04-01-2019, 10:02 AM
(This post was last modified: 04-01-2019, 10:03 AM by johnypowas.)
பேட்ட’ படத்தின் கேரள உரிமையை வாங்கிய பிருத்திவிராஜ்
![[Image: actor-e1546422090786.jpg]](http://www.maalaisudar.com/wp-content/uploads/2019/01/actor-e1546422090786.jpg)
prithviraj jayasurya
சென்னை, ஜன.2: ரஜினி நடித்துள்ள பேட்ட படத்தின் கேரள மாநில உரிமையை நடிகரும், தயாரிப்பாளருமான பிருத்திவிராஜ் வாங்கியிருக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படம் ஜன.10-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் பேராதரவை பெற்று லட்சக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர்.
தமிழில் பேட்ட படத்தின் உரிமையை உதயநிதி ஸ்டாலினுக்கு சொந்தமான ரெட் ஜெயின்ட் மூவிஸ் வாங்கியிருக்கிறது.
தற்போது, கேரள மாநில உரிமையை பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான பிருத்திவிராஜ் வாங்கியிருக்கிறார். பிருத்திவிராஜுக்கு சொந்தமான பிருத்திவராஜ் புரெக்டஷன் மற்றும் லிஸ்டின் ஸ்டீபன் மேஜிக் பிரேம் என்ற நிறுவனமும் கூட்டாக இணைந்து பேட்ட படத்தின் வினியோக உரிமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.