04-01-2019, 09:38 AM
நிலவின் இருண்ட மறுபக்கத்தில் தரையிறங்கி சீன விண்கலம் சாதனை
பீஜிங்,
சந்திரனுக்கு முதன்முதலாக அமெரிக்கா மனிதர்களை அனுப்பி சரித்திர சாதனை படைத்தது. அதை தொடர்ந்து இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் சந்திரனில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.
நிலவு மற்றும் செவ்வாய் போன்ற பகுதிகளுக்கு மனிதனை அனுப்புவதற்கு முன்னர் தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்களை அனுப்பி அவை எப்படி அங்குள்ள சூழ்நிலைகளை சமாளித்து தாக்குப்பிடிக்கின்றன மற்றும் அவற்றுக்கு எந்தவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று கண்டறிந்து ஆவணப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது சீனாவின் சாங் இ (Chang’e Program) திட்டம். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ‘சாங் இ 4 மிஷன்’ (Chang’e 4 Mission) எனும் திட்டத்தை சீனா செயல்படுத்தி உள்ளது.