19-07-2019, 09:19 AM
[color=var(--title-color)]நீதிபதிகள் செல்லும் சாலை... மழைபோல பொழியும் மனிதக்கழிவுகள்!- சென்னை கலெக்டருக்கு நோட்டீஸ்
[color=var(--content-color)]ஆ.பழனியப்பன்[/color]
[color=var(--title-color)]சென்னையில் ரயில் மேம்பாலத்திலிருந்து மனிதக்கழிவுகள் மழை போலக் கொட்டுவதால், கீழே உள்ள சுரங்கப்பாதையைக் கடந்து செல்பவர்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகிறார்கள்.[/color][/color]
[color=var(--meta-color)]ரயில்[/color]
[color=var(--content-color)]சென்னை பாரிமுனை பகுதியில் ரயில்வே மேம்பாலம் ஒன்று உள்ளது. ரிசர்வ் வங்கிக்கும் சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகத் தலைவர் அலுவலகத்துக்கும் அருகே அமைந்துள்ள இந்தப் பாலத்துக்குக் கீழே செல்லும் சுரங்கப்பாதை வழியாக இருசக்கர வாகனங்களிலும், கார்களிலும், ஆட்டோக்களிலும் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணிக்கிறார்கள். குறிப்பாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் உட்பட பல முக்கியப் பிரமுகர்களும் தினமும் கடந்துசெல்லும் இடம் இது. ஏராளமானோர் நடந்துசெல்லும் வழியாக இது இருந்துவருகிறது.[/color]
[color=var(--content-color)]
சென்னை உயர் நீதிமன்றம்
[/color]
[color=var(--content-color)]இந்தப் பாலத்தில் ரயில் கடந்துசெல்லும் நேரத்தில், சுரங்கப்பாதையைப் பயன்படுத்துபவர்கள் மிக மோசமான ஆபத்தை எதிர்கொள்கிறார்கள். அதாவது, ரயில் பாலத்திலிருந்து சிறுநீரும், மலமும் மழைபோல மேலிருந்து பொழியும். அது கார் மீது விழும். மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் என்றால், அவர்களின் தலைமீதும் விழும். இப்படியொரு மோசமான அனுபவத்தைத் தினந்தோறும் பலர் அனுபவித்துவருகிறார்கள்.[/color]
[color=var(--content-color)]இந்த நிலையில், இந்தக் கொடுமையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்று நீதிமன்றத்தை நாடினார், வழக்கறிஞர் என்.எஸ்.சிவக்குமார். ரயில்வே மேம்பாலத்திலிருந்து மனிதக்கழிவுகள் கொட்டுவதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் என்.எஸ்.சிவக்குமார் மனுத் தாக்கல் செய்தார்.[/color]
[color=var(--content-color)]
ரயில்
[/color]
[color=var(--content-color)]அதையடுத்து, ``அந்த இடத்தில் புதிய பாலம் கட்டுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இதற்காக டெண்டர் கோரப்பட்டு, ஒப்பந்ததாரர் இறுதிசெய்யப்பட்டுவிட்டது. ஆனால், அங்கு புதிய பாலம் கட்டுவதற்கு, அந்தப் பாதையை மூட வேண்டும் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் போக்குவரத்துக் காவல் துறை ஆகியோரிடம் கோரினோம். ஆனால், கடந்த எட்டு மாதங்களாக எங்கள் கோரிக்கைக்கு எந்தப் பதிலும் தரப்படவில்லை. அதனால், பணிகளை எங்களால் மேற்கொள்ள முடியவில்லை" என்று ரயில்வே துறை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை மாவட்ட ஆட்சியரும் சென்னை காவல்துறை (போக்குவரத்து) கூடுதல் ஆணையரும் ஒருவார காலத்துக்குள் பதிலளிக்க வேண்டுமென்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.[/color]

first 5 lakhs viewed thread tamil