நீ by முகிலன்
நீ -59

சூரியன் மேற்கில் சாய்ந்து கொண்டிருந்த நேரம்..! நான் கட்டிலில் படுத்து டிவி பார்த்துக் கொண்டிருந்த போது.. ஜன்னலில் நிழலாடியது. ஜன்னலைப் பார்த்தேன்..!
மூர்த்தி..!! மேகலாவின் கணவன்..!!
”என்ன பண்றீங்க..?” என்று லேசான சிரிப்புடன் கேட்டார்.
”சும்மாதான்..” நானும் சிரித்தேன். ”ப்ரீயாத்தான இருக்கீங்க..?”
”ம். ப்ரீதான்…” கட்டிலில் இருந்து  எழுந்து  உட்கார்ந்தேன்.
”இருங்க.. வரேன்..” என்றவர் அடுத்த நிமிடம் சந்துக்குள் புகுந்து..என் வீட்டுக்கு வந்தார்.

”வாங்க..” எழுந்து.. சேரை எடுத்து போட்டேன் ”உக்காருங்க..” 
”வீட்ல பயங்கர போர்ப்பா..” என்றுவிட்டு உட்கார்ந்தார். அவர் கண்கள் லேசான போதையில் மிதந்து கொண்டிருந்தது.
”சினிமா.. கினிமா.. போலாமே..” என்றேன். 
” அது.. அதவிட போர்..” என்று சிரித்தார் ”அப்றம் கல்யாண வேலையெல்லாம் எப்படி போய்ட்டிருக்கு..?” 
”ம்..ம்..! போகுதுங்க…! எனக்கு அலைச்சல் இல்ல..” 
”எல்லாருக்கும் இப்படி அமையாது..! இதான் நேரம்ங்கறது..!!”
”ம்..ம்..!!” 
”இந்த… நகை..பணம்… இதெல்லாம்..?” என்று ஆர்வமாகப் பார்த்தார்.
” இல்ல… அதெல்லாம் பேசலைங்க..”
” அவங்களும் சொல்லலையா..?”
” ம்.. அவங்களே பண்ணுவாங்க..! ஒரே பொண்ணு..!” 
”வசதி.. இருக்கில்ல…?” 
”ம்..ம் .! ஓரளவு வசதிதான்..”

பின்னர் லேசான தயக்கத்துக்குப் பின் மெல்லக் கேட்டார்.
”வரீங்களா.. வெளில போலாம்.?”
”எங்க…?” 
” லைட்டா… ஒரு.. கட்டிங்.. போட்டுட்டு.. வரலாம்..”

எனக்கும் போகலாமென்றே தோன்றியது. 
”ம்.. போலாம்..” என்றேன்.

உடனே எழுந்து விட்டார். 
”ஒரு நிமிசம்.. வீட்ல ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்தர்றேன்..” என்று வெளியே போனார்.

என் மனதில் லேசான ஒரு கவலை வந்தது..! என்னுடன் என்றால்.. மேகலா என்ன நினைப்பாள்..?? என்ன நினைத்தால்தான் என்ன… என்று எண்ணியபடி.. எழுந்து டிவியை அணைத்து விட்டு புறப்பட ஆயத்தமானேன்..!
நான் உடை மாற்றி.. கண்ணாடி முன்னால் நின்று தலைவாறும் போது.. மூர்த்தி வந்து விட்டார்.
”போலாம்..!!” என்று சிரித்தார்.

” ஆ..! ஒரு நிமிசம்..” என்று ஜன்னலைச் சாத்தினேன். நாங்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேற.. கஸ்தூரி ஓடிவந்தாள்.
”அப்பா… உன்ன அம்மா கூப்பிடுது..”
”எதுக்கு…?” 
”தெரியலே.. உன்ன கூப்பிட சொல்லுச்சு.. அவ்வளவுதான்..”
”உங்கோத்தாக்காரி.. இருக்காளே..” என்று சலித்துக் கொண்டவர் ”ஒரு நிமிசம் இருங்க.. வந்தர்றேன்..” என்று அவர் வீட்டுக்குப் போனார்.

அங்கேயே நின்றுவிட்ட கஸ்தூரி என்னைப் பார்த்துக் கேட்டாள்.
”அண்ணா.. எங்க போறீங்க..?” 
”நா.. ஸ்டேண்டுக்கு.. கஸ்தூ..”
”எங்கப்பா…?” 
” சும்மா… வரேன்னாரு..”
”ஆ.. பொய் சொல்றீங்க…” என்று சிரித்தாள். 
”அட.. இல்ல..! நீ வேனா.. உங்கப்பாவையே கேட்டுப்பாரு..”
”க்கும்…”

  போன வேகத்திலேயே திரும்பி வந்து விட்டார் மூர்த்தி. கஸ்தூரியிடம்..
”நீ.. போ தங்கம்மா..!!” என்றுவிட்டு.. என்னிடம் ”நடங்க போலாம்..” என்றார்.

கஸ்தூரி.. ஓடிவிட்டாள். நாங்கள் இருவரும் தெருவுக்கு போக.. 
”இந்த பொம்பளைங்களே.. ஆகாதுப்பா..!” என்றார். 
”ஏங்க… என்னாச்சு..?” என்று புன்னகையுடன் கேட்டேன். 
”பின்ன என்னப்பா.. ஒரு மனுஷன் வீட்டுக்குள்ளயே அடஞ்சு கெடக்க முடியுமா..? அங்க போகாத… இங்க எதுக்கு போறேனு.. எதையாவது கேட்டு.. வம்பிழுத்து… மனுஷன் நிம்மதியவே கெடுக்கற புத்தி.. அவளுகளுக்கு ” என்றார்.

நான் வாய் விட்டுச் சிரித்தேன். இந்த நிலை கூடிய விரைவில் எனக்கும் வரலாம் என்றுதான் தோன்றியது.!! 
☉ ☉ ☉ 
காலை..!! நான் தூங்கி எழுந்த சமயம்… பின்பக்கம் துணி துவைக்கும்.. ”தப்.. தப்..” சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
ஒரு வகையில் அந்தச் சத்தம் என் தூக்கத்துக்கு இடைஞ்சலாகக் கூட இருந்தது. பாத்ரூம் போய் முகம் கழுவி வந்து ஜன்னலைத் திறந்தேன். மேகலா..!!
நான் ஜன்னல் திறக்க.. அவள்  என்னைப் பார்த்தாள். நான் புன்னகை காட்டினேன். அவள் புன்னகைக்கவில்லை.  என்னைப் பார்த்தவுடன்.. ஒழுங்கற்று இருந்த… தன் ஈர உடைகளை சரி செய்தாள்..! நான் எதுவும் பேசாமல்.. அவளைப் பார்த்துக் கொண்டு அமைதியாக நின்றேன்..! சில நிமிடங்கள் கழித்து…நிமிர்ந்து என்னைப் பார்த்தாள். இடது பக்கத்தில் கண்ணை மறைத்த முடிக் கற்றையை இழுத்து காதோரம் சொருகினாள். அவள் இடுப்பின் மடிப்பு பளீரென வெட்டி மறைந்தது.
”எப்படி இருக்கீங்க..?” என்று கேட்டாள்.
”ம்..” என்றேன் ”நீங்க..?”
”இருக்கேன்..” என்று விட்டு.. இடுப்புச் சேலையை இழுத்துச் சொருகிக் கொண்டு.. பக்கெட்டில் முக்கி… துவைத்த துணிகளை அலசினாள்.

அவளின் கணத்த தனங்களை முடிந்தவரை… மூடி மறைத்திருந்தாள். அபபடியும்.. அவளது செழிப்பான  அங்கம்… என் பார்வையில் படத்தான் செய்தது.!! அதுவும் குனிந்த வாக்கில் தெரிந்த.. அவளது பருத்த மார்புகளும்.. இடுப்பு சதையும்  என்னை தொந்தரவு செய்தது..!
துணிகளை அலசிப் பிழிந்து விட்டு நிமிர்ந்து நின்று.. என்னை சைடில் பார்த்துக் கேட்டாள்.
”ஏற்பாடெல்லாம் பலமா.. இருக்குது போலருக்கு..?”
”ஏற்பாடா…?” புரியாமல் கேட்டேன்.
”ம்..ம்..” 
”என்ன.. ஏற்பாடு…?” 
”கல்யாண.. ஏற்பாடு..”

"ஹோ.." புன்னகைத்தேன்..!
மெல்ல. ”என்னையெல்லாம் மறந்துட்டிங்க…” என்றாள். 
”நானா…?”
” வேற.. யாராம்..? இவள்ளாம் நமக்கு யாரு… இவள்ட்ட எதுக்கு சொல்லனும்னு நெனச்சிட்டிங்க..? அந்தளவு நான் ஆகாதவளா போயிட்டேன்..?” என்றாள்.
”சே.. சே..! என்னங்க… உங்களப் போயி….”
”தெரியும்…” ஒரு மாதிரி கலங்கிய குரலில் சொன்னாள் ”அன்னிக்கு நான்.. உங்கள திட்டிட்டேன்.. அந்த கோபம்தான்..! அதனாலதான் ஒரு வார்த்தை கூட.. சொல்லாம…” என்றாள்.
” இ.. இல்ல… அ..அது…”
”பரவால்ல… நல்லாருங்க…” எனறு விட்டு அலசிய துணிகளை எடுத்து காலி பக்கெட்டில் போட்டு எடுத்துக் கொண்டு உடனே அந்த இடத்தை விட்டுப் போய்விட்டாள்..!

எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது. ஆனால் அவள் சொல்வது போல… அவளை நான் கோபிக்கவில்லை. அவள்தான் என்னிடம் கோபம் கொண்டிருந்தாள்..! மேலும் சில நிமிடங்கள் அங்கேயே நின்றேன். அவள் வரவே இல்லை. நான் குளித்து விட்டு வந்து பார்த்த போதும் அவள் என் கண்ணில் தென்படவே இல்லை..!!
திருமண வேலையாக வெளியே போய்விட்டு… மதியத்திற்கு மேல்தான் வீடு திரும்பினேன். நான் ஓய்வாகக் கட்டிலில் படுத்திருந்த போது.. ஜன்னல் அருகே.. வளையல் ஓசை கேட்டது. ஜன்னலைப் பார்த்தேன்.
மேகலா ”ரெஸ்ட் போலருக்கு..?” என்று கேட்டாள். 
”ம்..” சிரித்து ” வெளில போய்ட்டு.. இப்பத்தான் வந்தேன்..”

ஜன்னல் பக்கத்தில் வந்து நின்றாள். தலைவாரி.. புடவை மாற்றி.. எங்கோ வெளியில் கிளம்பியிருந்தாள்.! அவள் கையில் ஒரு பிளாஸ்டிக் கூடை இருந்தது.
எழுந்தேன் ”கெளம்பிட்டாப்ல இருக்கு..?”
”ம்.. மார்க்கெட்…” 
”தனியாவா..?” ஜன்னல் அருகே போய் நின்றேன். என்னை முறைத்துப் பார்த்தாள். நான் சிரித்து..
”ஓ… ஸாரி..! நா.. வேற எந்த அர்த்தத்துலயும் கேக்கல…” என்றேன்.
”ஏன்… பேசமாட்டிங்க…? பேசுங்க.. பேசுங்க..!!” என்றாள் வேறு பக்கம் பார்த்துக் கொண்டு.
”ஸாரி… ஸாரி…!!”

எதுவும் பேசாமல் அமைதியாக நின்றாள். 
நான் மெல்ல.. ” என்மேல நெறைய கோபமிருக்கும்..?” என்றேன். 
உடனே ”உங்க மேல கோபப்பட.. எனக்கென்ன உரிமை இருக்கு..?” என்றாள். 
”சே..சே..! அப்படி பேசாதிங்க .! தபபெல்லாம் என்னோடதுதான்..!”

என்னை உற்றுப் பார்த்தாள். அவள் கண்களைப் பார்த்து.. அவளது உணர்ச்சி என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அந்தக் கண்களில்.. என்மீது அவளுக்கு ஏதோ இருக்கிறது என்பது தெரிந்தது. சட்டென.. மார்பகம் விம்ம. . பெருமூச்சு விட்டாள்..!
நான் மெல்லச் சொன்னேன். 
” நீங்க நெனைக்கற மாதிரி.. எனக்கெல்லாம் உங்க மேல ஒரு கோபமும் இல்ல..! நீங்கதான் என்கூட பேசாம இருந்தீங்க.. அதான் என் கல்யாண விசயத்த உங்ககிட்ட.. சொல்ல முடியல..! அதுக்காக என்னை மன்னிச்சிருங்க..! ஆனா நீங்க நெனக்கற மாதிரி… நான் நெனைக்கல..”

  என்ன நினைத்தாளோ… சட்டென அவள் கண்கள் கலங்கி விட்டன..! உடனே.. முந்தானையால் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
”வேண்டாம்..! அதப்பத்தி எதுவும் பேச வேண்டாம்..!” என்றாள். 
”சரி.. பேசல..! ஆனா.. என்னையும் புரிஞ்சுக்கோங்க.. மேகலா..! அன்னிக்கு.. நான்.. அப்படி… வேனும்னே திட்டம் போட்டெல்லாம் எதும் பண்ணல..! எதிர் பாக்காம.. திடிர்னு… ஆனா என் தப்புதான்..!"
” பரவால்ல…” முனகினாள் ” என்கிட்ட நீங்க என்ன மாதிரி எண்ணத்துல பழகுனீங்கனு.. எனக்கு தெரியாது..! ஆனா நான் சத்தியமா.. அந்த மாதிரி ஒரு எண்ணத்துல பழகவே இல்ல..!
உங்கள ஒரு பிரெண்டு மாதிரி நெனச்சுத்தான் பழகினேன்..!! ஆனா… அது…இப்படி.. தப்பா போகும்னு நான் நெனைக்கவே இல்ல…” மேலும் ஏதோ பேச விரும்பியது போலத் தெரிந்தது.. ஆனால் பேசவில்லை..!!
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
நீ by முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:27 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:28 PM
RE: நீ முகிலன் - by Renjith - 06-02-2019, 02:52 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:18 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:32 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:34 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:37 PM
RE: நீ முகிலன் - by Renjith - 11-02-2019, 10:28 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 15-02-2019, 11:02 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 16-02-2019, 03:34 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 19-02-2019, 06:25 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 21-02-2019, 12:18 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 24-02-2019, 12:42 PM
RE: நீ by முகிலன் - by Diipak_ - 14-03-2019, 01:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 31-03-2019, 11:43 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 10:30 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 03:19 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 12-04-2019, 04:59 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 22-07-2019, 03:37 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 27-07-2019, 10:53 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 29-07-2019, 09:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 25-08-2019, 07:01 AM



Users browsing this thread: