Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[color=var(--title-color)]`அட்ரஸ் ப்ளீஸ்... கொஞ்சம் அலர்ட்டாக இருங்கள் பெண்களே’ - மனவள ஆலோசகருக்கு நடந்த கசப்பான அனுபவம்[/color]

[color=var(--title-color)]`நான் பொதுவாக தங்க நகைகள் அணிவது இல்லை. அதனால் அன்று அசம்பாவிதங்களில் இருந்து தப்பினேன் என நினைக்கிறேன்'' என்றார் கீர்த்தன்யா.[/color]
[Image: vikatan%2F2019-07%2F3f3ddfbe-ac13-4937-a...2Ccompress][color=var(--meta-color)]கீர்த்தன்யா[/color]
[color=var(--content-color)]சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் நேற்று மதியம் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர் காரில் சென்ற பெண்ணை வழிமறித்து முகவரி கேட்பதுபோல் பேசியுள்ளார். இதையடுத்து, தனது காரை ஓரமாக நிறுத்தியவர், தனது கார் கண்ணாடியை கீழே இறக்கியுள்ளார். அந்தப்பெண்ணை நோட்டமிட்ட நபர் நகைகள் இல்லையா எனக் கடுமையான வார்த்தைகளில் திட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்தவர் அந்த நபரை பிடிக்க முற்பட்டுள்ளார். ஆனால், அந்த நபரோ கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிவிட்டார்.[/color]
[color=var(--content-color)][Image: vikatan%2F2019-07%2Fd0853ddc-9490-4264-a...2Ccompress]
இரு சக்கர வாகனம்
[/color]
[color=var(--content-color)]முகநூல் பதிவு மூலம் அந்தப்பெண் மனவள ஆலோசகர் கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி என்பது தெரியவந்தது. அவரைத் தொடர்புகொண்டு பேசினோம். ``இந்தச் சம்பவம் நேற்று மதியம் 3 மணியளவில் நடந்தது. ஓ.எம்.ஆர் சாலையில் போகும்போது பெருங்குடியிலிருந்து ஓர் இரு சக்கர வாகனம் பின்தொடர்ந்து வந்தது. நான் ஓர் உணவகம் அருகே காரை நிறுத்துவதற்காக இடதுபுறமாக திருப்பினேன். இருசக்கர வாகனத்தில் வந்த நபர் எனது கார் அருகே வந்தார். சாலைகளில் வழிமாறிச் செல்பவர்கள் முகவரி கேட்பார்கள் அதுபோலத்தான் என்னிடம் எதோ முகவரி கேட்கிறார் என்ற எண்ணத்தில் காரின் கண்ணாடியை கீழிறக்கினேன். அந்த நபர் ஏதோ காருக்குள் தேடுவதைப்போல பார்த்தார். திடீரென நகைகள் எதும் அணிந்து வரவில்லையா என ஆபாசமாகப் பேசத்தொடங்கினார். நான் பொதுவாக தங்க நகைகள் அணிவதில்லை. அதனால் அசம்பாவிதங்களில் இருந்து தப்பினேன் என நினைக்கிறேன். அப்போது நான் அந்த நபரை பிடிக்க முற்பட்டேன். ஆனால், அந்த நபர் வாகனத்தை எடுத்துக்கொண்டு வேகமாகக் கிளம்பினார். நான் சத்தமிட்டேன். யாரும் எனது சத்தத்தைக் கேட்பதாக இல்லை.[/color]
[color=var(--content-color)]எனது வாகனத்துக்கு முன்னால் வந்துகொண்டிருந்த நபரிடம் அந்த இளைஞரைப் பிடிக்குமாறு கத்தினேன். செல்போனில் பிசியாக இருந்த நபருக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. என்னையும் அந்த நபரையும் பார்த்து கடந்து சென்றுவிட்டார். இதையடுத்து, அருகில் இருந்த கடைக்குச் சென்று சிசிடிவி கேமரா பதிவை வாங்கினேன். மழையின் காரணமாக சிசிடிவி கேமரா முழுவதும் தூசு படிந்திருந்தது. இதனால் அந்த வீடியோவில் இரு சக்கர வாகனத்தின் பதிவு எண் சரியாகத் தெரியவில்லை. வாகன எண் தெரியாததால் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை. மற்றவர்களுக்கு இதுபோல நடப்பது தெரிய வேண்டும் என்பதால் முகநூலில் பதிவிட்டேன்.[/color]

[color=var(--content-color)]வெளியில் செல்லும் பெண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். குறிப்பாக தங்க நகைகளை அணிந்துகொண்டு வாகனத்தை இயக்கும் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். இதுபோன்ற சூழலை பெண்கள் எதிர்கொள்ளும்போது பொதுமக்கள் உதவ முன்வர வேண்டும். உங்கள் சகோதரியோ அல்லது தாயோ இதுபோன்ற சூழலில் சிக்கினால் நீங்கள் எப்படி செயல்படுவீர்களோ அதுபோன்று செயலாற்ற முன்வர வேண்டும். பொதுமக்களின் இந்த முயற்சி குற்றவாளிகளிடமிருந்து பெண்களைக் காப்பாற்றும். ஒருவருக்கொருவர் உதவும் கலாசாரம் தொடர வேண்டும்” என்றார்.[/color]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 19-07-2019, 09:11 AM



Users browsing this thread: 102 Guest(s)