Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
'சமஸ்கிருதத்தை கட்டாயமாக்க வேண்டும்': ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தல்

சமஸ்கிருத மொழியை அதிகமானோர் கற்கும் வகையில், அதை பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும்' என, ஆர்.எஸ்.எஸ்., துணை அமைப்புகள் வலியுறுத்தி உள்ளன.



[Image: Tamil_News_large_2326434.jpg]




'பள்ளிக் கல்வியில், மும்மொழி கல்வி திட்டம் அறிமுகம் செய்யப்படும்' என, சமீபத்தில் வெளியிடப்பட்ட, மத்திய அரசின், வரைவு கல்விக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இந்நிலையில், 'சமஸ்கிருத மொழியை கட்டாயமாக்க வேண்டும்' என, ஆர்.எஸ்.எஸ்., எனப்படும், ராஷ்ட்ரீய ஸ்வம் சேவக் அமைப்பின் துணை அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.ஆர்.எஸ்.எஸ்., துணை அமைப்பான, பாரதிய சிக் ஷன் மண்டல், சமீபத்தில், வெளியிட்ட அறிக்கை: மும்மொழி கொள்கையால், சமஸ்கிருதம் அதிகம் பாதிக்கப்படுகிறது.


[Image: gallerye_064928196_2326434.jpg]








கட்டாயம்
பள்ளிகளில், ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழி கட்டாயமாக உள்ளது. அத்துடன் ஹிந்தி பேசாத மாநிலங்களில், மூன்றாவது மொழியாக பெரும்பாலானோர், ஹிந்தியை தேர்வு செய்கின்றனர். வெகு சிலரே, சமஸ்கிருதத்தை தேர்வு செய்கின்றனர். அதனால், மும்மொழி திட்டத்துடன், சமஸ்கிருதத்தை கட்டாயமாக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.மற்றொரு துணை அமைப்பான, சமஸ்கிருத மொழியை பரப்பும், சமஸ்கிருத பாரதி அமைப்பின் தலைவர், தினேஷ் காமத் கூறியதாவது:மும்மொழி கல்வி திட்டத்தில், ஹிந்தி மற்றும் தாய்மொழியுடன், மூன்றாவது மொழியாக, சமஸ்கிருதத்தை கட்டாயமாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தற்போது, நாட்டின் பல்வேறு மாநிலங்களில், 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை சமஸ்கிருதம் கற்றுத் தரப்படுகிறது. கேரளாவில், 1ம் வகுப்பில் இருந்தே கற்றுத் தரப்படுகிறது. அதே நேரத்தில் உத்தரகண்டில், 3ம் வகுப்பில் இருந்து கற்றுத் தரப்படுகிறது.பல்வேறு மாநிலங்களில், 6 முதல், 10ம் வகுப்பு வரை, மூன்றாவது மொழியாக சமஸ்கிருதம் கற்றுத் தரப்படுகிறது; பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பில், இரண்டாவது மாற்று மொழியாக கற்றுத் தரப்படுகிறது. பல்வேறு கல்லுாரி மற்றும் பல்கலைகளில், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப் படிப்பிலும், சமஸ்கிருதம் கற்றுத் தரப்படுகிறது. இவ்வாறு, 120 பல்கலைகளில் சமஸ்கிருதம் கற்பிக்கப்படுகிறது.


[Image: gallerye_06493946_2326434.jpg]





இதைத் தவிர, மத்திய அரசு நடத்தும் மூன்று பல்கலைகள் உட்பட, 15 சமஸ்கிருத பல்கலைகளும் உள்ளன. இதற்கிடையே, சமஸ்கிருதத்தை பேசும் மொழியாக உள்ள கிராமங்களை உருவாக்கவும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான கிராமங்களை தேர்வு செய்யும் முயற்சி நடந்து வருகிறது.மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக உள்ள, பா.ஜ.,வைச் சேர்ந்த ரமேஷ் போக்ரியால், உத்தரகண்ட் முதல்வராக இருந்தபோது, இந்த திட்டத்தை அங்கு செயல்படுத்தியுள்ளார். பந்தோலா கிராமத்தில் உள்ள மக்கள், ஹிந்தி அல்லது சமஸ்கிருதத்திலேயே பேசுகின்றனர்.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 23-07-2019, 09:36 AM



Users browsing this thread: 10 Guest(s)