27-07-2019, 10:09 AM
அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி : ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் மேலும் 2 நடிகைகள்
வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன் நடிக்கின்றனர். ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நந்தினி கதாபாத்திரத்துக்கு ஐஸ்வர்யாராய், பழுவேட்டரையர் வேடத்துக்கு சத்யராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் தற்போது அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதை ஐஸ்வர்யாராய் உறுதிப்படுத்தி உள்ளார். இந்த படத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது என்று அவர் கூறினார். படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் இறுதி பட்டியல் தெரியவரும். கதையில் 60-க்கும் மேற்பட்ட முக்கிய கதாபாத்திரங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பொன்னியின் செல்வன் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. ரூ.800 கோடி செலவில் இரண்டு பாகங்களாக இந்த படத்தை எடுக்கின்றனர். பாகுபலியை மிஞ்சும் கிராபிக்ஸ் காட்சிகளை புகுத்தவும் திட்டமிட்டு உள்ளனர்.
மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் பட நிறுவனமும் லைகா புரொடக்ஷனும் இணைந்து இந்த படத்தை தயாரிப்பதாக கூறப்படுகிறது.

first 5 lakhs viewed thread tamil