Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
சரி, ஹெல்மெட் அணியவில்லை எனக்கூறி நெக்ஸான் டிரைவர் ஒருவருக்கு போலீசார் அபராதம் விதித்தனர் என குறிப்பிட்டிருந்தோம் அல்லவா? அந்த சம்பவம் எங்கே நடந்தது? எப்படி நடந்தது? என்பது குறித்த விரிவான தகவல்களை இனி பார்க்கலாம்.
[Image: xxtata-nexon-front-design-1556639556-jpg...91MgLm.jpg] 

ஹெல்மெட் அணியவில்லை என்பதற்காக நெக்ஸான் டிரைவருக்கு போலீசார் அபராதம் விதித்த சம்பவம் கேரளாவில் கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது. சர்ச்சையை கிளப்பிய இந்த விவகாரம், கேரள மாநிலத்தில் உள்ள சாஸ்தம்கோட்டா - சவாரா சாலையில்தான் நிகழ்ந்தது.
[Image: xxtata-nexon-helmet-fine2-1556639414-jpg...ODiH_T.jpg] 

அப்போது அவ்வழியாக வந்த நெக்ஸான் டிரைவர் ஒருவருக்கு 100 ரூபாய் அபராதம் விதித்து, அதற்கான ரசீதையும் போக்குவரத்து போலீசார் வழங்கினர். ஹெல்மெட் அணியாததால்தான் அபராதம் என அந்த ரசீதில் காரணமும் குறிப்பிடப்பட்டுள்ளது.
[Image: xxtata-nexon-front-profile-1556639564-jp...rZBThI.jpg] 


கோபா குமார் என்பவர் இது குறித்து பேஸ்புக்கில் எழுதியிருந்தார். அவர்தான் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்.கோபா குமாரின் பேஸ்புக் பதிவு மூலமாக, அபராதம் விதித்து போலீசார் வழங்கிய ரசீது வெளிச்சத்திற்கு வந்தது. சாஸ்தம்கோட்டா - சவாரா சாலையில், தனது டாடா நெக்ஸான் காரில் பயணித்து கொண்டிருந்தபோதுதான், போலீசாரால் கோபா குமார் நிறுத்தப்பட்டுள்ளார்.
[Image: xxhelmet-politician-pune-protest15-15566...v063hn.jpg] 

அந்த காரின் படத்தையும் கோபா குமார் பேஸ்புக்கில் வெளியிட்டிருந்தார். ஆனால் அவரை போலீசார் நிறுத்தியது ஏன்? என்பதற்கான காரணம் தெரியவில்லை. காரணம் குறித்த தகவல் எதுவும் அவரது பேஸ்புக் பதிவில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் அவருக்கு போலீசார் 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.
[Image: xxhelmet-politician-pune-protest11-15566...lRp6KV.jpg] 


அத்துடன் அதற்கான ரசீதையும் வழங்கினர். ரசீதில் ஹெல்மெட் அணியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. கார் உள்பட அனைத்து வாகன ஓட்டிகளும் ஹெல்மெட் அணிய வேண்டும் என புதிதாக சட்டம் ஏதேனும் பிறப்பிக்கப்பட்டுள்ளதா? என பயப்பட வேண்டாம்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 24-07-2019, 09:29 AM



Users browsing this thread: 101 Guest(s)