Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
இவர் தேசிய சட்ட பல்கலைகழகம் ஒடிசாவின் (National Law University Odisha - NLUO) மாணவி. ஷ்ரதா தாஸ் தனது காரை ஓட்டிக்கொண்டிருந்தபோது, ஹெல்மெட் அணியவில்லை எனக்கூறி, கட்டாக் போக்குவரத்து போலீசார் ஆன்லைன் சலான் அனுப்பியுள்ளனர். சம்பவத்தன்று ஷ்ரதா தாஸ் தனது மாருதி சுஸுகி வேகன் ஆர் காரை ஓட்டி கொண்டிருந்தார். காரின் பதிவு எண்ணை அடிப்படையாக வைத்து இ-சலான் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
[Image: xstudent-maruti-wagonr-fined-for-not-wea...lyiLBy.jpg] 

இந்த சூழலில் இ-சலானின் படத்தை டிவிட்டரில் வெளியிட்ட ஷ்ரதா தாஸ், இதுகுறித்து விளக்கம் அளிக்கும் படி கட்டாக் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் கேட்டு கொண்டுள்ளார். ஹெல்மெட் அணியாமல் எனது காரை இயக்கியதற்காக என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது ஏன்? என்பதை தயவு கூர்ந்து விளக்குங்கள் என்று ஷ்ரதா தாஸ் கேட்டுள்ளார்.
[Image: xstudent-maruti-wagonr-fined-for-not-wea...WDw3Be.jpg]

இ-சலான் படத்துடன் சேர்த்து தான் ஓட்டிய மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் புகைப்படத்தையும் ஷ்ரதா தாஸ் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார். எனவே ஷ்ரதா தாசுக்கு ஆர்டிஓ பதில் அளித்துள்ளார். இந்த தவறு வேண்டுமென்றே செய்யப்படவில்லை எனவும், வாகன ஓட்டிகளுக்கு எலெக்ட்ரானிக் சலான்களை வழங்கும்போது போலீசார் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் ஆர்டிஓ கூறியுள்ளார்.

[Image: xstudent-maruti-wagonr-fined-for-not-wea...GFS8rq.jpg] 
[color][font]

பொதுவாக சீட் பெல்ட் அணியாதது மற்றும் சிகப்பு விளக்கு எரியும்போது சிக்னலை மீறி செல்வது உள்ளிட்ட பல்வேறு விதிமுறை மீறல்களுக்காக இ-சலான்கள் வழங்கப்படுகின்றன. எனவே ஷ்ரதா தாஸ் வேறு ஏதேனும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டதற்காக, தவறான காரணத்தை குறிப்பிட்டு அவருக்கு இ-சலான் வழங்கப்பட்டு விட்டதா? என்பது உறுதியாக தெரியவில்லை.

[/font][/color]
[Image: ximportance-of-wearing-seatbelt-4-156387...J07TNV.jpg] 
[color][font]


ஆனால் ஹெல்மெட் அணியவில்லை என்பதற்காக கார் டிரைவர் ஒருவருக்கு அபராதம் விதிப்பது இது முதல் முறையல்ல என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் டாடா நெக்ஸான் உள்ளிட்ட பல கார்களின் டிரைவர்களுக்கு இது போன்று அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக டாடா நெக்ஸான் டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவத்தில், ரசீது போலீசாரின் கையால் எழுதி கொடுக்கப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.

[/font][/color]
[Image: ximportance-of-wearing-seatbelt-5-156387...rk3lQG.jpg] 
[color][font]

தவறான காரணத்தை குறிப்பிட்டு இ-சலான்கள் வழங்கப்படுவதை கூட தவறுதலாக நடந்திருக்கும் என புரிந்து கொள்ள முடிகிறது. எனினும் ஸ்பாட்டில் போலீசாரால் கையால் எழுதி கொடுக்கப்படும் அபராத ரசீதுகளில் கூட காரணத்தை தவறாக குறிப்பிடுவதை ஜீரணித்து கொள்ள முடியவில்லை.

[/font][/color]
[Image: ximportance-of-wearing-seatbelt-6-156387...CfPzrJ.jpg] 
[color][font]

ஆனால் நிறைய வாகனங்களுக்கு ஒரு சேர அபராதம் விதிப்பதால், காரணத்தை மாற்றி குறிப்பிடும் குழப்பம் நடந்து விடுவதாக போலீசார் கூறுகின்றனர். கடந்த காலங்களில் ராயல் என்பீல்டு பைக்கை ஓட்டி வந்த ஒருவருக்கு, சீட் பெல்ட் அணியவில்லை எனக்கூறி போலீசார் ஸ்பாட்டிலேயே அபராதம் விதித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


[/font][/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 24-07-2019, 09:28 AM



Users browsing this thread: 65 Guest(s)