25-07-2019, 10:08 AM
வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு தர்ம அடி.. சாம்பியன் இங்கிலாந்தை வைச்சு செஞ்ச அயர்லாந்து!
50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி அடுத்து அயர்லாந்து அணியுடனான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடியது.
எதிர்பார்ப்பு என்ன?
இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி சில அனுபவம் குறைந்த வீரர்களுடன் களமிறங்கினாலும், அயர்லாந்து அணியை விட பலம் வாய்ந்த அணியாகவே காட்சி அளித்தது. தன் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆடிய அயர்லாந்து அணி ஓரளவு தாக்குப் பிடித்தாலே பெரிது என்ற எதிர்பார்ப்பு தான் முதலில் இருந்தது.
துவக்கம்
போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அயர்லாந்து அணியின் முர்டாக், துவக்க வீரர் ஜேசன் ராயை 5 ரன்களில் வெளியேற்றினார். அடுத்து டென்லியை 23 ரன்களில் வெளியேற்றினார் அடைர்.
விக்கெட் மழை
தொடர்ந்து அடைர் மற்றும் முர்டாக் விக்கெட்டாக வீழ்த்தித் தள்ளினர். 36 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இருந்த நிலையில், அடுத்து 43 ரன்களுக்கு 7 விக்கெட்கள் வீழ்ந்து பெரும் அவமானத்தில் சிக்கியது இங்கிலாந்து. அப்போதே இங்கிலாந்து ரசிகர்கள் மனமுடைந்து போய் உலகக்கோப்பை வெற்றியை எல்லாம் மறந்தார்கள்.
கத்துக்குட்டி அயர்லாந்திடம் கவிழ்ந்து போன உலக சாம்பியன் இங்கிலாந்து
லண்டன் : இங்கிலாந்து அணி 2019 உலகக்கோப்பை தொடரை வென்று பத்து நாள் கூட ஆகவில்லை. அதற்குள் கிரிக்கெட்டில் பெரும் அவமானத்தை சந்தித்துள்ளது.50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி அடுத்து அயர்லாந்து அணியுடனான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடியது.
எதிர்பார்ப்பு என்ன?
இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி சில அனுபவம் குறைந்த வீரர்களுடன் களமிறங்கினாலும், அயர்லாந்து அணியை விட பலம் வாய்ந்த அணியாகவே காட்சி அளித்தது. தன் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆடிய அயர்லாந்து அணி ஓரளவு தாக்குப் பிடித்தாலே பெரிது என்ற எதிர்பார்ப்பு தான் முதலில் இருந்தது.
துவக்கம்
போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அயர்லாந்து அணியின் முர்டாக், துவக்க வீரர் ஜேசன் ராயை 5 ரன்களில் வெளியேற்றினார். அடுத்து டென்லியை 23 ரன்களில் வெளியேற்றினார் அடைர்.
விக்கெட் மழை
தொடர்ந்து அடைர் மற்றும் முர்டாக் விக்கெட்டாக வீழ்த்தித் தள்ளினர். 36 ரன்களுக்கு 3 விக்கெட்கள் இருந்த நிலையில், அடுத்து 43 ரன்களுக்கு 7 விக்கெட்கள் வீழ்ந்து பெரும் அவமானத்தில் சிக்கியது இங்கிலாந்து. அப்போதே இங்கிலாந்து ரசிகர்கள் மனமுடைந்து போய் உலகக்கோப்பை வெற்றியை எல்லாம் மறந்தார்கள்.
first 5 lakhs viewed thread tamil