Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
கர்நாடக வரலாற்றில் 25 முதல்வர்கள்.. ஆனால் முழுமையாக ஆட்சி செய்ததோ வெறும் 3 முதல்வர்கள்:

[Image: Siddaramaiah_EPS.jpg]
கர்நாடக மாநிலம் இதுவரை 25 முதல்வர்களைக் கண்டபோதிலும், வெறும் மூன்று முதல்வர்கள் மட்டுமே முழுமையாக 5 ஆண்டுகள் ஆட்சியில் அமர்ந்துள்ளனர். 

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்ததையடுத்து, குமாரசாமி தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார். வெறும் 14 மாதங்கள் மட்டுமே ஆட்சியில் இருந்த குமாரசாமியால் 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி புரியமுடியவில்லை. ஆனால், கர்நாடக அரசியல் வரலாற்றில் இது முதன்முறையல்ல. 


[img=0x0]https://wtf2.forkcdn.com/www/delivery/lg.php?bannerid=0&campaignid=0&zoneid=5834&loc=https%3A%2F%2Fwww.dinamani.com%2Findia%2F2019%2Fjul%2F23%2Fonly-3-cms-completed-full-term-in-history-of-karnataka-3198559.html&referer=https%3A%2F%2Fnews.google.com%2F&cb=5d39019bb3[/img]


கர்நாடக மாநிலம் 1956-இல் உதயமானதில் இருந்து, இதுவரை 25 முதல்வர்களைக் கண்டுள்ளது. அதில் பெரும்பாலானோர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். ஆனால், இவர்களுள் இதுவரை மூன்று முதல்வர்கள் மட்டுமே 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்துள்ளனர். அந்த மூன்று முதல்வர்களும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் சுவாரஸ்யமாகும். 

முதல்வராக 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சி செய்த மூவர்:

  1. எஸ். நிஜலிங்கப்பா (1962-68)
  2. டி. தேவராஜா (1972-77)
  3. சித்தராமையா (2013-18)
இவர்களைத் தவிர பாஜகவில் இருந்தோ, குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளத்தில் இருந்தோ யாரும் முழுமையாக 5 ஆண்டுகள் முதல்வராக இருந்ததில்லை. 

குமாரசாமி:

குமாரசாமி முதன்முறையாக 2006-இல் பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல்வரானார். ஆனால், இது வெறும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. பாஜகவுடனான அதிகாரப் பகிர்வில் குமாரசாமி உடன்படாததையடுத்து, பாஜக தலைமையிலான ஆட்சிக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றார். குமாரசாமி, பிப்ரவரி 2006 முதல் அக்டோபர் 2007 வரை முதல்வராக இருந்தார். 

அதன்பிறகு, 2018-இல் தொங்கு சட்டப்பேரவை அமைந்தது. அப்போது, மீண்டும் காங்கிரஸ் உதவியுடன் முதல்வரானார் குமாரசாமி. அது வெறும் 14 மாதங்கள் மட்டுமே நீடித்த நிலையில் இன்று கலைந்தது. 

எடியூரப்பா:

பாஜகவைப் பொறுத்தவரை, 2007-இல் பி.எஸ். எடியூரப்பா முதல்வரானார். ஆனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் தனது ஆதரவை திரும்பப் பெற்றதையடுத்து, அவர் வெறும் 7 நாட்கள் மட்டுமே முதல்வராக இருந்தார். அதன்பிறகு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. 

இதையடுத்து, மே 2008-இல் பாஜகவை வெற்றி பெறச் செய்த எடியூரப்பா, 2-வது முறையாக முதல்வரானார். ஆனால், ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக 2011-இல் அவர் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். எனினும், 2018-இல் தொங்கு சட்டப்பேரவை அமைந்தவுடன் அவர் மீண்டும் முதல்வரானார். 2018, மே 17-ஆம் தேதி முதல்வராகப் பொறுப்பேற்ற எடியூரப்பா, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் மே 23-ஆம் தேதி முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தா
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 24-07-2019, 09:20 AM



Users browsing this thread: 18 Guest(s)