17-07-2019, 09:24 AM
ஆகஸ்ட் முதல் இந்தியன் 2 மீண்டும் ஆரம்பம்
லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்க 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பமான படம் இந்தியன் 2. சில நாட்கள் மட்டும் படப்பிடிப்பு நடந்து பின்னர் நிறுத்தப்பட்டது. அதன்பின் கமல்ஹாசன் தேர்தல் வேலைகளில் பிஸியானதால் படம் தேர்தலுக்குப் பின் ஆரம்பமாகும் என்றார்கள். ஆனால், படம் பற்றி பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகின. படம் கைவிடப்பட்டது என்றெல்லாம் கூட சொன்னார்கள்.
இருப்பினும் தற்போது புதிய தகவலாக படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள் என்கிறார்கள். அவர்களுக்கும் படத்தில் முக்கியமான கதாபாத்திரம்தானாம். ஆகஸ்ட் மாதம் முதல் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
படப்பிடிப்பு ஐந்தாறு மாதங்கள் தள்ளிப் போனதால் பட வெளியீடும் திட்டமிட்ட தேதியில் வெளியாகாமல் கொஞ்சம் தள்ளிப் போகும் என்கிறார்கள். 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அல்லது தீபாவளி வெளியீடா இருக்கவும் வாய்ப்புள்ளது. இல்லையெனில் 2021 பொங்கலுக்கு படம் வெளியாகலாம் என்றும் சொல்கிறார்கள். படப்பிடிப்பே எதிர்பாராமல் நின்று போனதால் வெளியீட்டை இப்போதைக்கு உறுதியாகச் சொல்ல முடியாது. படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் அது பற்றி சரியாகச் சொல்ல முடியும் என்பதே உண்மை

first 5 lakhs viewed thread tamil