19-07-2019, 09:24 AM
கடத்தப்பட்ட குழந்தை '10 மணி' நேரத்தில் மீட்பு - வீட்டு பணிப்பெண் காதலனுடன் கைது
சென்னை முகப்பேரில் 60 லட்சம் ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட மூன்றரை வயது குழந்தையை, காவல்துறையினர் 10 மணி நேரத்திற்குள் மீட்டுள்ளனர். கடத்தலில் ஈடுபட்டதாக வீட்டு பணிப்பெண்ணும், அவரின் காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஷெனாய்நகரைச் சேர்ந்த அருள்ராஜ் என்பவரின் மூன்றரை வயது மகள், முகப்பேரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். அவரின் வீட்டில் பணிபுரிந்த அம்பிகா என்ற பெண், குழந்தையை கடத்திச் சென்றது தெரியவந்தது. குழந்தையை உயிரோடு விடவேண்டும் என்றால் 60 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டுமென கடத்தல்காரர்கள் மிரட்டினர்.
இதுதொடர்பாக அமைக்கப்பட்ட 3 தனிப்படை காவலர்கள், சிசிடிவி காட்சியின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தினர். அம்பிகாவின் செல்ஃபோன் எண்ணின் விவரங்களைச் சேகரித்த தனிப்படையினர், செங்குன்றத்தைச் சேர்ந்த முகமது கலிமுல்லா என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடத்தலில் ஈடுபட்ட அம்பிகா குழந்தையோடு கோவளத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர், குழந்தையை மீட்டபின் அம்பிகாவை கைது செய்தனர். கடத்தப்பட்ட 10 மணி நேரத்திற்குள் குழந்தையை கண்டுபிடித்த காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன

first 5 lakhs viewed thread tamil