Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
மாணவிக்கு போலீசார் அபராதம் விதித்தது இதற்குதான்... சிரித்து வயிறு புண் ஆனால் நிர்வாகம் பொறுப்பல்ல!!

தவறான காரணத்திற்காக கல்லூரி மாணவிக்கு அபராதம் விதித்து போலீசார் மீண்டும் ஒரு முறை காமெடி செய்துள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.


[Image: xviluppuram-trichy-road-14-years-old-boy...9NjqqS.jpg]




இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. எனவே விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக, போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் தற்போது கடும் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக முக்கியமான இடங்களில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டு, விதிமீறும் வாகன ஓட்டிகள் கண்காணிக்கப்படுகின்றனர்.
[Image: xdespite-law-2-wheeler-buyers-not-given-...rjSoIN.jpg] 
[color][font]
இதன்பின் சம்பந்தப்பட்ட வாகனத்தின் பதிவு எண்ணை அடிப்படையாக வைத்து, அதன் உரிமையாளருக்கு ஆன்லைன் முறையில் இ-சலான் அனுப்பி வைக்கப்படுகிறது. பெரும்பாலும் வாகனத்தை ஓட்டியவர்களுக்கு இ-சலான் அனுப்பி வைக்கப்படுவதில்லை. வாகனம் யார் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ, அவர்களுக்கே இ-சலான் அனுப்பி வைக்கப்படுகிறது.
[/font][/color]
[Image: xdespite-law-2-wheeler-buyers-not-given-...BuW3iu.jpg] 
[color][font]
எனவே விதி மீறலில் ஈடுபட்ட வாகனத்தை யார் இயக்கியிருந்தாலும், அதன் உரிமையாளர்தான் அபராத தொகையை செலுத்த வேண்டும். இதுதவிர இ-சலான் முறையில் பல்வேறு குளறுபடிகளும் அரங்கேறி வருகின்றன. இந்த வரிசையில், ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டி ஒருவருக்கு தற்போது இ-சலான் அனுப்பப்பட்டுள்ளது.
[/font][/color]
[Image: xdespite-law-2-wheeler-buyers-not-given-...infmPl.jpg] 
[color][font]

ஹெல்மெட் அணியாதது தவறுதானே? இதில் என்ன குளறுபடி இருக்கிறது என கேட்கிறீர்களா? போலீசார் இ-சலான் அனுப்பியிருப்பது இரு சக்கர வாகன ஓட்டிக்கு அல்ல. கார் ஓட்டி வந்தவருக்கு. ஆம், கார் ஓட்டி வந்தவருக்குதான் ஹெல்மெட் அணியவில்லை எனக்கூறி தற்போது இ-சலான் வந்துள்ளது. ஷ்ரதா தாஸ் எனும் இளம்பெண்தான் இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.[/font][/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 24-07-2019, 09:26 AM



Users browsing this thread: 1 Guest(s)