.. 'போகாதம்மா..!!' என்று கெஞ்சத்தான் செய்வாள்..!! ஆனால் அவள் போனபிறகு.. முன்புபோல் பயந்து மிரண்டுகொண்டு இராமல்..
"அம்மா ரொம்ப சேட்டை டெடி பேர்.. பாப்பாக்கு பயமா இருக்குல.. பாப்பா பாவம்ல..?? நாம அம்மாகூட டூ விட்ருவோம்.. அம்மாகூட டூ.. சரியா..?? அம்மாகூட டூ சொல்லு..!!"
என்று கண்களில் நீருடனே கரடி பொம்மையுடன் வளவளவென்று பேசிக்கொண்டிருப்பாள்.. அது அவளுக்கு ஒரு ஆறுதலை தரும்..!!
பத்தாம் வகுப்பு படிக்கிற வரைகூட.. கரடி பொம்மையுடன் கதையடிக்கிற அவளது வழக்கம் தொடர்ந்தது..!! கல்லூரி சென்றபிறகுதான் அந்தப்பழக்கம் அவளை விட்டு மறைந்தது..!! கல்லூரியிலும் கூட அவளுக்கு நல்ல நட்பு எதுவும் அமையவில்லை.. அவளுடைய இயல்பான குணமும் அதற்கு மிக முக்கிய காரணம்..!!
சிறுவயதில் சரவெடி போன்ற சம்பவங்கள் என்றால்.. கல்லூரி பருவத்தில் வேறுமாதிரியான வேதனை தரும் நிகழ்வுகள்..!!
"மச்சீ.. யார்டா அவ.. செம்ம்மையா இருக்கா..??"
"யாரு..??"
"அதோ.. அந்த ப்ளூ சுடி..!!"
"ஹ்ஹ.. அவளா..?? அவ நம்ம ஆந்த்ரா அம்மாயி.. சித்தூரு சிட்டுக்குருவி..!!"
"என்னது..??"
"கொல்ட்டி பொண்ணுடா.. எங்க ஏரியாதான்..!!"
"ஓ.. உன் ஏரியாதானா.. தேட்ஸ் இன்ட்ரஸ்டிங்..!!!"
"இதுல என்ன இன்ட்ரஸ்டிங்..??"
"அவளை பத்தி சொல்லு மச்சி.. கேட்போம்..!! அவ ஆள் எப்டி..??"
"ப்ச்.. அவளை விடுறா.. அவ ஒரு வேஸ்ட் பீஸ்..!! அவ அம்மாவை பத்தி சொல்றேன்.. அதுதான் செம்ம இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்..!!"
கல்லூரியில் உடன்படிக்கிறவர்கள் விடுகிற கமெண்ட்கள்.. காதுகளில் ஈயத்தை காய்ச்சி ஊற்றுவது போல இருக்கும் மீராவுக்கு..!! மனதுக்குள்ளேயே அமைதியாக அழுபவள்.. வீட்டுக்கு சென்று அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டு, வேதனையுடன் கேட்பாள்..!!
"பேசாம.. என்னை கருவுலேயே அழிச்சிருக்கலாமேமா.. உனக்கும் பிரச்சினை இருந்திருக்காது.. எனக்கும் பிரச்சினை இருந்திருக்காது..!!"
இந்த மாதிரி சம்பவங்களால்தானோ என்னவோ.. மீராவின் மனதில் ஒரு ஏக்கம் எப்போதும் இருக்கும்..!! 'யாராவது தன்னுடன் நட்பாக பேச மாட்டார்களா.. தன்னிடம் இருக்கிற நிறைகளை மனதார பாராட்ட மாட்டார்களா.. குறைகளை உரிமையாக சாட மாட்டார்களா..' என்பது மாதிரியான ஒரு ஏக்கம்..!! நட்புக்கான அவளது ஏக்கத்தினால்தானோ என்னவோ.. நயவஞ்சகமாக ஒருவன் விரித்த வலையில்.. மிக எளிதாக சிக்கிக்கொண்டாள்.. தன் தாயைப் போலவே..!!
மீரா இப்போது கைகால்களையும், உடலையும் திருப்பி.. வேறொரு ஆசன நிலைக்கு மாறியிருந்தாள்.. ஆனால்.. அவளுடைய ஆழ்மனத்தை ஏனோ அவள் விரும்பிய திசையில் திருப்ப முடியவில்லை.. ஒருமுகப்படுத்த இயலவில்லை.. அது இன்னும் பழைய சம்பவங்களையே திரும்ப திரும்ப அசைபோட்டு.. இப்போது கேள்வி கேட்கவும் ஆரம்பித்திருந்தது..!!
'எப்படி ஏமாந்தாய்..?? எத்தனை முறை சொல்லியிருப்பாள் அம்மா..?? வயதுக்கு வந்த நாள் முதலே.. வாய் சலிக்காமல் அதையேதானே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப்பாள்..?? அப்படி இருந்தும் எப்படி ஏமாந்தாய்..??'
"பரிவா பேசுற ஆம்பளையும்.. படமெடுத்து ஆடுற பாம்பும் ஒன்னுதாண்டி மகளே..!! பாக்குறதுக்கு அழகா இருக்கும்.. பக்கத்துல போனா.. அத்தனையும் விஷம்..!!"
'கேட்டாயா நீ..?? தனது அனுபவத்தை இதைவிட எப்படி உறைக்கிற மாதிரி சொல்லமுடியும்..?? அதை ஏன் உன்னால் அதை புரிந்து கொள்ள முடியவில்லை..??'
"நடந்து போற பாதைல.. நல்லபாம்புக நெறைய நெளியும்.. எப்படா காலை சுத்தலாம்னு காத்திருக்கும்.. நாமதான் கவனமா போகணும்.. புரியுதா..??"
'இல்லையே.. புரிந்துகொள்ளவில்லையே நீ.. புரிந்துகொண்டிருந்தால் இப்படி ஒரு இழிநிலைக்கு உள்ளாகியிருப்பாயா..?? பாம்பை கையிலள்ளி மாலையாக சூடிக்கொண்டாயே மடச்சிறுக்கி..?? அப்படி என்ன இருக்கிறதென்று அவனிடம் மயங்கினாய்..?? வெளுத்த தோலா.. கருத்த மீசையா..?? அகண்ட நெற்றியா.. திரண்ட புஜமா..?? கன்னத்தில் குழிவிழுமே.. அந்த அழகு சிரிப்பா..?? கண்பார்த்து பேச தடுமாறுவாயே.. அந்த வசீகர பார்வையா..?? எதைக்கண்டு மயங்கினாய்..??'

first 5 lakhs viewed thread tamil