22-07-2019, 05:41 PM
தி லயன் கிங்', முதல் வார இறுதி இந்தியா வசூல் எவ்வளவு ?
ஹாலிவுட்டின் பிரபலமான நிறுவனங்கள் தயாரிக்கும் பெரிய படங்கள் இந்தியாவிலும் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெறும். கடந்த சில வருடங்களாக வருடத்திற்கு ஒன்றிரண்டு ஹாலிவுட் படங்களாவது இந்தியப் படங்களின் வசூல் அளவிற்கு இந்தியாவிலும் வசூல் செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.
அந்த விதத்தில் கடந்த வாரம் வெளிவந்த 'தி லயின் கிங்' படமும் முதல் வார இறுதியில் இந்தியாவில் சுமார் 55 கோடி வரை வசூலித்துள்ளதாம். ஹாலிவுட் படங்களின் அதிக முதல் வார இறுதி வசூலில் இது மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதற்கு முன்பு, இந்த வருடத்தில் வெளிவந்த 'அவெஞ்சர்ஸ் என்ட்கேம்' படம் முதல் வார இறுதி வசூலாக 158 கோடியையும், கடந்த வருடம் வெளிவந்த 'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்' படம் 94 கோடியையும் வசூலித்துள்ளது.
'அவெஞ்சர்ஸ்' அல்லாத படங்களில் மற்ற ஹாலிவுட் படங்களின் வசூலை முறியடித்து 'தி லயன் கிங்' புதிய வசூல் சாதனையைப் படைத்துள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் இந்தியாவில் வெளியாகி உள்ளது.

first 5 lakhs viewed thread tamil