05-01-2019, 12:56 PM
2018-ல் இலங்கையின் வசூல் மன்னன் விஜயா? ரஜினியா? – வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
Sri Lanka Top 5 Movies : 2018-ல் இலங்கையின் வசூல் மன்னன் விஜயா? ரஜினியா? என்று இலங்கையில் உள்ள பிரபல திரையரங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது
தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் ரிலீஸாகி வருகின்றன. கடந்த 2018-ல் மட்டும் மொத்தம் 171 படங்கள் ரிலீஸாகி இருந்தன.
அவைகளில் முன்னணி நடிகர்களின் படங்கள் தான் பெரியளவில் வசூல் செய்து சாதனை படைக்கும்.
தமிழகத்திலும் பல்வேறு திரையரங்குகளில் விஜயின் சர்கார் படமும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2 பாயிண்ட் ஓ படமும் தான் இடம் பிடித்திருந்தன.
இந்நிலையில் தற்போது இலங்கையில் உள்ள பிரபல திரையரங்க நிறுவனமான வசந்தி சினிமாஸ் நிறுவனம் 2018-ன் டாப் 5 படங்களின் லிஸ்டை வெளியிட்டுள்ளது.
இந்த லிஸ்டில் சர்கார், 2 பாயிண்ட் ஓ, காலா, கடைக்குட்டி சிங்கம், வடசென்னை ஆகிய படங்கள் பிடித்துள்ளன.
குறிப்பாக தளபதி விஜயின் சர்கார் படம் முதலிடத்தையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2 பாயிண்ட் ஓ படம் இரண்டாம் இடத்தையும் காலா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது.