04-01-2019, 11:51 AM
RASI PALAN 2019 IN TAMIL - துலாம்
2018 முடிந்து 2019 பிறக்கிறது. இந்தாண்டு ஒவ்வொரு ராசிக்காரர்களுக்குமான பலன்கள் பற்றியும் பரிகாரத் தலங்கள் பற்றியும் விரிவாக விவரிக்கிறார் ஜோதிட ரத்னா' முனைவர் கே.பி.வித்யாதரன்.
![[Image: 7.png]](https://www.vikatan.com/horoscope/new-year-rasipalan/images/temp/7.png)
மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்பவர்களே!
சுக்கிரனும் சந்திரனும் உங்கள் ராசிக்குள் இருக்கும்போது வருடம் பிறப்பதால், இங்கிதமாகவும் இதமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். கடனாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். வாழ்க்கைத்துணைவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அவரிடம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும். வீடு வாங்க, கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்ட உறவினர்கள் தங்கள் தவற்றை உணர்ந்து வலிய வந்து பேசுவார்கள். புது வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெள்ளிப் பொருள்கள் வாங்குவீர்கள். பழைய கடன் பிரச்னைகள் கட்டுப்படும். அவ்வப்போது உடல்நலன் சிறிதளவு பாதித்து உரிய சிகிச்சையினால் உடனே சரியாகிவிடும்.