Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
நிமிடத்தில் ஆட்சியைக் கவிழ்த்துவிடுவோம்’! மத்தியப் பிரதேசத்தில் ஆட்டத்தைத் தொடங்கிய பா.ஜ.க
எங்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் உத்தரவிட்டால், 24 மணி நேரத்தில் கமல்நாத் ஆட்சியை கவிழ்த்துவிடுவோம,கமல்நாத் ஆட்சி குறித்து பேசிய மத்தியப் பிரதேச எதிர்கட்சித் தலைவரும் பா.ஜ.க மூத்த தலைவருமான கோபால் பார்கவி, ‘எங்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் உத்தரவிட்டால், 24 மணி நேரத்தில் கமல்நாத் ஆட்சியை கவிழ்த்துவிடுவோம். விரைவில் காங்கிரஸ் அரசுக்கு இறுதிச் சடங்கு செய்வோம்’என்று தெரிவித்தார்.

இதுகுறித்து பா.ஜ.க பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வார்கியா ட்விட்டர் பதிவில், ‘நொண்டி அரசுக்கு நீண்ட எதிர்காலம் கிடையாது. கர்நாடகா அரசு அதனுடைய விதியைச் சந்தித்தது. உயர்மட்டத் தலைவர்கள் கண்ணசைத்தால் மத்தியப் பிரதேச அரசை நொடியில் கவிழ்த்துவிடுவோம்’ என்று குறிப்பிட்டிருந்தார். இது மத்தியப் பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 230 உறுப்பினர்களில் காங்கிரஸுக்கு 114 எம்.எல்.ஏக்களும், பா.ஜ.வுக்கு 109 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். நான்கு சுயேட்சைகள், இரண்டு பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்கள், ஒரு சமாஜ்வாடி எம்.எல்.ஏவின் ஆதரவுடன் காங்கிரஸ் மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியமைத்துள்ளது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 25-07-2019, 10:05 AM



Users browsing this thread: 103 Guest(s)