Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
டியர் காம்ரேட்

[Image: 201907262321380112_Dear-Comrade-review-i...MEDVPF.gif]
நடிகர்
விஜய் தேவரகொண்டா
நடிகை
ராஷ்மிகா மந்தனா
இயக்குனர்
பாரத் கம்மா
இசை
ஜஸ்டின் பிரபாகரன்
ஓளிப்பதிவு
சுஜித் சராங்க்






தூத்துக்குடியில் வசித்து வருகிறார் நாயகன் விஜய் தேவரகொண்டா. இவரது தாத்தா சாருஹாசன் காம்ரேட்டாக இருக்கிறார். காம்ரேட் என்றால் எதற்கும் அஞ்சாமல், போராடுபவர்கள் என்று அர்த்தம். இந்த கொள்கையை பின்பற்றி கல்லூரியில் படிக்கும் விஜய் தேவரகொண்டா மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை எதிர்த்து போராடி வருகிறார்.

இந்நிலையில், ஒரு திருமணத்தில் கலந்துக் கொள்ள சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வருகிறார் நாயகி ராஷ்மிகா. இவருடன் பழகும் விஜய் தேவரகொண்டாவுக்கு அவர் மீது காதல் ஏற்படுகிறது. திருமணம் முடிந்து சென்னைக்கு செல்லும் நிலையில், ராஷ்மிகாவிடம் தன்னுடைய காதலை சொல்லுகிறார் விஜய் தேவரகொண்டா. ஆனால், ராஷ்மிகா விஜய்யின் காதலை ஏற்க மறுத்துவிடுகிறார்.

[Image: 201907262321380112_1_dear-4._L_styvpf.jpg]


நாளடைவில் விஜய்யின் காதலை ஏற்றுக் கொள்கிறார் ராஷ்மிகா. வாழ்க்கை அழகாக சென்று கொண்டிருக்கும் நேரத்தில் எம்.எல்.ஏ. தம்பியுடன் விஜய்க்கு பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சனையில் விஜய்க்கு பெரியளவில் பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் இந்த விஷயத்தில் ராஷ்மிகாவும் விஜய்யுடன் காதலை முறித்துக் கொள்கிறார்.

அதே வேளையில் கிரிக்கெட்டில் தேசிய லெவலுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் ராஷ்மிகாவிற்கும் ஒரு பிரச்சனை ஏற்படுகிறது.

இறுதியில் விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் காதலில் இணைந்தார்களா? ராஷ்மிகாவின் பிரச்சனை என்ன? எப்படி சமாளித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

[Image: 201907262321380112_2_dear-1._L_styvpf.jpg]


விஜய் தேவரகொண்டா ஏற்கனவே அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம், நோட்டா ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். தற்போது காம்ரேட் ஆக நடித்து அசத்தி இருக்கிறார். இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். 

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா எண்டிரி ஆகும் காட்சிகளுக்கு ரசிகர்களின் விசில் சத்தம் காதை கிழிக்கிறது. இருவருக்குமான காதல், ரொமான்ஸ் கெமிஸ்டிரி சூப்பராக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. சின்ன சின்ன விஷயங்களில் கூட கவனத்தை ஈர்த்திருக்கிறார் ராஷ்மிகா.

[Image: 201907262321380112_3_dear-2._L_styvpf.jpg]


முதல் பாதி காமெடி, காதல், கொஞ்சம் ஆக்‌ஷன் என்று திரைக்கதை நகர, இரண்டாம் பாதி செண்டிமெண்ட், மெசேஜ் என்று நகர்ந்திருக்கிறார் இயக்குனர் பாரத் கம்மா. ஆண்களால் பெண்கள் சவாலை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்ற கருத்தை சொல்லியிருக்கிறார். படம் பார்க்கும் போது நீண்ட நேரம் செல்வது போல் இருக்கிறது. இதை இயக்குனர் கவனித்திருக்கலாம். மற்றபடி, பெரியதாக குறை ஏதும் தெரியவில்லை.

ஜஸ்டின் பிரபாகரனின் இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக பின்னணி இசையில் வெளுத்து வாங்கி இருக்கிறார். காட்சிகளை தனது கேமரா மூலம் அழகாக காண்பித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுஜித் சராங்க்.

மொத்தத்தில் ‘டியர் கம்ரேட்’ மிரட்டல்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 27-07-2019, 10:06 AM



Users browsing this thread: 4 Guest(s)