நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ்
ம்ம் தேங்க்ஸ் புரிஞ்சுகிட்டதுக்கு என்றான் .யே அத விடு நீ ஸ்கூல் மும்பைலயா படிச்ச என கேட்டாள் .ம்ம் உசிலம்பட்டி கவர்மென்ட் ஸ்கூல படிச்சேன் ஆனா இந்த சிமியால இப்ப மும்பைல படிச்சேன்னு சொல்லணும் என்று நினைத்து கொண்டு ஆமா ஒரு ரெண்டு வருஷம் இங்க தான் ஸ்கூல் படிச்சேன் என்றான் .ஒ ஸ்கூலே மும்பையா அப்ப நீங்க பெரிய பணக்காரங்களா என்றாள் .
பணக்காரங்களா அடி பாவி அதுக்கு எல்லாம் எனக்கு மீனிங் கூட தெரியாது நீ தான் பெரிய பணக்காரி ஆனா அத வெளிக்காட்டாம எவளவு சிம்பிளா இருக்க என்று மனதில் நினைத்து கொண்டு இல்ல நாங்க பணக்காரங்களாம் இல்ல நார்மல் மிடில் கிளாஸ் தான் எங்க அப்பா ஒரு ரெண்டு வருஷம் இங்க மேனேஜரா இருந்தாரு அதுக்கு அப்புறம் திரும்ப தமிழ் நாட்டுக்கே போயிட்டோம் மத்தப்படி உன் அளவுக்கு எல்லாம் நான் பணக்காரன் இல்ல என்றான் .
என்னது என்றாள் .ஐயோ உளறிட்டானா என்று நினைத்து கொண்டு அதான் என்றான் .அதானா என்ன என் அளவுக்குன்னா அப்ப நான் என்ன பணக்காரியா என கேட்க இல்ல அப்படி இல்ல ஓகே ஆமா நீ தான சொன்ன உங்க அப்பா நீ சின்ன பிள்ளைல இருக்கும் போதே பெரிய பிசினஸ் மென் உங்க அம்மா சப் கலெக்டர்ன்னு அப்ப நீ பெரிய பணக்காரி தானே என்றான் .
இங்க பாரு விக்கி நீ என்னைய அசிங்கமா திட்ட கூட செய் ஆனா என்னைக்கும் எனக்கு ஒரு அப்பா அம்மா இருக்கிறத ஞாபக படுத்தாத என்று சொல்லி விட்டு வருத்ததோடு அவள் ரூமிற்குள் போனாள் .ஓகே குட் நைட் என்றான் .சுவாதி ரூமிற்குள் போயி வருத்ததோடு உக்காந்தாள் .அவளை அறியாமல் அவளுக்கு கண்ணீர் வந்தது .ஓகே ஓகே நான் அழுகல என்று கண்ணை துடைத்து விட்டு
ஏன் அழுகுறேன்னா உங்க அப்பாவுக்கு என் மேல லவ் இல்லையாம் லஸ்ட் தான் இருக்காம் .ஓகே உங்க அப்பாவுக்கு என்னைய பிடிக்கவே வேணாம் அத நினைச்சு நான் வருத்தம் எதுவும் படல ஏன்னா என்னைய விட்டு எல்லாரும் பிரியுறது வழக்கம் தானே அதுனால எனக்கு வருத்தம் இல்ல சந்தோசம் உங்க அப்பா நிம்மதியாவச்சும் இருக்கட்டும் என்று தன் வயிற்ரை தொட்டு தன் வயிற்றில் உள்ள குழந்தையிடம் அழுது கொண்டே பேசினாள் .
விக்கி தன் ரூமில் வழக்கம் போல் தலைகாணியை போட்டு அடித்து கொண்டு நான் நிம்மதியா இல்ல நான் நிம்மதியா இல்ல என்று சொல்லி கொண்டு இருந்தான் .நான் உன்னையே ரொம்ப லவ் பண்றேன் சுவாதி ஆனா அத சொல்ல தான் என்னால முடியல என்று சொல்லி அவனும் அழுதான் .
இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்த முடியாமல் மனதிற்குள்ளே அடைத்து வைத்து சிரம பட்டார்கள் .
இனி இரண்டு மாதங்களுக்கு பிறகு ……..
விக்கி வழக்கம் போல ஆபிஸ்ல் உக்காந்து எரிச்சொலடும் வருத்தொடும் உக்காந்து இருந்தான் .மணி வேகமாக வந்தான் மச்சி வள்ளி போன் போட்டாடா தண்ணி குடம் ஒடைஞ்சு இருச்சாம் என்றான் .உடைஞ்சா வேற வாங்க சொல்லுடா என்றான் விக்கி புரியமால் .டேய் லூசு அது இல்லடா அவளுக்கு குழந்தை வெளிய வர போகுதாம் என்றான் .ஓகே அப்ப இந்தா கார் சாவி நீ முதல போ நான் பாஸ் கிட்ட சொல்லிட்டு ஒரு அரை மணி நேரத்துல ஆஸ்பத்திரிக்கு வந்துடுறேன் என்றான் .சரிடா என்று சொல்லுவிட்டு மணி வேகமாக பதற்றோதொடு கிளம்பினான்
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ் - by johnypowas - 25-07-2019, 10:41 AM



Users browsing this thread: 37 Guest(s)