Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
கடாரம் கொண்டான் படத்திற்கு தடை !!

தமிழகத்தில் வசூலைக் குவித்து வரும் விக்ரமின் கடாரம் கொண்டான் படம் மலேயாசியாவில் வெளியாவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

[Image: vikram-kadaram-kondan.jpg]கடாரம் கொண்டான் படத்திற்கு தடை !!
கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தில் விக்ரமை வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் “கடாரம் கொண்டான். தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் செல்வா இப்படத்தினை இயக்கியுள்ளார். ஜிப்ரான் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளார்கள். 

முதலில் இப்படத்தில் கமலஹாசன் நடிப்பதாக இருந்தது. ஆனால் அரசியலில் ஈடுபட்ட காரணத்தால் கமல் நடிக்க முடியாமல் போகவே விக்ரம்நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. 

அக்‌ஷரா ஹாசன், நாசர் மகன் அபி ஆகியோர் வெகு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்கள். விக்ரம் ஸ்டைலிஷானகேரக்டரில் நடித்துள்ளார். 

கடாரம் கொண்டான் படம் வெள்ளிக் கிழமை உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்திற்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. கமல் தயாரிப்பு விக்ரமின் வித்தியாசமான கெட்டப் என படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. முதல் நாளில் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளது. 

கடாரம் கொண்டான் நேற்று சென்னை திரையரங்குகளில் மட்டும் ரூ.52 லட்சங்களுக்கு மேல் வசூல் செய்துள்ளது. எதிர்ப்பார்ப்பை தாண்டி இது நல்ல வசூல் தான் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதிக எதிர்பார்ப்பில் இருந்த ஆடை படம்முதல் மூன்று காட்சிகள் ரத்து செய்யப்பட்டது இதனால் அந்த திரையரங்குகளிலும் கடாரம் கொண்டான் திரையிடப்பட்டது. 

மேலும், தமிழகம் முழுவதும் இப்படம் ரூ 4.5 கோடிகளுக்கு மேல்வசூல் செய்திருப்பாதாக தகவல்கள் தெரிவிக்கிறது 

கடாரம் கொண்டான் 2010ல் வெளியான ஸ்பானிஷ் திரைப்படமான Point blank படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். படத்தின் கதைக்களம் மலேசியாவில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் கடாரம் கொண்டான் மலேசியாவில் வெளியாக வில்லை. மலேசியா போலீஸை படத்தில் தவறாக சித்தரித்துள்ளதால்,Film Censorship Board of Malaysiaஇப்படத்தை வெளியிட தடை விதித்துள்ளது. இதனை பட விநியோகம் செய்யும் லோட்டஸ் ஃபைவ் ஸாடார் நிறுவனம் உறுதி செய்துள்ளது. இதனால் மலேசியாவில் உள்ள ரசிகர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர் 


அண்மையில் வெளியான கடாரம் கொண்டான்திரைப்படத்திற்கு தமிழகத்தில் நல்ல வரவேற்பு உள்ள நிலையில், மலேசியாவில் இப்படத்தை வெளியிடவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 21-07-2019, 10:09 AM



Users browsing this thread: 2 Guest(s)