22-07-2019, 05:31 PM
[color=var(--title-color)]`நல்ல கருத்துகளைச் சொன்னாலே இப்படித்தான்..!’ - சூர்யா பேச்சுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் திரையுலகம்[/color]
[color=var(--title-color)]நடிகர் சூர்யாவின் புதிய கல்விக் கொள்கை தொடர்பான பேச்சுக்கு ஒருபுறம் ஆதரவும், மறுபுறம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.[/color]
[color=var(--meta-color)]சூர்யா[/color]
[color=var(--content-color)]மத்திய அரசுகொண்டுவரவிருக்கும் `புதிய கல்விக் கொள்கை’ தொடர்பான விவாதங்கள் மேலோங்கியுள்ளன. புதிய கல்விக் கொள்கையில் உள்ள பல்வேறு பாதகங்கள் குறித்து நடிகர் சூர்யா தனது கருத்தை தெரிவித்தார். இதற்கு பா.ஜ.க சார்பில் கண்டனங்கள் எழுந்தன. தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு, ``புதிய கல்விக் கொள்கை குறித்து சூர்யாவுக்கு என்ன தெரியும்? சூர்யா அரைவேக்காட்டுத்தனமாகப் பேசுகிறார். நன்கு தெரிந்துகொண்டு பேசுபவர்களுக்கு பதில் கூறலாம்” என்று விமர்சித்தார்.
மறுபுறம், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், `சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு’ தெரிவித்தார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும், சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். சூர்யாவின் இந்தப் பேச்சுக்கு ஒருபுறம் ஆதரவும், மற்றொரு புறம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்நிலையில், சென்னையில் இயக்குநர் சங்கத்தேர்தலின்போது, சூர்யாவின் பேச்சுகுறித்து இயக்குநர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.[/color]
கே.எஸ்.ரவிக்குமார்[/color]
[color=var(--content-color)]
சூர்யா
[/color]
[color=var(--content-color)]இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையில், ``சூர்யா பேச்சை நான் கேட்டேன்; நல்லது பேசியிருக்கிறார். சரியாகப் பேசியிருக்கிறார். ரொம்ப கரெக்டா பேசியிருக்கிறார். நிறைய பேர் இது மாதிரி குரல்கொடுக்க வேண்டும். அது, இவர்களுடைய கொள்கை அவர்களுடைய கொள்கை என்பதெல்லாம் இல்லை. சொல்லப்போனால், இந்தக் கொள்கைகளை யாரெல்லாம் உருவாக்கினார்களோ அவர்களுக்கே தெரியாத விஷயமெல்லாம் சூர்யாவின் பேச்சு மூலமாகத், தெரியவரும். அப்போ அவங்க இதையெல்லாம் போய் விசாரிப்பாங்க.
`என்னங்க, கிராமத்துல படிக்கிற மாணவர்களுக்கு வாய்ப்பே இல்லை. ஆசிரியர்கள் இல்லையா, ஆசிர்யர்களை நியமிக்கணும்’. இதுபோன்ற விஷயங்கள் சூர்யா சொன்னது மூலமாகத் தெரிய வரலாம். ஐஏஎஸ் அதிகாரிகள் போன்றவர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கெல்லாம் நிறையவே தெரியும். அவர்கள் சொல்வதற்கு பயப்படுவார்கள். ஆனால், சூர்யா தைரியமாகச் சொன்னார். இதுபோன்ற விஷயங்களெல்லாம் சூர்யா மூலமாக வெளியே வந்துள்ளதே என்று நான் சந்தோஷப்படுகிறேன். எங்களுக்கும் உள்ளுக்குள்ளே இருக்கு, எங்களுக்கு வாய்ப்பு வரும்போதுதான் சொல்லமுடியும். அவருக்கு வாய்ப்பு வந்துள்ளது அவர் பேசினார். அவர் அகரம் நடத்துவதால், இது தொடர்பாக நிறைய விஷயங்கள் தெரிந்துள்ளது; சொல்கிறார். அவர் சொல்லித்தான் நிறைய விஷயங்கள் எனக்கே தெரியும்” என்றார்.[/color]
[color=var(--content-color)]இயக்குநரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறுகையில், ``நம் நாட்டில் நல்ல கருத்துகளை பேசமுடியவில்லை. அவற்றைப் பேசுவதற்கே சுதந்திரம் இல்லாத நிலைதான் இருக்கிறது. அந்த வகையில், நடிகர் சூர்யாவுக்கும் அது நடந்திருப்பதில் எந்தவித ஆச்சர்யமுமில்லை” என்று கூறியுள்ளார்.[/color]
[color=var(--content-color)]
சங்கர்
[/color]
[color=var(--content-color)]இயக்குநர் சங்கரிடம் கேட்டபோது, ``நடிகர் சூர்யா, தேசிய கல்விக் கொள்கை பற்றிப் பேசியது எனக்குத் தெரியாது; நான் அதைப் படிக்கவில்லை” என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.
[color=var(--content-color)]நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான சீமான் பேசுகையில், ``மீண்டும் மீண்டும் தேர்வு, தகுதித் தேர்வு, நுழைவுத் தேர்வு போன்றவற்றில் உள்ள கவனம், சமமான தரமான கல்வியைக் கொடுக்காமல் தகுதியான மாணவனை எப்படி எதிர்பார்க்கிறீர்கள்? ஏன் மாணவர்களோ ஆசிரியர்களோ புதிய கல்விக் கொள்கை குறித்து கவனம் செலுத்தவில்லை என்பது கேள்வியாக உள்ளது.[/color]
[color=var(--content-color)]
சீமான்
[/color]
[color=var(--content-color)]நடிகர் சூர்யா பேசியது பாராட்டுதலுக்குரியது. அந்த துணிச்சல் மற்றவர்களுக்கு இல்லை என்றால் வெட்கப்பட வேண்டும். பஞ்ச் டயலாக் படத்தில் பேசினால் போதாது; வெளியில் வந்து பேச வேண்டும்” என்றார்.[/color]

Quote:ஐஏஎஸ் அதிகாரிகள் போன்றவர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கெல்லாம் நிறையவே தெரியும். அவர்கள் சொல்வதற்கு பயப்படுவார்கள். ஆனால், சூர்யா தைரியமாகச் சொன்னார்.[color=var(--white)]

first 5 lakhs viewed thread tamil