19-07-2019, 05:02 PM
இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்த குறைபாட்டை கண்டுபிடித்த சென்னை இளைஞருக்கு அந்நிறுவனம் 30ஆயிரம் டாலர் பரிசாக அளித்துள்ளது.
சென்னையை சேர்ந்தவர் லக்ஷ்மண் முத்தையா. இவர் தொழில்நுட்பம் சார்ந்த பணியில் ஈடுபட்டு வருகிறார். அதிலும் குறிப்பாக தொழில்நுட்பங்களில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக ஆய்வு செய்து வருகிறார். அந்தவகையில் தற்போது இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் உள்ள ஒரு பாதுகாப்பு குறைபாட்டை அவர் கண்டுபிடித்துள்ளார்.
அதாவது இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் பயனாளர்களின் கணக்குகளை எளிதில் ஹேக் செய்ய முடியும் வழியை அவர் கண்டுபிடித்துள்ளார். இதனை பயனாளர் தனது பாஸ்வேர்டு மாற்றும் வசதியை வைத்து கண்டுபிடித்துள்ளார். இன்ஸ்டாகிராம் பயனாளர் தனது பாஸ்வேர்டு மாற்றுவதற்கு தேவைப்படும் ரிக்வரி கோட் மூலம் அவரது கணக்கை ஹேக் செயலாம் என்பதை லக்ஷ்மண் முத்தையா செய்து காட்டியுள்ளார்.
இதனையடுத்து இவர் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு இந்தத் தகவலை அனுப்பியுள்ளார். இதனை ஆராய்ந்த ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளத்தின் பாதுகாப்பு அதிகாரிகள் இந்தப் பாதுகாப்பு குறைபாட்டை சரி செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து முத்தையாவிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவருக்கு 30ஆயிரம் அமெரிக்க டாலரை பரிசாக அளித்துள்ளனர். இந்திய தொகைப்படி லக்ஷ்மண் முத்தையாவிற்கு 20.56 லட்சம் பரிசாக கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது

first 5 lakhs viewed thread tamil