17-07-2019, 10:42 AM
11.
என் மனம் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தது! என் திருமண நாளில் இதைவிட மிகப்பெரிய பரிசு எதுவும் எனக்கு தேவைப்பட போவதில்லை! மீண்டும் ஹரீஸை முத்தமிட்டேன்! அவன் மார்பில் சாய்ந்திருந்த படியே சொன்னேன், ஹாப்பி வெட்டிங் டே!
அவன் விலகி என்னைப் பார்த்தான்.
தாங்ஸ்டா! ஹாப்பி அனிவர்சரி! நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். இதை விட ஒரு பெஸ்ட் கிஃப்ட் எனக்கு என் வாழ்க்கைல எதுவும் இல்லை!
நான் அவனையே பார்த்தேன். நான், திருமண நாளில் இதை விட பெரிய கிஃப்ட் இருக்காது என்று நினைத்தால், அவன், வாழ்க்கைக்கே சேர்த்து யோசிக்கிறான்! நான் நினைத்த படியே, இனி அவன் எனக்காக வாழப்போகிறான். என் மகிழ்ச்சிக்காக யோசிக்கப் போகிறான். நான் பதிலுக்கு என்ன செய்யப் போகிறேன்???
பெண்ணை புரிந்து கொள்வது வேண்டுமானால் ஆணுக்கு சிரமமாக இருக்கலாம். ஆனால், ஆணைப் புரிந்து கொள்வதெல்லாம் அவ்வளவு சிரமமில்லை! அதுவும் நல்ல பண்புகளோடு இருப்பவனுக்கு, மெனக்கெட வேண்டிய அவசியமேயில்லை! பெண் புத்திசாலியாக இருந்தால், அவனை எளிதில் தன் கைப்பிடிக்குள் கொண்டுவிடுவாள்.
ஆணுக்கு ஒரு சின்ன ஈகோ இருக்கும். அதை பதம் பார்க்காவிட்டால், அவன் சுத்தமாக ஈகோ பார்க்காமல், பெண்ணின் ஆளுகைக்குள் வந்து விடுவான்! ஓரிரு முறை, இது எனக்கு பிடிக்கவில்லை, இருந்தும் உங்களுக்காக ஒத்துக் கொள்கிறேன் என்றால் போதும். கொஞ்சம் கொஞ்சமாக அவளுக்குப் பிடிக்காத விஷயங்கள், அவளைச் சுற்றி நடக்க விட மாட்டான்!
மாறாக, தொடர்ந்து நான் இப்படித்தான், எதுக்கு எனக்கு பிடிக்காததை செய்தாய் என்று பேசினால், ஆணின் ஈகோ வீறு கொண்டு விடும்! என்றாவது ஒரு நாள், எனக்காக என்ன கிழித்தாய் என்று திருப்பிக் கேட்கும்! பெண்ணின் விருப்பங்களை மதிக்க வேண்டும் என்ற எண்ணமும் அவன் மனதில் ஏற்படாது!
சின்ன வயதிலிருந்து, அன்பு காட்ட யாரும் இல்லாமல், தனியே வளர்ந்த எனக்கு ஒரு பழக்கம் இருந்தது. அது, சுற்றியுள்ள மனிதர்களை கவனிப்பது! ஒரு முறை பெற்ற தாய், தந்தையிடமே ஏமாந்தது, என்னை விழிப்படைய வைத்தது. அது, மனோரீதியாக ஒவ்வொருவரையும் அலசிப் பார்க்கும் தன்மையை எனக்கு கொடுத்திருந்தது!
அந்தத் திறமைதான், தாத்தா, மதன், இப்பொழுது ஹரீஸ் ஆகியோரின் மீதான அளவற்ற அன்பை எனக்கு ஏற்படுத்தியிருந்தது.
எவ்வளவு கம்பீரமான, புத்திசாலியான பெண்ணும், தன் மனதுக்கு பிடித்தவனின் தோள் சாயும் போது, வெறும் பெண்ணாக, கொஞ்சம் குறும்பும், குழந்தைத்தனமும், செல்லம் கொஞ்சுபவளுமாக மாறி விடுவாள்!
எவ்வளவு அன்பை மற்றவர்களுக்கு வாரியிறைத்தாளும், தன் மணவாளனுடனான தனிமையில், அவள் ரிசீவிங் சைடில் இருக்க வேண்டும் என்றுதான் இருப்பாள்!
அதனாலேயே முடிவெடுத்தேன். நான் பெரிதாக மெனக்கெட வேண்டியதில்லை. நான் இயல்பாக இருந்தால் போதும்! ஹரீஸ், என் மேல் அளவற்றக் காதலைக் கொட்டப் போகிறான்!
அதை மகிழ்வாக அனுபவிக்கப் போகிறேன்! இது அவனை ஏமாற்றும் சூழ்ச்சியல்ல! அன்பைக் கொடுத்து, அன்பை வாங்கும், மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான சாமர்த்தியம்! மியுச்சுவல் வின் வின்!
ஹரீஸையே பார்த்த படி ஏதேதோ நினைவுகளில் ஆழ்ந்த என்னை, ஹரீஸ்தான் உலுக்கினான்!
ஏய், என்னம்மா?
ப்ச்… ஒண்ணுமில்லை! சரி, கேட்கனும்னு நினைச்சே, உங்களுக்கு எல்லாம் எப்படித் தெரியும்? மதன் எப்ப மீட் பண்ணான் உங்களை?
ஹரீஸ், மதனுடன் நடந்ததை முழுதும் சொன்னான்!
பின் கடைசியாகச் சொன்னான், மதனுக்கு நாம ரெண்டு பேருமே கடமை பட்டிருக்கோம்மா! அவன் மட்டும் அன்னைக்கு உன்னை தடுத்திருக்காட்டி, இன்னிக்கு என்கிட்ட சொல்லியிருக்காட்டி….
அவன் உடல், அந்தத் தருணத்தை நினைக்கும் போதெல்லாம் நடுங்கியது! அது அவனது அன்பை வெளிப்படுத்தியது!
மெல்ல, அவன் தோள்களை தடவினேன். பின் சொன்னேன், ஆமா, அவனுக்கு கடமைப்பட்டிருக்கோம்! ஆனா, அதுக்காக, உங்களை எப்புடி அவன், அப்படியெல்லாம் பேசலாம்?
ஹரீஸின் கையைப் பிடித்துக் கொண்டு, அவன் ரூமுக்கு சென்றேன்! மிக நீண்ட நேரம் கழித்து வந்தாலும், நாங்கள் வந்த முறையிலேயே அவனுக்கு தெரிந்து விட்டது, எங்களுக்குள் எல்லாம் சரியாகி விட்டது என்று! அவனுக்கும் பயங்கர மகிழ்ச்சி!
நான் அவனுக்கு தாங்ஸ்லாம் சொல்லவேயில்லை. நேரடியாக திட்டினேன்.
டேய், நீ அவர்கிட்ட உண்மை சொன்ன, எல்லாம் சரி! அதுக்காக, எப்பிடி வேணா பேசுவியா? மாமான்னு மரியாதை இல்லை?
அவன் என்னையே சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
பூரண அன்பில் மட்டுந்தான், சிரிப்பதைப் பார்த்து, கோபம் கொள்வதும், கோபத்தைப் பார்த்து சிரிப்பதும் மகிழ்ச்சியைத் தரும்!
உனக்கு வெட்டிங் டே அன்னிக்கு, ஃபீல் பண்ணிட்டு இருந்தவளுக்கு, ஹெல்ப் பண்ணா, என்னையே திட்டுற நீ?! எல்லாம் நேரந்தான்!
டேய், நான் அதையாச் சொன்னேன்? அதுக்காக, அப்பிடியெல்லாம் பேசலாமா?
நீ என் மேல எவ்ளோ பாசம் வெச்சிருக்கன்னு இப்பதான் புரியுது!
அவன் சிரித்துக் கொண்டே சொன்னது எனக்கு குழப்பத்தைத் தந்தது!
என்னடா சொல்ற? இதுக்கும் பாசத்துக்கும் என்ன சம்பந்தம்?!
ஆமா, ஒரு பக்கம், மாமா ரொம்ப நல்லவரு, எனக்கும் அவருக்கும் பிரச்சினை வந்தா, என்னால தாங்க முடியாதுன்னு ஃபீல் பண்ற! இன்னொரு பக்கம் நீ, அவிங்க சித்தப்பா, சித்தியைப் பத்தி பேசுனாலே கடுப்பாவுவாருன்னு சொல்ற! அப்புறம் நான் எப்புடித்தான் அவர்கிட்ட போய் பிரச்சினையை சொல்றது?
அதுக்கில்லைடா, நீ அவர் என் மேல உண்மையாவே அன்பா இருக்கிறாரான்னு சந்தேகப்பட்டியோன்னு நினைச்சிட்டேன்! அது, அவருக்கு கஷ்டமா இருக்குமில்லை!
இவ்வளவு நேரம் மவுனமாக, புன்சிரிப்புடன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ஹரீஸ் சொன்னார். ஏய், ஒண்ணும் இல்ல! மதன் பண்ணது சரிதான். சொல்லப்போனா, அவனுக்கு பெரிய தாங்கஸ் சொல்லனும்! அவனுக்கு நான் ரொம்ப கடமைப்பட்டிருக்கேன்! நீ ஏன் தேவையில்லாம ஃபீல் பண்ற?!
ஆனாலும், ஹரீசின் வார்த்தைகள் எனக்கு முழு திருப்தியைத் தரவில்லை! அது மதனுக்கு புரிந்தது!
மெல்ல என் கையைப் பிடித்தான்! எந்த சமயத்திலும், அதிகம் பேசாத, உன்கிட்ட அன்பு காட்டாத, என்னையே, சரியா புரிஞ்சுகிட்டவ நீ! அப்படிப் பட்டவ, ஹரீஸோட கேரக்டரை சொல்லி, அவர் விஷயம் தெரிஞ்சா, எவ்ளோ ஃபீல் பண்ணுவாரு தெரியுமான்னு என்கிட்ட புலம்புறப்ப, அதை நான் எப்படி சந்தேகிப்பேன்?
அவிங்க சித்தப்பா, சித்தி மாதிரி நடிக்கிற, வக்கிரம் புடிச்ச ஆளுங்களை வேணா அடையளம் கண்டு பிடிக்கிரது சிரமமா இருக்கலாம்! ஆனா, நல்லவிங்களை அடையாளம் கண்டு பிடிக்கிரது ஈசி!
நான் ஏன் அப்படி பண்ணேங்கிறதுக்கு காரணம் இருக்கு! ஆனா, நான் அப்புடி பண்ணதால, எனக்கு வேறொரு உண்மையும் தெரிஞ்சுது!
நான் அவனை கேள்வியாகப் பார்த்தேன்!
இங்க பாரு, நான் பாட்டுக்கு அவர்கிட்ட போயி, உங்க சித்தப்பா, சித்தி மோசமானவங்க, கெட்டவங்க, நடிக்கிறாங்கன்னு ஆரம்பிச்சிருந்தா, அவர் ரெண்டு அறை கொடுத்திருந்தாலும் கொடுத்திருப்பாரு!
அதுனாலதான், உன் பேரைச் சொல்லி ஒரு ஷாக் கொடுத்து, கொஞ்சம் கொஞ்சமா விஷயத்தைச் சொன்னேன்! அப்பியும், ரெண்டு மூணு தடவை அடிக்க வந்தாரு என்று சிரித்தான்!
எனக்கும் அவன் சொன்னதில் இருந்த லாஜிக் புரிந்தது!
சிரித்தவன், பின் சொன்னான். ஆனா, நான் அப்புடிச் சொன்னப்பதான், அவர் உன்னை எவ்ளோ லவ் பண்றாருன்னு புரிஞ்சுது! பேசிக் கொண்டிருந்தவனின் குரல் கொஞ்சம் கொஞ்சமாக நெகிழத் தொடங்கியிருந்தது.
எனக்கும் அவர் மேல் கொஞ்சம் கோவம் இருந்தது. ஆனா, உண்மை தெரிஞ்ச பின்னாடி, உனக்காக, அவர் ஃபீல் பண்ணதைப் பார்த்து எனக்கு என்ன சொல்லறதுன்னே தெரியலை! அதுவும், நான் சரியான நேரத்துல உன்னை தடுத்தது தெரிஞ்சதும், என் கையையே ரொம்ப நேரம் புடிச்சிகிட்டாரு! அவரால நடந்ததைத் தாங்க முடியலை. நீ இத்தனை நாளா அனுபவிச்ச வேதனையை, அவர் அந்த கொஞ்ச நேரத்துலியே அனுபவிச்சிட்டாரு!
உணர்ச்சிமயத்திலேயே சொன்னான். நீங்க ரெண்டு பேரும் ரொம்ப லக்கி! சொல்லப்போனா, எனக்கு உங்களைப் பாத்தா ரொம்பப் பொறாமையா இருக்கு! ஆல் தி பெஸ்ட்! நீங்க இப்பிடியே என்னிக்கும் இருக்கனும்!
உண்மையான அன்பில் வாழ்த்தும் போது, வயது வித்தியாசம் பெரிய விஷயமில்லை!
மூன்று பேருமே நெகிழ்ந்து போயிருந்தோம்! மெல்ல நெருங்கி, அவன் கையை பிடித்தேன்!
தாங்க்ஸ்டா என்று புன்னகை கலந்த கண்ணீருடன் சொன்னேன்!
மதனின் செயலுக்கான விளக்கம், விளக்கத்தில் அப்போதும் நான் அவருக்காக ஃபீல் பண்ணதை சொன்னது எல்லாம் சேர்ந்து ஹரீஸையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்தது!
என்னை நெருங்கியவர், மதனின் தோள்களை தட்டிக் கொடுத்தவர், என்னையும், ஆறுதலாக அணைத்துக் கொண்டார்!
தாங்க்ஸ் மதன்! தாங்க்யூ சோ மச்!
ஓவர் செண்டிமெண்ட் ஆனது அவனுக்கே பிடிக்கவில்லை போலும்! என்னாது, அப்புடியே தாங்க்ஸ் சொல்லி கழண்டுக்கலாம்னு பாக்குறீங்களா? இன்னிக்கு வெட்டிங் டே க்கு ட்ரீட் லாம் கிடையாதா???
நாங்களும் நார்மலானோம்! சிரித்துக் கொண்டே, எங்க போலாம்னு சொல்லு!
எங்கியும் வேணாம், இங்கியே தடபுடலா சமையல் ரெடி பண்ணச் சொல்லியிருக்கேன். அதுக்கு முன்னாடி…
என்று சொல்லி, அவன் கப்போர்டை திறந்தவன், ஒரு கார் கீயைக் கொடுத்தான்!
என்னடா இது?
நீ அவருக்கு புடிச்ச கார், புடிச்ச கலர்ன்னு சொன்னில்ல? அதான்!
டேய், எதுக்குடா இவ்ளோ செலவுல?
என்னைப் பொறுத்தவரைக்கும், இன்னில இருந்து நீங்க வாழ்க்கையை புதுசா ஆரம்பிக்கிறீங்கன்னு நினைச்சிருக்கேன்! அதான் என் சந்தோஷத்துக்காக! இதான் சாக்குன்னு வருஷா வருஷம் இவ்ளோ பெரிய கிஃப்ட் கிடைக்கும்னு நினைக்காத, என்ன என்று பேச்சை மாற்றினான்!
நான் அவனையே பார்த்தேன்! அவனோ, எங்கள் இருவரின் கையைப் பிடித்து, எங்கள் கையில் கீயை வைத்தான். ஹரீஸ் என்னைப் பார்த்தார். நான் வாங்குங்க என்று தலையசைத்தேன்!
ஹார்ட்டி விஷஸ் டூ போத் ஆஃப் யூ! (மனமார்ந்த வாழ்த்துக்கள்!)