வயது ஒரு தடையல்ல! - Completed
#40
 19. 


நண்பர்களே, இவிங்க ரெண்டு பேரும் ஃப்ளாஸ்பேக்குக்கு போயிட்டாங்க. ஹரீஸூம் முக்கிய வேலையா வெளிய போயிருக்கார். அதுக்குள்ள வேணா, ஹரீஸ் அப்டி என்ன செஞ்சு பழிவாங்குனான்னு பாத்துட்டு வந்துடுவோமா???
***********************************************************************************
மூன்று மாதங்களுக்கு முன்…

கம்பெனியில், அக்காவிடம், ‘பகைவனை உறவாடிக் கெடு’ என்று சொன்ன பின், நீ முதல்ல, அங்க போ. நான் இன்னும் ரெண்டு மூணு நாள்ல அங்க வருவேன். நீ சர்ப்ரைஸ் மாதிரி காட்டிக்கோ என்று சொல்லியிருந்தேன்.

அது மட்டுமில்லை, நான் கொஞ்ச நாள் அங்க தங்குற மாதிரியும் இருக்கும். நீ, அவிங்க முன்னாடி, என்கிட்ட ரொம்ப நெருக்கமாவும் காட்டிக்காத, அதே சமயம், வெறுப்பாவும் காட்டிக்காத. வேறெதாவதுன்னா, நானே சொல்றேன்.

சரிங்க சார், வேற ஏதாச்சும் இருக்கா என்று அவள் கிண்டல் செய்தாள்.

எனக்கும் அது சந்தோஷமாகத்தான் இருந்தது. ரெண்டு நாட்களுக்கு முன், அந்த வீட்டுக்குச் செல்ல பயப்பட்டவள், இப்போது கிண்டலடிக்கிறாள் என்றால், அவள் பழைய தன்னம்பிக்கையை பெற்றுவிட்டாள்! அது போதும்!

சொன்ன படியே அவள் அடுத்த நாள் கிளம்பினாள். (ஹாரீஸ் இருப்பது பெங்களூரில், நான் இருப்பது சென்னையில்)

இரண்டு நாட்கள் கழித்து. ஒரு மாலை நேரம்!

காலிங்பெல் அடித்தது! கதவைத் திறந்தது என் அக்காவின் மாமனார்! அவர் பெயர் மோகன்.
 
ஹாய் மதன்! வெல்கம். ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்குதான் வந்திருக்கீங்க. வெல்கம். வெல்கம்!
 
உள்ளிருந்து என் அக்காவும், ஹரீஸும் வந்தார்கள்.
 
ஹாய் மதன், வெல்கம்! இது ஹரீஸ்!
 
தாங்க்ஸ்! எல்லாரும் எப்படி இருக்கீங்க?
 
நல்லா இருக்கோம், நீதான் கல்யாணத்துக்கு அப்புறம் இப்பதான் வந்திருக்க! வெல்கம். எப்டியிருக்க?
 
வா மதன்! எப்டியிருக்கே? வரேன்னு ஃபோன் எதுவும் பண்ணவே இல்லை? இது அக்கா!
 
திடீர் ப்ளான்தான். இங்க முக்கியமான மீட்டிங்ஸ். எதிர்பார்த்ததை விட கொஞ்சம் ஏர்லியாவே முடிஞ்சிடுச்சி. அதான் அப்படியே பார்த்துட்டு போலாம்னு வந்தேன்.
 
ஓ, ஓகே!
 
அப்போது உள்ளிருந்து ஹரீஸின் சித்தி வந்தாள்.
 
ஹாய் மதன். வாங்க? எப்டியிருக்கீங்க?
 
நல்லாயிருக்கேன், நீங்க எல்லாரும் எப்டி இருக்கீங்க?
 
நாங்க எல்லாரும் நல்லாயிருக்கோம். உனக்கு பிசினஸ் எப்டி போகுது? அதைக் கேட்கவே வேண்டாம், இண்டஸ்ட்ரி நியூஸ் எல்லாம் செம பாசிடிவ். ஷேர் வேல்யூ கூட அதிகமாயிட்டே போகுதுன்னு கேள்விப்பட்டேன். கேட்க சந்தோஷமா இருக்கு!
 
மெல்ல பேச்சு பிசினஸை ஒட்டியே சென்றது. நான், ஹரீஸ், மோகன் மூவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அக்கா சும்மாவே உட்கார்ந்திருந்தாள்.
 
ஒன்றைக் கவனித்திருந்தேன். ஹரீஸ், என் பணத்திற்காக போலி மரியாதையெல்லாம் காட்டவேயில்லை. மனைவியின் தம்பி என்ற அக்கறை கலந்த பாசமும், தனிப்பட்ட முறையில் என் சிறுவயது முதலான வாழ்க்கையைத் தெரிந்ததால், என் மீது ஒரு மரியாதையும் இருந்தாலும், வா போ என்றுதான் பேசினார். அதே சமயம், வார்த்தைகளில் மரியாதையும், பாராட்டும் இருந்தது. அதுவே அவரது நல்ல குணத்தைக் காட்டியது.
 
ஆனால், அவர் சித்தப்பா, சித்தியோ போலி மரியாதையைக் காட்டினர். என்னால், அவர்களின் செயல்களில் இருந்த போலித்தன்மையை மிக எளிதில் கண்டு பிடிக்க முடிந்தது. இதை எப்படி ஹரீஸ் கண்டுபிடிக்காமல் இருந்தார்?
 
என் அக்காவைப் போலவேதான் நானும்! சிறு வயதிலிருந்து தாய், தந்தையரால் ஏமாற்றப்பட்டிருந்ததால், அடுத்தவரை கவனிக்கும், ஓரளவு சரியாக எடை போடும் திறனும் தானாக வந்திருந்தது. கூடுதலாக, பிசினசில் ஈடுபட்ட பின், அது மிக பன் மடங்கு உயர்ந்திருந்தது. என்னால் சரியாகக் கணிக்க முடியாத அல்லது இந்த விஷயத்தில் நான் தோற்றது ஒரே ஒருத்தரிடம்தான்! அதுவும்……………………………….
 
பின் நான் சொன்னேன். எனக்கு இங்க முக்கியமான வேலை இருக்கு. ஹெட் ஆஃபிஸ் சென்னைன்னாலும், பிசினஸ் ரீஸ்ட்ரக்சரிங் விஷயமாவும், இங்க பெங்களூர் ஆஃபிஸ்ல இருக்கிற ஃஃபினான்சியல் இஷ்யூக்காகவும் நான் தொடர்ந்து இங்க ரெண்டு மாசம் தங்க வேண்டியிருக்கும். சோ, கம்பெனி கெஸ்ட் அவுஸ் ரெடி பண்ணச் சொல்லியிருக்கேன். அது ரெனவேஷன் ஒர்க் போயிட்டிருக்கு. சோ, அதுவரைக்கும் ஹோட்டல்ல தங்கலாம்னு இருக்கேன்.
 
அப்போதுதான் அக்கா சொன்னாள். ஏன் ஹரீஸ், இங்கியே தங்கலாமே? ஹரீஸூம் அதை ஆமோதித்தார். எஸ் ஹரீஸ். இங்க நாங்க இருக்கிறப்ப, நீ எப்டி ஹோட்டல்ல தங்கலாம்?
 
நான் மறுத்தேன். ஆனால் மறந்தும் அவரது சித்தப்பாவோ, சித்தியோ என்னைத் தங்கச் சொல்லவில்லை. அவருக்கு உள்ளுக்குள் கலக்கம். அக்கா வந்த ரெண்டு நாளில் நான் வந்திருக்கிறேன். கூடுதலாக, தங்கும் ப்ளான் இருக்கிறது என்றும் சொல்கிறேன். உள்ளுக்குள் கொஞ்சம் ஆடித்தான் போயிருக்க வேண்டும்.
 
ஹரீஸுக்கு ஒரு பிசினஸ் கால் வந்தது என்று எழுந்து போனார். பின் என் அக்காவும், என் கண்ணசைவில், டின்னர் ரெடி பண்ண வேலையாட்களிடம் சொல்வதாக எனக்கும் ஹரீசின் சித்தப்பாவிற்கும் (மோகனிற்கும்) தனிமை கொடுத்து கிளம்பினாள்.
 
தனிமையில், மோகனிடம் கேட்டேன்.
 
என்ன மாமா, உங்களுக்கு நான் இங்க தங்குறது பிடிக்கலை போலிருக்கு?
 
அவன் திடுக்கிட்டான். இருந்தாலும் சமாளிக்க எண்ணி, அப்படியில்லை மதன்! ஏன் அப்படிச் சொல்ற?
 
நீங்க தங்கச் சொல்லி சொல்லவேயில்லையே?
 
நீ கோடீஸ்வரன் மதன். இந்த வசதியெல்லாம் உனக்கு ஒத்துவருமோ இல்லையோ?!
 
நான் அவன் கண்களையேப் பார்த்தேன். உண்மையிலேயே அதுதான் காரணமா?
 
அவனால் என்னை எதிர் கொள்ள முடியவில்லை! ஏன் மதன் ஒரு மாதிரி பேசுற? அதுவும் தனியா இருக்கிறப்ப?
 
அப்படீன்னா, எல்லாரும் இருக்கிறப்ப, என்னைத் தங்கச் சொல்லி நீங்க கம்பெல் பண்ணுங்க. அப்பதான் நான் தங்குவேன்.
 
இப்பொழுது அவனது ஈகோ கொஞ்சம் தலைதூக்க ஆரம்பித்தது. அப்படி எதுக்கு நான் உன்னை கம்பெல் பண்ணனும்?
 
அது உங்க விருப்பம்! ஆனா, நீங்க கம்பெல் பண்ணுங்க. அப்பதான் நான் தங்குவேன். நான் செய்யனும்னு நினைக்கிறதையெல்லாம், உக்காந்த இடத்துல இருந்து என்னால செய்ய முடியும். ஆனா, நான் இங்க தங்குறதுல, உங்களுக்கு ஒரு வேளை லாபம் வர வாய்ப்பிருந்தா, நீங்கதான் அதை மிஸ் பண்ணுவீங்க! அப்புறம், உங்க இஷ்டம்.
 
இன்னமும் அவனுக்கு குழப்பமும், கடுப்பும் ஏன் கொஞ்சம் பயமும் கூட இருந்தது அவனது முகத்திலேயே தெரிந்தது. சின்னப்பையன் ஆட்டுவிக்கிறான் என்ற கடுப்பு, என்ன லாபம் இருக்கலாம் என்ற குழப்பம், அக்கா விஷயம் தெரிந்து வந்திருக்கிறானோ என்ற பயம், ஆனாலும் கோபமாக எதுவும் பேசவில்லையே என்கிற குழப்பம்!
 
என் அக்காவை மெண்டல் டார்ச்சர் கொடுத்தவனுக்கு நான் என்னுடைய சிகிச்சையை ஆரம்பித்திருந்தேன்!
 
பி ஹரீஸ், அக்கா வந்த பின், ஹரீஸ் திரும்ப என்னைத் தங்கச் சொன்னார்.
 
நான் அமைதியாக அவரது சித்தப்பாவைப் பார்த்தேன். நான் எதிர்பார்த்த மாதிரியே, அவன் என்னை தங்கச் சொல்லி கம்பெல் பண்ணினான்.
 
அதன் பின் நான் ஒத்துக் கொண்டேன். அவனைப் பார்த்து ஒரு வெற்றிப் புன்னகை செய்தேன்.
 
அது அவனுக்கு இன்னும் கொஞ்சம் கடுப்பேத்தியது!
Like Reply


Messages In This Thread
RE: வயது ஒரு தடையல்ல! - by whiteburst - 26-07-2019, 02:19 PM



Users browsing this thread: 14 Guest(s)