screw driver ஸ்டோரீஸ்
பரிதவிப்புடன் பலமைல்கள் பயணப்பட்டு வந்த நீலப்ரபாவுக்கு.. பலத்த அதிர்ச்சியே சென்னையில் காத்திருந்தது..!! மதுசூதனனுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை வேறு இருக்கிற உண்மையை.. அவனே அவளிடம் தெரிவித்தான்..!! நீலப்ரபாவுடன் பழகியது ஒரு பொழுதுபோக்கு என்பது மாதிரி சொன்னான்..!!

"ஏதோ கொஞ்ச நாள் பழகுனோம்.. ஜாலியா இருந்தோம்.. சந்தோஷமா இருந்துச்சு..!! அதை அப்படியே மறக்காம.. பையை தூக்கிட்டு மெட்ராஸ்க்கு வந்துட்டியே..??"

நீலப்ரபா பக்கென அதிர்ந்து போனாள்.. ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்ற உண்மை புரிய, அப்படியே வெகுண்டெழுந்தாள்.. வெறுப்பும், சீற்றமுமாய் அவனை கேள்வி கேட்டாள்.. விவாதித்தாள்.. சண்டையிட்டாள்..!! இறுதியாக அவனுடைய சட்டையை பற்றி இவள் உலுக்க.. இப்போது அவன் பொறுமை இழந்து போனான்.. புறங்கையை வீசி, 'ரப்ப்ப்' என இவள் கன்னத்தில் ஒரு அறை விட்டான்..!! பயணக்களைப்பிலும், பசிமயக்கத்திலும் இருந்த நீலப்ரபா.. 'பொத்'தென தரையில் சுருண்டு விழுந்தாள்..!!

சிகரெட் எடுத்து பற்ற வைத்துக்கொண்ட மதுசூதனன்.. புகை ஊதியவாறே தரையில் வீழ்ந்திருந்த அவளுடைய மேனியை வெறித்துக் கொண்டிருந்தான்..!! செப்புச்சிலை மாதிரியான அவளுடைய கட்டழகில்.. அவனுக்கு எப்போதுமே ஒரு தனி கிறக்கம் உண்டு..!! ஆரம்பத்தில் அவளை அடித்து துரத்தி விடுகிற எண்ணத்தில் இருந்தவனை.. அவளது உடல் வனப்பும், நிர்க்கதியற்ற அவளுடைய நிலையும், கொஞ்சம் குற்ற உணர்ச்சியும் சேர்ந்து.. வேறுவிதமாக யோசிக்க வைத்தன..!!

சிறிது நேரம் கழித்து.. உடலில் கொஞ்சம் வலு சேகரித்துக்கொண்டு நீலப்ரபா மெல்ல எழ.. அவ்வளவு நேரம் மனதில் யோசித்துக் கொண்டிருந்த அந்த திட்டத்தை.. மதுசூதனன் அவளிடம் சொன்னான்..!!

"இங்க பாரு நீலு.. உன்னால என்னை ஒன்னும் புடுங்க முடியாது.. மொதல்ல அதை நல்லா புரிஞ்சுக்கோ..!! உன்னை யார்னே எனக்கு தெரியாதுன்னு சொன்னா.. உன்னால என்னை என்ன பண்ண முடியும்..?? யோசிச்சு பாரு..!!"

".............................."

"ஹ்ம்ம்... உன் நல்லதுக்காகத்தான் சொல்றேன்.. ஒத்துக்குறதும் ஒத்துக்காததும் உன் இஷ்டம்..!!"

".............................."

"சிந்தாதிரிப்பேட்டைல எனக்கு ஒரு வீடு இருக்கு.. இப்போதைக்கு ஆள் யாரும் தங்காம காலியாத்தான் இருக்கு..!! உனக்கு விருப்பம் இருந்தா நீ அங்க தங்கிக்கோ.. உனக்கு எந்த பிரச்சினையும் இல்லாம நான் பாத்துக்குறேன்..!! புருஷன் பொண்டாட்டி மாதிரிதான்.. ஆனா தாலி மட்டும் இல்ல.. அவ்வளவுதான்..!!"

'கட்டிக்க முடியாது.. வேணும்னா வச்சுக்குறேன்..' என்பதை சற்று நாகரிமாக சொன்னான் மதுசூதனன்..!! அவன் சொன்ன வார்த்தைகள் நீலப்ரபாவின் நெஞ்சை சுருக்கென தைக்க.. அவனது முகத்தை ஏறிட்டு எரித்து விடுவது போல முறைத்தாள்..!! அவளுக்கு அப்போது வந்த ஆத்திரத்திற்கு.. அவனையும் வெட்டி சாய்த்துவிட்டு, தானும் உயிரை மாய்த்துக் கொள்ளலாமா என்று கூட ஒரு எண்ணம் ஓடியது..!! ஆனால்.. வயிற்றில் இருக்கிற கருவின் ஞாபகம் வந்ததும்.. அவளது கொதிப்பு கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கியது..!!

மேஜை மீது இருந்த அந்த வெண்கல சிலையையே வெறித்துப் பார்த்துக் கொண்டு வெகுநேரம் அமர்ந்திருந்தாள்..!! பச்சிளம் குழந்தையை மடியில் கிடத்தி.. பால் புகட்டுகிற ஒரு மலைஜாதித்தாயின் சிலை..!!

அந்த சிலையில் இருந்து பார்வையை மெல்ல விலக்கிக்கொண்டவள்.. கொஞ்சமாய் மேடிட்டிருந்த தனது வயிறை ஒருமுறை தடவிப்பார்த்தாள்..!! பிறகு.. மதுசூதனனை ஏறிட்டு.. கண்ணீரில் மிதக்கிற கண்களுடனும்.. முற்றிலும் ஜீவன் வற்றிப்போன குரலுடனும்.. மூக்கு விசும்ப சொன்னாள்..!!

"ம்ம்..!!"

மதுசூதனனின் முகத்தில் ஒரு திருப்திப் புன்னகை.. டெலிபோன் எடுத்து டயல் செய்து.. தனது கார் ட்ரைவரை வரவழைத்தான்..!!

கட்டிய மனைவி மீது பற்றில்லாத மதுசூதனனுக்கோ.. படுக்கைக்கு ஓர் ஆள் தேவைப்பட்டது..!! கருவிலிருக்கும் சிசு மீது பரிவு கொண்ட நீலப்ரபாவுக்கோ.. பாதுகாப்புக்கு ஓர் ஆள் தேவைப்பட்டது..!! இருவரும் அந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்தனர்.. இருவரும் அந்த ஒப்பத்தந்துக்கு இறுதி வரை உண்மையாகவே இருந்தனர்.. இருவரும் ஒருவருடைய தேவையை அடுத்தவர், எந்தக்குறையும் இல்லாமல் இறுதிவரை நிறைவேற்றவே செய்தனர்..!!

கருப்பையில் இருந்து வெளியே வந்த மீராவுக்குத்தான்.. அவளுடைய பிறப்பில் இருந்தே.. அந்த ஒப்பந்தம் ஒவ்வொரு நாளும் துயரத்தை தந்தது.. ஒருவித துர்ப்பாக்கியமான நிலைக்கு அவளுடைய வாழ்வை தள்ளியது..!! மீரா எவ்வளவு பெரிய துரதிர்ஷ்டசாலி என்பதற்கு.. அவளது பிறப்பு சான்றிதழே.. மிக சிறப்பான சான்று..!!

"அப்பா பேர் என்னங்க..??" மீராவை முதன்முதலாய் கையில் ஏந்திய அந்த நர்ஸ், பிறகு பதிவேட்டை ஏந்திக்கொண்டு கேட்டதற்கு,

"மாணிக்கவாசகம்..!!" சிறு உறுத்தல் கூட இல்லாமல், மிக இயல்பாக சொன்னான் மதுசூதனன்.

அப்படித்தான்.. அந்த மாதிரிதான்.. மீரா பிறக்கையிலேயே.. துயரமும் அவளுடன் சேர்ந்து பிறந்தது.. பிறகு வாழ்நாள் முழுக்க அவளை துரத்தி துரத்தி அடித்தது..!! சமுதாயத்தில் ஒரு அங்கீகாரம் இல்லாமல்.. அவள் அனுபவித்த வேதனையின் வீரியம் அவளுக்கு மட்டுமே புரியும்..!!

"பேசாம.. என்னை கருவுலேயே அழிச்சிருக்கலாமேமா.. உனக்கும் பிரச்சினை இருந்திருக்காது.. எனக்கும் பிரச்சினை இருந்திருக்காது..!!"

அதே அம்மாவின் மடியில்.. பருவ வயதடைந்திருந்த அதே மீரா படுத்துக்கொண்டு.. விழிகளில் நீருடனும், குரலில் வேதனையுடனும்.. இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு சொன்னது.. இப்போது யோகாவிலிருக்கிறவளின் மனதை குறுக்கிட்டது..!!

சிறுவயதில் மகள் கேட்கிற கேள்விக்கெல்லாம்.. ஏதாவது சமாதானம் சொல்லி அவள் வாயை அடைத்து விடுகிற நீலப்ரபா.. இப்போது வயதும், அறிவும் வளர்ந்த மகளின் வேதனையான வார்த்தைகளுக்கு.. தான் வாயடைத்துப் போய் அமர்ந்திருந்தாள்..!! குற்ற உணர்வு அவளை பிய்த்து தின்ன.. முணுக்கென்று கண்ணீர் மட்டும் சிந்தினாள்..!!

"அ..அம்மாவை மன்னிச்சிடும்மா..!!"

நீலப்ரபாவின் குரல் திடீரென காதுக்குள் ஒலிக்க.. தியானத்தில் இருந்த மீராவிடம் ஒரு சிறு அசைவு.. அவள் நெற்றியில் மெலிதான சுருக்கம்..!! அம்மாவுடைய ஓலம் அவளுடைய மனதை பிசைந்து ஏதோ செய்தது..!!

"அம்மா..!!" என்று மெலிதாக முனகினாள்.

பிறந்தது முதலே மீராவுக்கு அம்மாதான் எல்லாமே..!! வாரம் ஒருமுறை வீட்டுக்கு வருகிற.. அப்படி வருகிறபோதும் இரண்டு வார்த்தைகளுக்கு மேல் எதுவும் பேசாத அப்பாவின் மீது.. அவளுக்கு அவ்வளவாக ஒட்டுதல் இல்லை..!! அதுவும்.. அவளுக்கு சற்று விவரம் தெரிந்து, அவள் பள்ளி பயிலுகிற காலத்தில் ஒருநாள்..

"அவகிட்ட தெளிவா சொல்லி வையி.. அங்க போயி நான்தான் அவ அப்பான்னு உளறி கிளறி வைக்கப்போறா..!!"

அறைக்குள் அம்மாவிடம் அப்பா சொன்னது.. இவள் காதில் விழ நேர்ந்தது..!! அந்த வார்த்தைகளை கேட்டு அவள் எந்த மாதிரி துடித்துப் போயிருப்பாள் என்பதை.. என்னாலோ, உங்களாலோ எளிதில் புரிந்து கொள்ள முடியாது..!! அதன்பிறகு.. அப்பா மீதிருந்த கொஞ்சநஞ்ச அன்பும் அவளிடம் சுத்தமாக காணாமல் போனது..!!

அம்மாவுக்கும், அப்பாவுக்கும் இடையிலான அந்த ஒப்பந்தத்தால்.. மீரா இழந்தது சமூக அங்கீகாரத்தை மட்டும் அல்ல.. அதனுடன் தொடர்புடைய நிறைய விஷயங்களை.. சின்ன சின்ன சந்தோஷங்களை.. குறிப்பாக.. விலைமதிப்பற்ற குழந்தைப்பருவ குதுகலங்களை..!!

கடந்த ஒருவருடமாகத்தான் மீராவிடம் மனதளவில் பெரிதளவிலான மாற்றம்..!! ஏற்கனவே வலுவற்றிருந்த அவளது வாழ்க்கையை.. சம்மட்டியால் அடித்து நொறுக்கிய அந்த சம்பவத்தின் பிறகேதான்.. மீராவிடம் நிறைய மாற்றங்கள்..!! தைரியமும், துணிச்சலும், நெஞ்சுரமும்.. அதேநேரம் மனதில் தீராத்துயரமும் கொண்ட பெண்ணாக மாறிப்போனாள்..!!

அதற்கு முன்பெல்லாம்.. மீரா ஒரு அப்பாவி.. யாரிடமும் அதிர்ந்து பேச மாட்டாள்..!! அதிர்ந்தென்ன.. யாரிடமும் பேசவே மாட்டாள் என்றே கூட வைத்துக் கொள்ளலாம்..!! அந்த அளவிற்கு.. யாரிடமும் நட்பு கொள்ளாத.. தனித்து திரிகிற ஒருத்தி..!! அதுவும் அவளுடைய சிறு வயதில்..

"நானும் வெளையாட வரவா..??" ஏழு வயது மீரா மிக ஏக்கமாக கேட்டாள்.

தீபாவளியும் அதுவுமாய்.. பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு சிறுவர்களிடம்தான், அவள் அவ்வாறு கேட்டது..!! அவள் அந்தமாதிரி அந்த சிறுவர்களிடம்.. அடிக்கடி வெட்கத்தை விட்டு நட்பு யாசகம் கேட்பது வழக்கமான ஒன்றுதான்..!! அதே மாதிரி.. அந்த சிறுவர்கள் இவளை திட்டுவதும், குச்சியால் அடித்து விரட்டுவதும், கல் எடுத்து எறிவதுமே வழக்கமான ஒன்றுதான்..!! அந்த சிறுவர்களின் அம்மாக்கள் நீலப்ரபா மீது கொண்டிருந்த ஒரு காரணமற்ற வெறுப்பை.. அப்படியே அந்த சிறுவர்களுக்கும் மீரா மீதான வெறுப்பாக உள்ளீடு செய்திருந்தனர்..!!

எப்போதும் குச்சி.. அல்லது சிறிய கல்..!! அன்று.. தீபாவளி ஸ்பெஷல்.. திரி கொளுத்திய சரவெடியை தூக்கி மீராவின் மீது போட்டார்கள்..!!! மேலே விழுந்த சரவெடி.. 'பட்.. பட்.. பட்..' என்று வெப்பமாக வெடித்து சிதற.. துள்ளித்துடித்து பதறிப்போன மீராக்குட்டி.. முதுகுப்புறம் கைவைத்து தட்டிவிட்டவாறே..

"அம்மாஆஆஆஆ..!!!!!" என்று கதறிக்கொண்டு வீட்டுக்கு ஓடினாள்.

"பட்.. பட்.. பட்.. பட்.. பட்..!!!"

யோகாவிலிருக்கும் மீராவின் செவிப்பறைகளில் இப்போது அந்த சரவெடி வெடித்து.. அந்த நினைவு இப்போதும் அவளை துன்புறுத்தியது..!! வீட்டுக்குள் ஓடிவந்து, அன்று முழுதும் அம்மாவின் மடியை கட்டிக்கொண்டு, 'ஒஒஒஒ' என அழுது கண்ணீர் சிந்தியது நினைவுக்கு வந்தது..!! மீராவுடைய இமைகள் இன்னும் மூடியிருக்க.. மனதுக்குள் மட்டும் ஒரு ஆதங்கம் பொங்கியது.. 'ஹ்ஹாஆஆ..' என்று வேதனை கலந்த ஒரு வெப்ப மூச்சினை வெளிப்படுத்தினாள்.. அவளுடைய மார்புகள் வேறு விம்மி விம்மி நிமிர்ந்தன..!!
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: screw driver ஸ்டோரீஸ் - by johnypowas - 27-07-2019, 10:59 AM



Users browsing this thread: 6 Guest(s)