20-07-2019, 10:10 AM
சந்தானம் படத்துக்கு எதிர்ப்பு: பிராமணர் சங்கம் போலீசில் புகார்
![[Image: santhanam.jpg]](https://static.tamil.news18.com/tamil/uploads/459x306/jpg/2019/07/santhanam.jpg)
![[Image: sficon.gif]](https://static.hindi.news18.com/ibnkhabar/uploads/assests/img/sficon.gif)
![[Image: sticon.gif]](https://static.hindi.news18.com/ibnkhabar/uploads/assests/img/sticon.gif)
news18
Updated: July 18, 2019, 8:04 PM IST
சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘A1’ படக் காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பிராமணர் சங்கத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘தில்லுக்கு துட்டு 2’. ஹாரர் காமெடி ஜானரில் உருவாகியிருந்த இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் சந்தானம் ஜான்சன் இயக்கத்தில் அக்யூஸ்ட் நம்பர் 1(A1) என்ற படத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக தாரா அலிஷா நடித்திருக்கிறார். இவர் '100% லவ்' என்ற தெலுங்கு படம் மற்றும் பல பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்
சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் டீசர் கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியான நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு படத்தின் இரண்டாவது டீசரை படக்குழுவினர் வெளியிட்டனர். அந்த டீசரில், ஆஃப்பாயில் சாப்பிட்டு தனது காதலை நிரூபிக்கும் அக்ரஹாரத்து மாமி, இதைக் கேட்டு மயங்கி விழுந்த தோப்பனார்’ என்ற வசனத்துடன் காட்சி இடம்பெற்றுள்ளது.
![[Image: a1.jpg]](https://static.tamil.news18.com/tamil/uploads/2019/07/a1.jpg)
இந்த வசனத்தை நீக்க வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டம் பழனி நகர காவல் நிலையத்தில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில தலைவர் ஹரிஹரமுத்து மற்றும் இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராமரவிக்குமார் தலைமையில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில் படத்தின் இயக்குநர் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
first 5 lakhs viewed thread tamil