26-07-2019, 02:19 PM
18.
மதனின் பார்வையில்…
அடுத்த நாள் காலை, அக்கா என்னிடம் கேட்டாள்
மதன் பிசியா? சாப்டதுக்கப்புறம், கொஞ்சம் பேசனும் உன் கூட.
ஓகே. பிசில்லாம் ஒண்ணுமில்லை. பேசலாம்.
ம்ம்ம்… இப்பச் சொல்லுங்க.
வா, உன் ரூமுக்கு போயிடலாம்.
ஹரீஸ்தான் பேசினார்.
இல்ல மதன், நாங்க வீட்டுக்கு போகலாம்னு இருக்கோம். நீ, எங்களுக்காக மிகப் பெரிய ஹெல்ப் பண்ணியிருக்க. இருந்தாலும் ஒரு விஷயம்…
சொல்லுங்க மாமா!
இல்ல, நீ எங்க வீட்ல என்ன பண்ணன்னு எதுவும் எங்களுக்கு தெரிய வேண்டாம். ஆனா, அவிங்க இன்னமும் என் வீட்டுலதான் இருக்காங்க. சோ, எனக்கும், உன் அக்காவுக்கும் குழப்பமா இருக்கு. அவிங்ககிட்ட நாங்க எப்டி ரியாக்ட் பண்ணனும், அவிங்களை ஏன் இன்னும் அங்க வெச்சிருக்கனும் எதுவும் புரியலை. அதான் யோசிக்கிறோம்.
நான் புன்னகைத்தேன்.
மாமா, நீங்க கேட்டது நல்லதுதான். நானே சொல்லனும்னுதான் இருந்தேன். நீங்க சொன்ன மாதிரி, அங்க என்ன நடந்ததுன்னு நான் யார்கிட்டயும் சொல்ல விரும்பலை. ஆனா, கண்டிப்பா, அவங்க பண்ண தப்புக்கு ஒரு தண்டனை கிடைச்சிருக்கு.
நீங்க ரெண்டு பேருமே, அங்க எதையும் வெளிக்காட்டிக்க வேணாம். அவரு அக்காகிட்ட நடந்த விதம் உங்களுக்கு தெரிஞ்ச மாதிரியோ, உங்ககிட்ட ஏமாத்துனது உங்களுக்கு புரிஞ்ச மாதிரியோ எதையும் காட்டிக்க வேணாம்.
பழைய அளவு நெருக்கம் காட்ட வேண்டாம். என்னன்னா என்ன என்ற அளவுலியே இருங்க. அதே சமயம், உங்க கோபமோ, வெறுப்போ அவங்களுக்குத் தெரியுற மாதிரி காட்டாதீங்க.
இனி உங்க கம்பெனில அவரை கண்டினியூ பண்ண விடாதீங்க. கேசூவலா, எந்தக் காரணமும் இல்லாம, ரெஸ்ட் எடுக்கச் சொல்லிட்டு, அக்காவை ஆஃபிஸ்க்குள்ள கொண்டு வந்திடுங்க.
அதாவது, மறைமுகமா வீட்டுலியும், ஆஃபிஸ்லியும், அவிங்களுக்கு பவர் இல்லைன்னு நீங்க காமிக்கனும். எல்லா இடங்கள்லீயும் முடிவுகளை நீங்க மட்டுமே எடுக்குறதா இருக்கனும். ஆனா, வார்த்தைகள்ல எந்த இடத்துலியும், கோவம், வெறுப்பு இருக்கக் கூடாது.
உங்க நடவடிக்கை கண்டிப்பா அவருக்கு குழப்பம் கொடுக்கும். அதே சமயம் அவரால உங்ககிட்ட விளக்கம் கேட்கவும் முடியாது!
ரொம்ப முக்கியமா ஒரு விஷயம், ஒரு வேளை, அவிங்க யாராவது, வேற ஊருக்கு போறோம்னோ, சொந்த ஊருக்கு போறோம்ன்னோ சொன்னா, நீங்க அதுக்கு ஓகே சொல்லிட்டு, அமைதியா விலகிடனும்.
ஹரீஸ் கொஞ்சம் குழப்பத்துடன் சொன்னார். நீ சொல்றதுல பாதி புரியலை. கொஞ்சம் குழப்பமாத்தான் இருக்கு. இருந்தாலும் நீ சொன்ன மாதிரியே செய்யுறேன்.
பின் நான், என் அக்காவிடம் சொன்னான். உனக்கும் அதேதான். எந்த இடத்துலியும், நீ அவரை ஒரு பொருட்டா மதிக்காத. ஆனா, அவர் முன்னாடி, நீ இன்னமும் கம்பீரமா, தைரியமா நடந்துக்கனும். ஓகேவா? சொல்லப் போனா, உன் கம்பீரமும், தைரியமும்தான் அவருக்கு முக்கிய, கடைசி தண்டனையா இருக்கனும்!
எனக்கும் முழுசா புரியலை. இருந்தாலும் ஓகே.
சரி, நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வந்துடுறேன்.
இந்த முறை அழுத்தமாக அக்காவின் குரல் வந்தது. இல்ல கொஞ்சம் உட்காரு, உன்கிட்ட இன்னொரு முக்கிய விஷயம் பேசனும்.
எனக்கு குழப்பம் வந்தது! இன்னும் என்ன சொல்லு?
பின் ஆழமாக என் கண்ணைப் பார்த்து கேட்டாள். நான் கால் பண்ணப்பவும், திரும்ப இங்க வீட்டுக்கு வந்தப்பவும் ஒரு மாதிரி நடந்துகிட்டியே, அது ஏன்?
சரியான பாயிண்ட்டை பிடித்து விட்டாள்!
இந்த முறை நான் தடுமாறினேன். அது ஒண்ணுமில்லை… ஏதோ பிசினஸ் டென்ஷன் அதான்…
பொய் சொல்லாத! உனக்கு அது வரலை.
ஏய் ஒண்ணுமில்லை… இன்னமும், என்னால் அவள் கண்களைப் பார்க்க முடியவில்லை.
உன்னால என் கண்ணையேப் பார்க்க முடியலை. ஏற்கனவே, உன் கம்பெனிக்கு நான் வந்திருந்தப்ப, நீ கொஞ்சம் உன்னை மீறி சொன்னது எனக்கு இன்னமும் ஞாபகத்துக்கு இருக்கு. நீ ஏதோ மறைக்கிற. என்னான்னு சொல்லு!
ஏய் மறைக்கல்லாம் இல்லை… எல்லாம் உனக்குத் தெரிஞ்ச விஷயம்தான். எனக்கு அதுல ஒரு குற்ற உணர்ச்சி. அதான்…
ஏய், எனக்கு சத்தியமா புரியலை. நீ எந்த விஷயத்தைச் சொல்ற நீ?
நான் இன்னமும் தடுமாறிக் கொண்டிருந்தேன்.
டேய், சொல்லு ப்ளீஸ். சத்தியமா சொல்றேன். எனக்கு நீ என்ன சொல்றேன்னே புரியலை. இன்னும் சொல்லப் போனா, ஏதாச்சும் பெரிய பிரச்சினையோன்னு பயமாக் கூட இருக்கு. ப்ளீஸ் சொல்லு!
நான் அமைதியாகவே இருந்தேன்!
ஹரீஸ் நீங்க, கொஞ்சம் நம்ம ரூம்ல இருங்க ப்ளீஸ்.
எழுந்த ஹரீசை, நான் குறுக்கிட்டேன். இல்லை வேணாம் மாமா. நீங்களும் இருங்க. அப்படி ஒண்ணும் ஒங்களுக்கு தெரியக் கூடாத விஷயமில்லை.
மெல்ல நான் சொல்ல ஆரம்பித்தேன். நான் சொல்லும் போதே தெரிந்துவிட்டது. அதில் பல விஷயங்கள், அக்காவிற்குத் தெரியவில்லை. அவளுக்கும் பலத்த அதிர்ச்சி. அது அவள் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரில் தெரிந்தது.
அருகிலிருந்த ஹரீஸின் கையை இறுகப் பற்றிக் கொண்டாள். என்னடா சொல்றா? சத்தியமா இது எதுவும் எனக்கு தெரியாதுடா. இதுக்கு நான் என்ன விளக்கம் சொல்லப் போறேன்னு எனக்கே தெரியலையே!
கொஞ்ச நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள். அவள் கண்களில் தொடர்ந்து கண்ணீர். எனக்கோ, ஹரீசிற்க்கோ என்னச் சொல்வது என்று தெரியவில்லை.
சிறிது நேரம் கழித்து தெளிவடைந்தவள், கண்ணைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள். பின் ஹரீசைக் கூட்டிக் கொண்டு வெளியே சென்றாள்.
அவள் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறாள் என்று தெரிந்துவிட்டது. நான், சந்திக்க பயப்பட்ட ஒரு விஷயத்தை, அவள் சந்திக்கத் துணிந்துவிட்டாள். அதில் பாதிக்கும் மேல் என் நலனுக்காகவும்தான் என்று எனக்குப் புரிந்தது. இந்த விஷயத்திலும் அவள் தைரியசாலிதான்.
மெல்லப் பெருமூச்சு விட்டு, சோஃபாவில் சாய்ந்தேன்.
சிறிது நேரம் கழித்து அக்கா மட்டும் என் அறைக்குள் வந்தாள். நான் அவளையேப் பார்த்தேன்.
ஹரீசை அனுப்பியிருக்கேன்.
நான் தலையசைத்தேன்.
அவளும் என்னருகில் அமர்ந்தாள்.
இருவரும் தனித்தனியே அமர்ந்திருந்தாலும், இருவர் மனமும் வருத்தத்தில் இருந்தாலும், நாங்கள் இருவரும் ஒரே விஷயத்தைப் பற்றிதான் யோசித்துக் கொண்டிருந்தோம்.
மெல்ல மெல்ல எங்கள் நினைவுகள் பின் நோக்கி நகர ஆரம்பித்தது!