Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
பிக்பாஸ் வீட்டில் கவின் காதல் நாயகனாக சுற்றுவது ஏன் தெரியுமா? வனிதா போட்டுடைத்த உண்மை!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் கவின் ஏன் பெண்கள் உடன் கடலை போட்டுக்கொண்டு காதல் மன்னனாக சுற்றுகிறார் என்ற தகவலை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவின், சாக்ஷி, ஷெரின், அபிராமி, லாஸ்லியா என கடலை போட்டு வந்தார். நான்கு பேரையும் காதலிப்பதாக முதலில் விளையாட தொடங்கிய அவர் பின்னர் சாக்ஷி மீது காதல் கொண்டார்.
சாக்ஷியும் கவினும் ஒருவருக்கொருவர் காதலை பரிமாறிக் கொண்டனர். ஒரு பக்கம் சாக்ஷியை காதலித்துக்கொண்டே மறுபுறம் லாஸ்லியாவையும் ஓட்டிக் கொண்டிருந்தார் கவின்.


[Image: kavin-23-1563639113.jpg]



வாய் திறக்கவில்லை
இது சாக்ஷிக்கு பிடிக்காமல் போகவே இருவருக்குள்ளும் பிரச்சனை ஏற்பட்டது. இதனை காரணமாக வைத்து லாஸ்லியாவிடம் மேலும் நெருக்கம் காட்டிய கவின், தனக்கும் சாக்ஷிக்கும் இடையிலான காதல் குறித்து வாய்திறக்கவில்லை.
[Image: losliya0-1563639120.jpg]
 
[color][size][font]
திட்டிய லாஸ்லியா
இந்நிலையில் இந்த விவகாரம் மிகவும் தாமதாமாக லாஸ்லியாவுக்கு தெரியவந்தது. இதனால் கவினை எங்களின் உணர்வுகளுடன் விளையாடுகிறாய். சாக்ஷியுடனான காதல் குறித்து நீ என்னிடம் ஏன் சொல்லவில்லை. நீ செய்தது பெரிய தப்பு என பயங்கரமாக திட்டினார்.
[Image: kavin-32-1563639158.jpg][/font][/size][/color]
 
[color][size][font]
கழுவி ஊற்றிய நெட்டிசன்ஸ்
பிக்பாஸ் வீட்டில் பெண்கள் பின்னாடி சுற்றுவதையே முழு நேர பணியாக வைத்திருந்தார் கவின். இதனால் சமூக வலைதளங்களில் கவினை கழுவி ஊற்றினர் நெட்டிசன்கள். சரவணன் மீனாட்சி மூலம் சம்பாதித்த பெயரையெல்லாம் மொத்தமாக கெடுத்துக்கொண்டார் கவின்.
[Image: vanithavijayakumar-15-1563639268.jpg][/font][/size][/color]
 
[color][size][font]

வனிதா ஒரே பிஸி
இந்நிலையில் கவின் ஏன் இப்படி கடலை, காதல் என சுற்றுகிறார் என்ற விவரத்தை விலாவாரியாக சொல்லியுள்ளார் வனிதா. கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட வனிதா, டிவி சேனல்களுக்கு பேட்டிக் கொடுப்பதில் பிஸியாக உள்ளார்.

[Image: kavin-12-1563639218.jpg][/font][/size][/color]
 
[color][size][font]
சினிமாவில் காதல் நாயகனாக
அந்த வகையில் அவர் கொடுத்த பேட்டியில் கவினின் காதல் லீலைகள் குறித்து பேசியுள்ளார். அதாவது கவினுக்கு காதலும் இல்லை ஒரு மண்ணாங்கட்டியும் இல்லையாம். சினிமாவில் காதல் நாயகனாக நடிக்க விரும்புகிறாராம் கவின்.
[Image: vanitha56-1-1563639275.jpg][/font][/size][/color]
 
[color][size][font]
அப்படி வாய்ப்பு
அதற்காக பிக்பாஸ் வீட்டில் இப்படி நடந்துகொண்டால் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்ற நப்பாசையில் காதல், கத்தரிக்காய் என சுற்றுகிறாராம். இப்படிதான் ஒவ்வொருவரும் சினிமா வாய்ப்பை எதிர்பார்த்து ஒரு முகமூடி போட்டு சுற்றுகின்றனர் என போட்டுடைத்துள்ளார் வனிதா.[/font][/size][/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 21-07-2019, 10:07 AM



Users browsing this thread: 5 Guest(s)