Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
மும்பை : வாராக்கடன் பிரச்சனையில் சிக்கித் தவித்து வரும் வங்கிகள், அடுத்தடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வரும் இந்த நிலையில், நாளுக்கு நாள் கடன் கட்ட முடியாமல் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கையும் பெருகிக் கொண்டே போகிறது.
அதிலும் விஜய் மல்லையா, நிரவ் மோடி சஞ்சய் சிங்கால் இந்த லிஸ்டில் தற்போது துளசி தாந்தியும் இணைய போகிறாரா என்ற கேள்வியும் இணைந்திருக்கிறது.
ஆமாங்க.. கடந்த மார்ச் 31வுடன் முடிவடைந்த ஆண்டில் மட்டும், சுஸ்லான் நிறுவனத்தின் மொத்த கடன் சுமார் ரூ.11,141 கோடி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


[/url][url=denied:javascript:void(0);]
அதிரடியான மீட்பு பணிகள்
கடந்த ஜூன் 30வுடன் முடிவடைந்த காலாண்டில் யூனியன் வங்கி தனது வாராக்கடன் களின் பட்டியியலில் சேர்த்துள்ளதாம். ஆமாங்க யூனியன் வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகையில் 90 நாட்களுக்கு பிறகும் செலுத்ததால் தற்போது வாராக்கடன் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாம். கடந்த வாரம், சுஸ்லானின் கடன் வழங்குனர்களின் தீர்மான திட்டங்கள் தொடங்கியது. இந்த நிலையில் கடன் பிரச்சனைக்கு தீர்வு காணவும், மீட்பு திட்டங்கள் தொடர்பான பணிகளும் அதிரடியாக தொடங்கப்பட்டுள்ளதாம். இதில் முதல் கட்ட நடவடிக்கையாக கனேடியன் சொத்து மேலாளர் புரூக்ஃபீல்டு, ஜூலை 11 அன்று காற்றாலை உற்பத்தியாளரின் பெரும்பாலான பங்குகளை வாங்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
[Image: blackmoney2-1-1563796607-1.jpg?ssl=1]

[/url][url=denied:javascript:void(0);]
கடனை உடனடியாக செலுத்தும் படி மற்ற வங்கிகளும் கூறலாம்?
இந்த நிலையில் யூனியன் வங்கி சுஸ்லான் நிறுவனத்தை வாராக்கடன் பட்டியியலில் சேர்க்க முற்படுவதால், மற்ற வங்கி கடன் வழங்குனர்களும் கடனுக்கான பணத்தை ஒதுக்க கட்டாயபடுத்தும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த நிறுவனம் கட்ட வேண்டிய நிலுவை தொகையான 1,182 கோடி ரூபாயை செலுத்த முடியாமல் தவித்து வரும் நிலையில், கடந்த மார்ச் 31வுடன் முடிவடைந்த காலாண்டில் 6,494, கோடி ரூபாய் கடன் உள்ளதாகவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
[Image: tulsi-tanti-650x455-1563796577-1.jpg?ssl=1]

[/url][url=denied:javascript:void(0);]
யூனியன் பேங்கிற்கு ரூ.70 கோடி மட்டும் தான்
மோசமான கடன் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் இந்த நிறுவனம், இதே ஜூன் 31 முடிவடைந்த காலாண்டில் மொத்தக் கடன் 7,761 கோடி ரூபாய் இருக்கலாம் என்றும், செயல்பாட்டு மூலதனக் கடன் 3,380 கோடி ரூபாய் எனவும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. யூனியன் பேங்கிற்கு 70 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்க வேண்டியுள்ள நிலையில், இந்த கூட்டமைப்பின் நிர்வாகிகள் வாராக்கடன் பட்டியியலில் அறிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனராம்.
[Image: suzlon-bags-75-mw-order-through-msedcl-b....jpg?ssl=1]

[/url][url=denied:javascript:void(0);]
ஸ்டேட் பேங்கிற்கு ரூ.2,340 கோடி கடன்?
எனினும் இந்த நிறுவனத்திற்கு கடன் வழங்குனர்களான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 2,340 கோடி ரூபாய் எனவும், இதுவே ஐ.டி.பி.ஐ பேங்க் 1,400 கோடி ரூபாயும், பேங்க் ஆப் பரோடா 634 கோடி ரூபாயாகவும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு 520 கோடி ரூபாயும், பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு 500 கோடியும் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவுக்கு 330 கோடி ரூபாயும், பேங்க் ஆப் இந்தியாவுக்கு 7 கோடியும், யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுக்கு 70 கோடி ரூபாயும், கார்ப்பரேஷன் பேங்கிற்கு 52 கோடி ரூபாயும் செலுத்த வேண்டும் எனவும் கூறப்படுகிறது.
[Image: suzlon-bags-75-mw-order-through-msedcl-b....jpg?ssl=1]

[/url][url=denied:javascript:void(0);]
சுஸ்லான் எதிர்கால வணிகம் பற்றி அறிய வில்லை
கடந்த 2008 – 2009ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் வருவாய், உலகின் ஐந்தாவது பெரிய காற்றலை தாயாரிப்பாளராக வளர்ந்த, சுஸ்லானின் வீழ்ச்சி எதிர்கால வணிக வாய்ப்புகளைப் பற்றி படிக்காமல், உலகளாவிய விரிவாக்கத்தின் எதிரொலிதான் இந்த நஷ்டம் என்றும் கருதப்படுகிறது.
[Image: economy-28-1506580085-14-1515917233-1563....jpg?ssl=1]

[/url][url=denied:javascript:void(0);]
மூலப்பொருட்கள் விலை அதிகரிப்பால் தள்ளி வைக்கப்பட்ட வாங்குதல்கள்?
இதன் பின்னர் கடந்த 2008ல் உலகளாவிய பொருளாதார வீழ்ச்சி, இந்த நிறுவனத்தின் இந்த பல அதிர்ஷ்டங்களை உறிஞ்சியது. அது பின்னர் மீண்டும் ஒரு வலுவான ஒழுங்கு புத்தகத்தை நிர்வகிக்க முடிந்தது, எனினும் பின்னர் 2018ல் மீண்டும் உலகளாவிய மந்த நிலையால் மீண்டும் பிரச்சனை துளிர் விட ஆரம்பித்துள்ளது. அதோடு எஃகு உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலையும் அதிகரித்தது. இதனால் பல வாங்குதல்கள் தள்ளி வைக்கப்பட்டன. இதனால் தற்போது நஷ்டம் மேற்கொண்டு அதிகரிக்க ஆரம்பித்துள்ளன.
[Image: money-1537796763-1546577359-1563796723-1.jpg?ssl=1]

[/url][url=denied:javascript:void(0);]
இந்தியாவில் காற்றின் திறனும் குறைந்துள்ளது?
இந்த நிலையில் தான் இந்தியாவின் காற்றின் திறன் குறைந்தது. குறிப்பாக கடந்த நிதியாண்டில் காற்றின் திறன் 1,523 மெகா வாட்டாக குறைந்தது. ஆனால் இது கடந்த 2017ம் நிதியாண்டில் 5,500 மெகா வாட்டாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது கிட்டதட்ட 72 சதவிகிதம் குறைவாகும்.
[Image: 74-tulsi-tanti-1563796567-1.jpg?ssl=1]

[/url][url=denied:javascript:void(0);]
அடுத்தடுத்த கட்ட வேண்டிய கடன் தொகை?
இது ஒரு புறம் இருக்க இந்த நிறுவனத்தின் கடன் அட்டவணைப் பற்றி கவலைப் பட வேண்டியிருக்கிறது. 2020ம் நிதியாண்டில் சுஸ்லான் நிறுவனம் 1,928 கோடி ரூபாயும், இதே 2021ம் நிதியாண்டில் 835 கோடி ரூபாயும், இதே 2022ம் நிதியாண்டில் 926 கோடி ரூபாயும், 2023ல் 4,483 கோடி ரூபாயும் திரும்ப செலுத்த வேண்டியுள்ளதாம். தற்போதுள்ள குறைந்த அளவு கடனையே கட்ட முடியாமல் தவிக்கும் இந்த நிறுவனம் இந்தக் கடன்களை எப்படி கட்டப்போகிறதோ தெரியவில்லை என்றும் கருதப்படுகிறது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 23-07-2019, 09:38 AM



Users browsing this thread: 103 Guest(s)