Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
ஓவர் த்ரோ சர்ச்சை: நடுவர்கள் முடிவுக்கு ஐசிசி தந்த பதில்!

[Image: 1raais08_ben-stokes-tom-latham-afp_625x3...uly_19.jpg]

சூப்பர் ஓவர் டை ஆனது. அதனால் அதிக பவுண்டரி அடிப்படையில் இங்கிலாந்து உலகக் கோப்பையை வென்றது.© AFP


இங்கிலாந்து உலகக் கோப்பை இறுதிப்போட்டியை வென்றதிலிருந்து ஓவர் த்ரோ சர்ச்சை பெரிதாகி வருகிறது. பலரும் இது குறித்து ஐசிசியிடம் கேள்வி எழுப்பி வந்தனர். ஒரு ரன் கூடுதலாக வழங்கப்பட்ட சர்ச்சை பெரிதானதற்கு ஐசிசியின் விளக்கத்தை அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், நடுவர்களின் முடிவுக்கு ஐசிசி பதிலளித்துள்ளது. நடுவர்கள் முடிவில் எந்த கருத்தையும் தெரிவிப்பது கொள்கைக்கு எதிரானது என்று கூறியுள்ளது.

ஐசிசியின் செய்தி தொடர்பாளர் "கள நடுவர்களின் முடிவில் தலையிட  முடியாது. அவர்கள் ஐசிசியின் விதிமுறைகள் படியே தனது முடிவை அறிவிக்கிறார்கள்.அவர்கள் முடிவில் எந்த கருத்தையும் கூறக்கூடாது என்பதே கொள்கை முடிவு" என்று கூறினார்.
முன்னாள் நடுவர் டஃபெல் கூறும்போது, "இது நடுவர்களின் தவறு. பந்து த்ரோ செய்யப்படும் போது பேட்ச்மேன் க்ரீஸை க்ராஸ் செய்யப்படவில்லை என்றால் அவர்களுக்கு ஒரு ரன் தான் வழங்கப்பட வேண்டும்" என்று கூறியிருந்தார். 
"அப்படிப்பார்த்தால் 5 ரன்கள் தான் வழங்கியிருக்க வேண்டும் ஆறு ரன்கள் வழங்கியிருக்கக்கூடாது" என்றார். அதேபோல அதில் ரஷித் பந்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், நியூசிலாந்தின் வெற்றி தவறான அம்பரியரிங்கால் பறிபோயுள்ளது என்று கூறியுள்ளார். 
5 முறை சிறந்த நடுவருக்கான ஐசிசி விருது வென்ற டஃபெல் இந்த கருத்தை கூறியிருந்தது விவாதங்களை எழுப்பியது. டஃபெல் ஐசிசியின் 19.8ம் விதியை குறிப்பிட்டு இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
"ஃபீல்டர் பந்தை எரியும் போது பேட்ஸ் மேன் க்ரீஸை அடையவில்லை என்றால் அந்த ரன் கணக்கில் எடுத்துக்கொள்ள்படக்கூடாது என்று கூறி இங்கிலாந்துக்கு அந்த பந்தில் 5 ரன்கள்தான் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஆறு ரன்கள் வழங்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்,.
போட்டி டை ஆன நிலையில், சூப்பர் ஓவர் வழங்கப்பட்டு அதுவும் டை ஆனது.அதனால் அதிக பவுண்டரி அடிப்படையில் இங்கிலாந்து உலகக் கோப்பையை வென்றது
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: தற்போதைய செய்திகள் - by johnypowas - 17-07-2019, 09:16 AM



Users browsing this thread: 72 Guest(s)