23-07-2019, 09:40 AM
Bajaj அதிரடி..! 38,000 ரூபாய்க்கு சிடி 110 பைக்..! பங்கு விலையில் எதிரொலி!
டெல்லி: Bajaj ஆட்டோ இன்று (ஜூலை 22, 2019) தன் புதிய எண்ட்ரி மாடல் பைக்கான சிடி 110 ரக பைக்குகளை வெளியிட்டிருக்கிறார்கள். இந்த அறிமுக பைக்கின் விலை, எக்ஸ் ஷோரூம் விலைப் படி வெறும் 38,000 முதல் 44,500 ரூபாயாம்.
தரையில் இருந்து கொஞ்சம் அதிகமாக மேல் எழும்பி இருப்பது, முந்தைய சிடி ரக வாகனங்களை விட இன்றைய மாடல் வாகனங்கள் உறுதியாக இருப்பது, விபத்துக்கள் ஏற்பட்டாலும் பெரிய அடி படாமல் இருக்க க்ராஷ் கார்டை பெரிதாக வைத்திருப்பது, நல்ல தரமான சஷ்பென்ஷன் என தன் புதிய சிடி 110-ஐக் களம் இறக்கி இருக்கிறது Bajaj.
இந்த Bajaj சிடி 110 இரண்டு ரகத்தில் வெளியிட்டிருக்கிறார்களாம். ஒன்று கிக் ஸ்டார்ட் ரகம். டெல்லியில் கிக் ஸ்டார்ட் ரகத்தின் விலை 38,000 ரூபாய். இரண்டாவது எலெக்ட்ரிக் ஸ்டார்ட் ரகம். டெல்லியில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் ரக வாகனங்களின் விலை 44,500 ரூபாயாம்.
இந்த வாகனத்தின் இன்ஜின் 115 சிசி திறன் கொண்ட டிடிஎஸ்-ஐ இன்ஜினாம். இந்த இன்ஜினால் 8.6 பிஎஸ் பவரும், 9.81 என் எம் டார்க் சக்தியும் வெளிப்படுத்துமாம். இந்த புதிய Bajaj சிடி 110-ல் நான்கு கியர்களைக் கொண்ட கியர் பாக்ஸ் இருக்கிறதாம். இரண்டு சக்கரங்களுக்கும் ட்ரம் பிரேக் பொருத்தப்பட்டிருக்கிறதாம்.
Bajaj சிடி 110 ரகா பைக்குகளை வெளியிடும் போது, Bajaj ஆட்டோ நிறுவனத்தின் தலைவர் சரங் கனடே (Sarang Kanade) "குறைந்த விலையில் ஒரு தரமான பைக் வேண்டும் என்கிற வாடிக்கையாளர்களுக்காக இந்த புதிய சிடி 110-ஐப் வடிவமைத்திருக்கிறோம். புதிய சிடி 110 வாகனம், கவர்ச்சிகரமான விலையில் நல்ல மைலேஜ், சக்தி மற்றும் சிறந்த செயல்பாடுகளைக் கொடுக்கும் என நம்புகிறோம்" எனச் சொல்லி இருக்கிறார்.
அதோடு இது வரை சுமார் 50 லட்சம் சிடி ரக பைக்குகளை விற்று இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். இப்போது புதிதாக களம் இறக்கப்பட்டிருக்கும் சிடி 110 ரக வாகனங்கள் ஹீரோ குழுமத்தின் ஹெச் எஃப் (Hero HF), டிவிஎஸ் குழுமத்தின் ஸ்போர்ட் (TVS Sport) போன்ற பைக்குகளோடு மோத இருக்கிறது.
இதனால் இன்று Bajaj ஆட்டோஸ் பங்கின் விலை 0.42% அதிகரித்து 2,569-க்கு வர்த்தகம் நிறைவு அடைந்திருக்கிறது. கடந்த 4 வர்த்தக நாட்களாக இறக்கம் கண்டு வந்த பங்கு இன்று இந்த செய்தியால் தான் கொஞ்சம் ஏற்றம் கண்டிருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.

first 5 lakhs viewed thread tamil