25-07-2019, 10:16 AM
ஷங்கர் படத்தை நிராகரித்த காமெடி நடிகர்!
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக மட்டும் இன்றி பிரம்மாண்ட இயக்குநர் என்றும் பெயர் எடுத்தவர் ஷங்கர். இவரது படங்களில் நடிக்க முன்னணி ஹீரோக்கள் பலர் ஆர்வம் காட்டி வர, வளர்ந்து வரும் காமெடி நடிகர் ஒருவர் இவரது படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்தது பலருக்கும் ஆச்சரியம் அளித்திருக்கிறது.
‘2.0’ படத்தை தொடர்ந்து கமலை வைத்து ஷங்கர் இயக்குவதாக இருந்த ‘இந்தியன் 2’ பல பிரச்சினைகளுக்கு பிறகு மீண்டும் தொடங்க இருக்கிறது. தற்போது படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் தேதிகளை வாங்கி ஒப்பந்தம் கையெழுத்தாகி வருகிறது.
இந்த நிலையில், ‘இந்தியன் 2’ வில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க ஆர்ஜே பாலாஜியை இயக்குநர் ஷங்கர் அனுகியிருக்கிறார். முதலில் ஓகே சொன்ன ஆர்ஜே பாலாஜி, பிறகு ஷங்கருக்கு நோ சொல்லி, நடிக்க மறுத்திருக்கிறார்.
விசாரித்ததில், இயக்குநர் ஷங்கர், ஆர்ஜே பாலாஜியிடம் மொத்தமாக 150 நாட்கள் கால்ஷீட் கேட்டாராம். இதனால் தான் ஆர்ஜே பாலாஜி, ஷங்கருக்கு நோ சொல்லியிருக்கிறார்.
காமெடி வேடங்களில் நடித்து வந்த ஆர்ஜே பாலாஜி, ‘எல்.கே.ஜி’ படத்திற்குப் பிறகு சில படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கியிருக்கும் நிலையில், இப்படி ஒரே படத்திற்காக 150 நாட்கள் தேதிகளை ஒதுக்கி வைத்துவிட்டால், தான் ஹீரோவாக நடிப்பதையே மக்கள் மறந்துவிடுவார்கள், என்ற பயத்தில் தான் ஷங்கர் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம்.
புத்தியுள்ள புள்ள!
first 5 lakhs viewed thread tamil