20-07-2019, 09:57 AM
[color=var(--title-color)]`கிரிக்கெட்டில் மாற்று வீரர் பந்து வீசலாம், பேட்டிங் செய்யலாம்!’- ஐசிசி அறிவிப்பு[/color]
[color=var(--content-color)]கிரிக்கெட் போட்டியில் மாற்று வீரராக களம் இறங்குபவர்கள் இதுவரை ஃபீல்டிங் மட்டுமே செய்யமுடியும் என்ற நிலை இருந்தது. இனி, போட்டி நடக்கும்போது வீரர் ஒருவர் காயமடைந்தால், அவருக்குப் பதிலாக களமிறங்கும் சப்ஸ்டிட்யூட் வீரர் பேட்டிங் செய்யவும், பந்துவீசவும் அனுமதிக்கும் வகையில் ஐசிசி விதிகளில் மாற்றம் செய்துள்ளது. லண்டனில் நடந்த ஐ.சி.சி ஆண்டு இறுதி குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.[/color]
[color=var(--content-color)]
வீரர்கள் காயம்
[/color]
[color=var(--content-color)]கடந்த 2 ஆண்டுகளாக உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் இந்த விதிமுறை பரிச்சார்த்த முயற்சியாக பின்பற்றப்பட்டு வந்தது. ஆகஸ்ட் 1–ம் தேதி தொடங்கவுள்ள இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான ஆஷஸ் தொடரில் இந்த விதிமுறை நடைமுறைக்கு வரும். ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளுக்கும் இந்த விதி பொருந்தும். மகளிர் கிரிக்கெட்டுக்கும் இதே விதிதான்.[/color]
[color=var(--content-color)]ஆஸ்திரேலியாவின் உள்ளுர் தொடர்களிலும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் தொழில்முறை கிரிக்கெட் தொடர்களிலும் சோதனை முயற்சியாக மாற்று ஆட்டக்காரர்கள் பந்து வீச்சு மற்றும் பேட்டிங் செய்ய அனுமதிக்கப்பட்டது. நடந்து முடிந்த உலகக் கோப்பைத் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது ஆப்கானிஸ்தான் வீரர் ஹஸ்மதுல்லா ஷாகிதியை பவுன்சர் பந்து தாக்கியதில் தலையில் பலத்த காயமடைந்தார்.[/color]
[color=var(--content-color)]
வீரர்கள் காயம்
[/color]
[color=var(--content-color)]மருத்துவர்களின் அறிவுரையைக் கேட்காமல் தொடர்ந்து பேட் செய்தார். மாற்று வீரர்களுக்கு பேட்டிங் வாய்ப்பு இல்லாததால் இதுபோன்ற நெருக்கடிக்கு வீரர்கள் தள்ளப்படுகின்றனர். இதனால், உடனடியாக புதிய விதியை அமல்படுத்த வேண்டுமென்று உறுப்பு நாடுகள் கோரிக்கை விடுத்தன. வீரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஐ.சி.சி இந்த முடிவை எடுத்துள்ளது. ஐ.சி.சி-யின் முடிவுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வரவேற்பு தெரிவித்துள்ளது.[/color]

first 5 lakhs viewed thread tamil