Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
பிக்பாஸ் வீட்டில் இரவில் நடக்கும் கொடுமை - வனிதா

[Image: NTLRG_20190718150450288773.jpg]

சென்னை: பிக்பாஸ் வீட்டில் இரவு முழுவதும் விளக்குகள் எரிந்த வண்ணம் தான் இருக்கும் என வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.


பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவது போட்டியாளராக வெளியேறியவர் வனிதா விஜயகுமார். அவர் வீட்டில் இருந்தவரை, பல்வேறு பிரச்சினைகளுக்கு காரணமாக இருந்தார். வீடே எப்போதும் சண்டை சத்தமாக இருந்தது. இப்போது வனிதா வெளியேறி விட்டதால், நிகழ்ச்சியே அவ்வளவாக சுவாரஸ்யமாக இல்லை என்ற விமர்சனம் பரவலாக உள்ளது.

இந்நிலையில், வனிதா பிக்பாஸ் வீட்டில் கிடைத்த அனுபவங்கள் குறித்து பேட்டியளித்து வருகிறார். அப்படி ஒரு பேட்டியில், பிக்பாஸ் வீட்டில் இரவு லைட் ஆப் செய்வது போல் தொலைக்காட்சியில் தான் காட்டுவார்களாம். ஆனால், ஒரு சில நிமிடங்களில் மீண்டும் விளக்கைப் போட்டு விடுவார்களாம். இரவு முழுவதும் விளக்கு வெளிச்சத்தில் தான் போட்டியாளர்கள் உறங்குவார்களாம்.

பகலிலும் பிக்பாஸ் வீட்டில் தூங்கக்கூடாது என்ற விதி உள்ள நிலையில், இரவில் இப்படி விளக்குகளை எரிய விட்டால் எப்படி, போட்டியாளர்கள் பாவமில்லையா என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 19-07-2019, 09:27 AM



Users browsing this thread: 4 Guest(s)